பாரதியார்கவசம்அணியுங்கள்! – ச.நாகராஜன்

சார், கந்தஷஷ்டிகவசம்கேள்விப்பட்டிருக்கிறேன். சிவகவசம்கேள்விப்பட்டிருக்கிறேன். மஹாபாரதத்தில்வரும்இந்திரகவசம்கூடக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதுஎன்னபாரதியார்கவசம்?பாரதியார்ஒருகவசமும்பாடியதில்லையே!
தலைப்பைப்பார்த்துஇப்படிக்கேட்பதுநியாயம்தான்!
பாதுகாப்பைத்தருவதுகவசம். விஷக்கிருமிகளிடமிருந்துபாதுகாக்கஒருக்ரீம், நீரின்தீயதன்மையைப்போக்கஒருஃபில்டர்எனஇப்படிஆரம்பித்தால்நம்வாழ்க்கையில்நோய்நொடிஅண்டாமல்இருக்கஎத்தனைபாதுகாப்புமருந்துகள், சாதனங்களைஉபயோகிக்கிறோம். பிறப்பிலிருந்துஇறப்பதுவரை….. எண்ணிமாளா.
ஆனால்இன்றையசமுதாயத்தில்உளவியல்ரீதியாகவும்தீயசக்திகளின்மூளைச்சலவையிலிருந்தும்நம்மைக்காப்பாற்றிக்கொள்ளஏதாவதுகவசம்இருக்கிறதா? சரியானநோக்குடன்வீறுநடைபோட்டுநம்மையும்தேசத்தையும்முன்னேற்றவழிஉண்டா?
மனம்போனபடிஎழுதும்பத்திரிகைகள்ஒன்றுமற்றொன்றைப்பழிக்கும்.
டிவிநிகழ்ச்சிகளோபார்க்கக்கூடாதவற்றைபார்க்கக்கூடாதவயதில்பார்க்கவைக்கும்.
பாடம்சொல்லிக்கொடுக்கவைக்கும்வாத்தியார்களைநியமிக்கும்பல்கலைக்கழகமேபடுஊழலின்பட்டறையாகஇருப்பதைப்பார்த்துஅதிர்கிறோம்.
போலீஸ்லஞ்சம், அரசுநிர்வாகலஞ்சம், போக்குவரத்தில்லஞ்சம், நீதித்துறையில்லஞ்சம்என்றுஎந்தத்துறையில்உள்ளேபுகுந்தாலும்கவசமில்லாசாமான்யனைஏகப்பட்டவியாதிகள்பீடிக்கிறது.
இதைப்போக்கஏதாவதுநவீனகவசம்இருக்கிறதா! இருக்கிறது.
பாரதியார்கவசம்
அதுதான்பாரதியார்கவசம். அவர்கவசம்ஒன்றையும்தனியாகப்பாடவில்லை. அவரதுபாடல்களேகவசம்!
நம்மைஇன்றுஇருக்கும்தீயசக்திகளிடமிருந்துகாக்கும்ஒரேஅருமருந்துபாரதியார்பாடல்கள்தாம்!
எந்தத்துறையில்என்னகேள்விகள்வேண்டுமானாலும்கேளுங்கள். பாரதியார்படைப்புகளில்சரியானபதில்இருக்கும்.
இதைசைவர்கள்அஞ்செழுத்தைஓதுவதுபோல, வைணவர்கள்எட்டெழுத்தைஓதுவதுபோலபாரதீயர்கள்தினமும்ஓதிவந்தால்பாடிவந்தால், படிப்பதைநடப்பில்கடைப்பிடித்தால்அப்படிப்பட்டவர்களுக்குஎந்தவிததீயசக்தியும்ஒன்றும்செய்யமுடியாது.
ஆத்திசூடியிலிருந்துஆரம்பிக்கலாம். ஔவையாரின்ஆத்திசூடிஇல்லை. புதியஆத்திசூடியிலிருந்து!
அச்சம்தவிர்; ஆண்மைந்தவறேல்; குன்றெனநிமிர்ந்துநில்; தோல்வியிற்கலங்கேல்; தவத்தினைநிதம்புரிபணத்தினைப்பெருக்கு; பாட்டினில்அன்புசெய்!
ஜாதிகள்இல்லையடிபாப்பா, குலத்தாழ்ச்சிஉயர்ச்சிசொல்லல்பாவம்.
ஒன்றுபட்டால்உண்டுவாழ்வேநம்மில்ஒற்றுமைநீங்கிடில்அனைவர்க்கும்தாழ்வேநன்றிதுதேர்ந்திடவேண்டும்இந்தஞானம்வந்தால்பின்நமக்கெதுவேண்டும்?
எல்லாரும்ஓர்நிறைஎல்லாரும்ஓர்விலைஎல்லாரும்இந்நாட்டுமன்னர்
(சமுதாயத்தில்வாழும்வழியைக்கவசம்தருகிறதா?)
பக்திபண்ணிபிழைக்கச்சொன்னான்பலனைஎண்ணாமல்உழைக்கச்சொன்னான் – (கீதைஇருவரிகளில்கற்றுவிட்டோமா?)
அம்பிகையைச்சரண்புகுந்தால்அதிகவரம்பெறலாம்!
சக்திஅருளால்உலகில்ஏறு – ஒருசங்கடம்வந்தால்இரண்டுகூறு
சக்திதனையேசரணம்கொள்ளு – என்றும்சாவினுக்கோர்அச்சமில்லைதள்ளு
ஜயமுண்டுபயமில்லைமனமே…. பயனுண்டுபக்தியினாலே
ஜாதிமதங்களைப்பாரோம்உயர்ஜன்மம்இத்தேசத்தில்எய்தினராயின்வேதியராயினும்ஒன்றேஅன்றிவேறுகுலத்தினராயினும்ஒன்றேவந்தேமாதரம்என்போம்எங்கள்மாநிலத்தாயைவணங்குதும்என்போம்
தேமதுரத்தமிழோசைஉலகமெலாம்பரவும்வகைசெய்தல்வேண்டும்
பிறநாட்டுநல்லறிஞர்சாத்திரங்கள்தமிழ்மொழியிற்பெயர்த்தல்வேண்டும்
காதலொருவனைக்கைப்பிடித்தேயவன்காரியம்யாவிலும்கைகொடுத்துமாதர்அறங்கள்பழமையைக்காட்டிலும்மாட்சிபெறச்செய்துவாழ்வமடி. (புதுமைப்பெண்ணிவள்பேச்சுகள்கேட்டீரோ?!)
காவித்துணிவேண்டாகற்றைச்சடைவேண்டாபாவித்தல்போதும்பரமநிலைஎய்துதற்கே!
வையகம்காப்பவரேனும்சிறுவாழைப்பழக்கடைவைப்பவரேனும்பொய்யகலத்தொழில்செய்வோர்பூமியில்எங்கணும்மேலோர்!
பாதகம்செய்பவரைக்கண்டால்பயம்கொள்ளலாகாது!
பகைவனுக்கருள்வாய்நன்னெஞ்சே!
செய்தலுன்கடனே – அறம்செய்தலுன்கடனேஅதில்எய்துறும்விளைவினில்எண்ணம்வைக்காதே – (கீதையின்சுருக்கம்கற்றுவிட்டோமா?)
கவலைப்படுதலேகருநரகம்மா!
உள்ளத்தில்உண்மைஒளியுண்டாயின்வாக்கினிலேஒளியுண்டாகும்!
மொய்க்கும்கவலைப்பகைபோக்கி, முன்னோன்அருளைத்துணையாகிஎய்க்கும்நெஞ்சைவலியுறுத்திஉடம்பைஇரும்புக்கிணையாக்கிபொய்க்கும்கலியைநான்கொன்றுபூலோகத்தார்கண்முன்னேமெய்க்கும்கிருதயுகத்தினையேகொணர்வேன்தெய்வவிதிஇஃதே
ஏராளமானபாரதியாரின்முத்திரைவரிகளில்சிலவற்றைமேலேபார்த்தோம்!
பாரதநாட்டின்முன்னேற்றம், தமிழ்மொழியின்முன்னேற்றம், லஞ்சலாவண்யம்ஒழியவழி, ஹிந்து-முஸ்லீம்-கிறிஸ்தவஒற்றுமை, பெண்முன்னேற்றம்,விஞ்ஞானமுன்னேற்றம், பழையஅறங்களின்ஏற்றம் – எந்தவிஷயமென்றாலும்அதற்குதெளிவானவரையறுப்பும்வழிகாட்டுதலும்பாரதியார்கவசத்தில்உண்டு.
எத்தனைஎத்தனைபாடல்கள்; அத்தனைபிரச்சினைகளுக்கும்அதில்வழிகாட்டுதல்உண்டு!
பாரதியார்நினைவுநாளில்நித்தமும்பாரதிப்பாடல்களைப்பாடஉறுதிபூண்டுபாரதியார்கவசம்அணிவோம்; பாரையேசுவர்க்கமாக்குவோம்.

Pic Source : http://farm2.static.flickr.com/1091/5177319652_2a88b0574b.jpg
^^^^^^^^

ரகசியத்தெளிவு               சொல்லுக்குள்ஜோதிகாணுங்கள்!                 ச.நாகராஜன்

சொல்லில்இருக்குதுஅனைத்துமே

இரகசியங்களைப்பொருத்தவரையில்எல்லாமதங்களும்ஒரேமாதிரியானஅறிவுரைகளையேசொல்கின்றன. யூதம், ஹிந்துஎன்றெல்லாம்இதில்வேறுபாடுகிடையாது. ஏனெனில்அடிப்படைஉண்மைகள்சாஸ்வதமானவை!தேவிபாகவதத்தில்அம்பிகையின்முன்னர்ஆகப்பெரும்மஹரிஷிகள்வாயைப்பொத்திமௌனம்அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில்வாயைத்திறந்தால்சொல்குற்றம்வந்துவிடுமோஎன்று!

யூதமதத்தைஎடுத்துக்கொண்டால்அங்கும்சொற்களைஜாக்கிரதையாகப்பிரயோகம்செய்என்றேகூறுகிறது. அதிலும்பிரார்த்தனைபுரிவதில்சொல்லுக்குள்ளேஜோதியைக்காணுங்கள்என்கிறது!லிக்விடிம்எக்வாரிம் (தேர்ந்தெடுக்கப்பட்டஞானமுத்துக்கள்) தொகுப்பில்முக்கியமானரகசியம்சொல்லப்படுகிறதுஇப்படி:-

EACH MORNING A NEW CREATION

Take special care to guard your tongue  Before the morning prayer.

Even greeting your fellowman, we are told. Can be harmful at that hour.
A person who wakes up in the morning is  Like a new creation

Begin your day with unkind words, Or even trivial matters –

Even though you may later turn to prayer, You have not been true to your Creation

All of your words each day  Are related to one another

All of them are rooted In the first words that you speak

LIQQUTIM YEQARIM

உனதுநாவைக்காப்பதில்விசேஷகவனம்எடு. காலை பிரார்த்தனைக்கு முன்னர் உங்கள் சகமனிதருக்கு வணக்கம் செலுத்துவதுகூட,  அந்த நேரத்தில் தீமை பயக்கக்கூடும் என்று எங்களுக்கு சொல்லப்படுகிறது. காலையில்கண்விழிக்கும்ஒருமனிதன்ஒருபுதியபடைப்புபோல அன்பில்லாத வார்த்தைகளுடன்  உங்கள்நாளைஆரம்பியுங்கள், அல்லது அல்ப விஷயங்களுடன் துவங்குங்கள். பின்னால்நீங்கள்பிரார்த்தனைபுரியத்தொடங்கினாலும்கூட, உங்கள்படைப்புக்கு  நீங்கள்உண்மையானவராக இல்லை.ஒவ்வொருநாளும்உங்களின்எல்லாச்சொற்களும்ஒன்றைஒன்றுதொடர்புகொண்டிருக்கின்றன.அந்தஅனைத்துமேநீங்கள்பேசும்முதல்வார்த்தைகளைவேராகக்கொண்டிருக்கின்றன.

லிக்விடிம்எக்வாரிம்

பிரம்மாண்டமானஒருரகசியம்மிகஎளிமையாகச்சொல்லப்பட்டிருக்கிறது. ஹிந்துதத்துவத்தில் காலை எழுந்தவுடன்

“கராக்ரேவஸதேலக்ஷ்மீகரமத்யேசரஸ்வதிகரமூலேதுகோவிந்த: ப்ரபாதேகரதர்ஸனம்”

என்றுநல்லசொற்கள்மூலம்திருமகள், கலைமகள், கோவிந்தன் ஆகியோரைநமஸ்கரித்து நாளை நல்ல நாளாக்கி நமது நாளாக்குகிறோம்.ஒருநாளைக்கு 100  ஆசீர்வசனம் ஓதுங்கள். கடவுள் நம்மிடம் எதைவிரும்புகிறார்என்பதை யூதமதத்துராபிமெய்ர் (Rabbi Meir) அருமையாக விளக்கிக்கூறுகிறார். மூன்றாம்நூற்றாண்டின்முற்பகுதியில்வாழ்ந்தஇறையாளர்இவர். தால்முட்- இல்வரும்செய்யுளுக்குஇவர்அற்புதவிளக்கம்ஒன்றைத்தருகிறார்.அது Mah என்ற வார்த்தையைக் கூறுகிறது.  இதன்பொருள் ‘என்ன’ என்பதாகும். ஆனால்மெய்ரோஅந்தஉச்சரிப்பைஅதேபோன்றுஉள்ளMeah என்றுஎடுத்துக்கொள்ளவேண்டும்என்கிறார். இதன்பொருள் 100 என்பதாகும். அதாவதுகடவுள்நம்மைதினமும் 100 Blessings ஐ(100 ஆசீர்வசனங்கள்)  ஓதவேண்டும்என்றுவிரும்புகிறார்என்றார்.

தினமும்நூறுநல்லவார்த்தைகளைப்பேசும்ஒருவனுக்குஎன்றைக்கேனும்கெடுதிவிளையுமா? நிச்சயம்ஒருகெடுதியும்வராது. ரகசியங்களைஒவ்வொருமதமும்ஒவ்வொருவிதமாகச்சொல்கிறது. அனைத்தும்பொருள்பொதிந்தவை.சொல்ஒன்றுவேண்டும்.

மஹாகவிபாரதியார்பாடியசொல்என்றபாடல்அற்புதமானபாடல்.

சொல்ஒன்றுவேண்டும்தேவசக்திகளை

நம்முள்ளேநிலைபெறச்செய்யும்சொல்வேண்டும் மின்னல்அனையதிறல்ஓங்குமே – உயிர்வெள்ளம்கடை

அடங்கிப்பாயுமேதின்னும்பொருள்அமுதம்ஆகுமே

இங்குசெய்கை அதனில்வெற்றிஏறுமே. என்றுசொல்லின்பெருமைகூறும்அவரதுபாடலைமுழுவதுமாகப்படிக்கும்போதுயூதர்களின்வேதம்கூறும்சொல்லுக்குள்ஜோதிகாணும்அனுபவம்கைகூடும், இல்லையா!பேசுகின்ற வார்த்தைகள்பலவற்றை நம்மிடம்அன்றாடம்சேர்க்கின்றன.இவற்றில்நாளைத்துவக்கும்போதுபேசுபவைஅன்றையபோக்கைஉருவாக்குகின்றன. ஆகவேபேசுவதைச்சரியாகப்பேசு; சரியான சொற்களைத்தேர்ந்தெடு என்பதேஅறநூல்களின்அறிவுரை.இதைஒருசோதனையாகக்கூடச்செய்துபார்க்கலாம்; விளைவுகள்பிரம்மாண்டமானஅளவில்நலம்பயப்பதைக்கண்டுநாமேபிரமித்துவிடுவோம்!

Pic Sorce : https://qph.ec.quoracdn.net/main-qimg-bf80bcdc6cea05f84075e10654ea19d2-c

 

*****************

 

 

இசை என்னும் இன்ப மருந்து! ——— ச.நாகராஜன்

முக்திக்கு வழி காட்டும் இசை
இசை பட வாழும் மக்களைக் கொண்டிருக்கும் பாரத நாட்டை இசை நாடு என்றே கூற வேண்டும்!
ஸ ரி க ம ப த நி என்ற ஏழு ஸ்வரங்களுக்குள் இறைவனைக் காணலாம் என்றும் அவனை அடைய முக்திக்கு நாத வழியே எளிய வழி என்று நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். ஏழு ஸ்வரங்களும் ஏழு சக்கரங்களுக்கு உரித்தானவை என்பதோடு இதன் மூலம் முக்தி அடைய முடியும் என்பது நாத யோகிகளின் சித்தாந்தம்!

நல்ல மனநிலைக்கு நாடுக இசையை
அது ஒரு புறமிருக்க இவ்வுலக வாழ்க்கைத் துன்பங்களுக்கும் நோய்களுக்கும் இசை ஒரு இன்ப மருந்தாக இருப்பதை விஞ்ஞான உலகம் இன்று கண்டு அதிசயிக்கிறது.
நாளுக்கு நாள் நடந்து வரும் ஆராய்ச்சிகளின் அற்புத முடிவுகள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன!
நம்முடைய மூளை அலைகளின் அதிர்வெண்கள் நமது மனநிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக நீங்கள் விழித்து எச்சரிக்கையாக இருக்கும் போது மூளை அலைகள் பீட்டா தொடர் வரிசை அதிர்வெண்களில் உள்ளன. பகல் கனவு காணும் அரை தியான நிலையில் இவை ஆல்பா தொடர்வரிசை அதிர்வெண்களில் உள்ளன. விஞ்ஞானிகள் இப்போது பெயர் சூட்டியுள்ள பைனரல் பீட்ஸ் (Binaural beats) இசைக்குள் பொதிந்து உள்ளன. ஆராய்ச்சிகளின் மூலமாக சில விதமான ராக, தாளங்களைக் கேட்கும் போது மூளை மிக ஓய்வான நிலையைப் பெறுவதை விஞ்ஞானிகள் இப்போது உறுதிப்படுத்தி உள்ளனர். 10 ஹெர்ட்ஸ் அதிர்வெண் இருந்தால் போதும், மூளை அமைதியாக இருக்கிறது! இசை தரும் இந்த அதிர்வெண் ஒரு மாமருந்து என்றால் இந்த வேக யுகத்தில் அது மிகையல்ல! இந்த இசையையே தொடர்ந்து கேட்டால், பயின்றால் அது அடுத்த உயர்ந்த நிலையான ஆல்பா நிலைக்கு உயர்த்தி விடுகிறது.
உணர்வுகளின் நிலைகளைக் கீழ்க்கண்டவாறு உடனடியாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்!
பீட்டா (15 முதல் 30 ஹெர்ட்ஸ் வரை) கண்கள் திறந்த விழிப்பு நிலையில் உள்ள நிலை இது.
ஆல்பா (8 முதல் 14 ஹெர்ட்ஸ் வரை) ஓய்வான நிலை கண்களை மூடி சாந்தமாக இருக்கும் நிலை இது!
தீட்டா ( 4 முதல் 8 ஹெர்ட்ஸ் வரை) தூக்கத்தின் ஆரம்ப நிலை, குழந்தைகளின் இளம் தூக்கம் எனலாம்.
டெல்டா (4க்கு கீழ்) ஆழ்ந்த உறக்க நிலை.
தியானம் மூலமாக இப்போது நாம் பெறுவது ஆல்பா மற்றும் தீட்டா நிலை தான்.
இந்த நிலையைத் தான் இசையும் வழங்குகிறது!

ஓம்கார்நாத் தாகூரும் முஸோலினியும்
பிரபல ஹிந்துஸ்தானி இசை விற்பன்னரான ஓம்கார்நாத் தாகூர் (1897-1967) தனது அரிய இசையால் கல்லையையும் கனிய வைப்பவர். 1933ல் ப்ளாரன்ஸில் நடந்த ஒரு இசை விழாவில் பங்கேற்க அவர் சென்றிருந்த போது சர்வாதிகாரி முஸோலினி அவரை அழைத்தார். கொடிய தூக்கமின்மை எனப்படும் இன்சோம்னியா வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த முஸோலினி முன்னால் பூரியா ராகத்தை அவர் இசைக்கவே அரை மணி நேரத்தில் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றார் முஸோலினி. அசந்து போன அவர் இசை நுணுக்கங்களை ஓம்கார் நாத்திடம் கேட்டு அறிந்தார். ராமசரித மானஸத்தை 25 வருடங்கள் தினமும் ஒதிய இசைவாணரான இவருக்கு பத்ம ஸ்ரீ பட்டம் அளித்ததோடு இவர் மறைவிற்குப் பின்னர் இவருக்கு தபால் தலையும் வெளியிட்டது நமது இந்திய அரசு.
மகாத்மா காந்திஜி ஒரு முறை என்னுடைய பல பிரசங்கங்கள் சாதிக்க முடியாததை ஓம்கார்நாத்தின் ஒரு இசையே சாதித்து விடும் என்று பாராட்டினார்.

நோய் தீர்க்கும் மாமருந்து
சிகாகோவில் உள்ள டாக்டர் டி.ப்ரைன் சங்கின் பிரமாதமான த்வனியை வைத்துப் பல நோயாளிகளைக் குணப்படுத்தி உள்ளார்.
கர்நாடக இசையில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு சக்தி உண்டு!
ஹிந்தோளத்திற்கு மூளையின் ஞாபகசக்தியைக் கூர்மையாக்கும் சக்தி உண்டு. வீர ரசம் வேண்டுமா, அதற்கும் ஹிந்தோளம் தான்!
உடனடி சுறுசுறுப்புக்கு நாட வேண்டிய ராகம் பைரவி!
இரத்தக் கொதிப்பை அடக்க அசாவேரி உதவும்.
தலைவலி நீங்க சாரங்கா, வாத நோய் தீர தர்பாரி, ரத்த அழுத்தம் குறையச் செய்து அமைதி பெற ஆனந்த பைரவி என இப்படி பட்டியல் நீளுகிறது.
காலையில் பூபாளம், பகலில் மத்யமாவதி, மாலையில் வசந்தா என்று நமது முன்னோர்கள் இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன நேரத்திற்கு இன்ன இன்ன மனநிலைக்கு உகந்த ராகங்கள் இவை எனப் பெரிய பட்டியலே இட்டுள்ளனர்.
இது ஒரு புறமிருக்க பல்லாயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களில் கூட அழகிய ராகங்கள் பொதிந்து நமக்கு வேண்டிய நல்ல மன நிலைகளைத் தருவதை உணர்ந்து அனுபவிக்கலாம்.
தினமும் சில நிமிடங்கள் இசைப் பயணம் வழியே தியான நிலை எய்தி நமது நோய்களைப் போக்கி வேக யுகத் தொல்லைகளை நம் எல்லையை விட்டு விரட்டலாமே!

Pic Source : http://3.bp.blogspot.com/-9DHxh9xayO8/TgZUhBGxM2I/AAAAAAAADSo/QXRxxyMuKRk/s1600/33ECX3301_front_ed.jpg

***********

சின்னச் சின்ன செயல்கள்!
====================
ச.நாகராஜன்
சின்னச் சின்ன செயல்கள் தான்! நாம் அறிந்தோ அறியாமலோ செய்வது பிறரை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதை நாம் சிந்திப்பதே இல்லை; சில சமயம் அறிவது கூட இல்லை!உதாரணத்திற்கு சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஒரு சம்பவம்:-

பெங்களூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு நான்கு வயது குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஒரு சின்ன ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது. இது ஒரு மைனர் ஆபரேஷன் தான்! குழந்தையின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லாத ஒன்று தான்! ஆனால் நடந்தது என்ன?ஆபரேஷன் ஆரம்பித்தவுடன் குழந்தையை லை•ப் சப்போர்டிங் அமைப்பில் இணைத்தனர். ஆபரேஷன் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் பாதியில் லைஃப் சப்போர்டிங் அமைப்பு செயலிழந்து நின்றுவிட்டது. விளைவு- குழந்தை இறந்து போனது.
இதன் காரணம் என்ன? யாரோ ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியில் தனது செல் போனில் பேச ஆரம்பித்து விட்டார். போனின் ஃப்ரீகுவென்சியால் லைஃப் சப்போர்டிங் அமைப்பு பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டது.
என்ன நடந்தது என்பது யாருக்குமே உடனடியாகத் தெரியாது! செல் போன் நபர் ஓடியே போய்விட்டார். அவரைப் பிடிக்கவும் முடியவில்லை.பிடித்தாலும் பயன் இல்லை. அரிய குழந்தையின் உயிர் போனது போனது தான்!

சின்ன அறிவுரை தான்:- செல் போனை விமானங்களுக்கு அருகேயோ பெட்ரோல் பங்க்-களிலோ, ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டர் அருகிலோ உபயோகிக்காதீர்கள் என்பது சின்ன அறிவுரை தான்!
ஆனால் செல் போனை இயக்கினால் அது ஒரு விமானத்தையே முடக்கி ஏராளமான உயிர்களை பலி வாங்கலாம். பெட்ரோல் பங்கில் தீ பிடிக்க வைக்கலாம்.ஆபரேஷன் தியேட்டரில் அரிய உயிரைப் போக்கி விடலாம்.
மனித உயிர்கள் மீது கருணை கொள்ளுங்கள்.
சின்ன விஷயம் தானே, இதனால் என்ன ஆகி விடப் போகிறது என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.பாதிப்புக்கு உள்ளாகப் போவது நம்மவராகவே கூட இருக்கலாம். யாருக்கும் தீங்கு வராமல் காக்க செல்போனை நமக்கு உதவி செய்யும் உபகரணமாக மட்டும் பயன்படுத்துங்கள்!
இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். இதுவும் ஒரு சின்ன சம்பவம் தான்!
வேகமாகக் காரில் சென்று கொண்டிருந்தார் அந்த கனவான். அவருக்கு முன்னால் இன்னும் படுவேகத்தில் கார்கள் போய்க் கொண்டிருந்தன.திடீரென்று அவர் கார் மீது ஒரு பெரிய கல் வந்து விழுந்தது. அதிர்ந்து போனவர் அப்படியே காரை நிறுத்தி கல்லை எறிந்தது யார் என்று பார்த்தார். ஒரு சின்னப் பையன்!
வேகமாக ஆத்திரத்துடன் அவனை அணுகிய கனவான், “ ஏன், கல்லை விட்டு எறிந்தாய். காரின் கதவு நசுங்கி விட்டதே! எவ்வளவு செலவாகும் தெரியுமா அதை ரிப்பேர் செய்ய?” என்று கத்தினார்.
கண்களில் நீர் வழிய மெல்லிய குரலில் அந்தப் பையன் கெஞ்சினான்:”
தெரியும், சார்! என்னை மன்னித்து விடுங்கள். உங்களை நிறுத்த வேறு வழி தெரியவில்லை. அதோ பாருங்கள். வீல் சேரில் ஊனமுற்ற என் அண்ணன் விழுந்து கிடக்கிறான் தலை குப்புற. நான் சிறு பையன். என்னால் வீல்சேரை தனியாக நிமிர்த்த முடியவில்லை. கையைக் காட்டினால் யாரும் காரை நிறுத்த மாட்டேன் என்கிறார்கள். அதனால் தான் இப்படிச் செய்ய நேர்ந்தது! மன்னித்து விடுங்கள். என் அண்ணனைத் தூக்குங்கள்; வீல் சேரை சரியாக நிறுத்துகிறீர்களா?”
கனவான் அதிர்ந்து போனார். வேகமாக வீல்சேரில் விழுந்து கிடந்திருந்த அந்தப் பையனின் அண்ணனை எடுத்து விட்டார். வீல் சேரை சரியாக நிமிர்த்தினார். உடனடியாகத் தன் காரிலிருந்து முதலுதவி சாதனம் மூலமாக அந்தப் பையனின் அண்ணனின் சிறு காயங்களுக்கு முதலுதவி செய்தார்.
“உன் அண்ணன் இனி ஆபத்திலிருந்து மீண்டு விட்டான். அடியும் பலமாக இல்லை; வீட்டிற்கு கொண்டு விடவா?” – கனவானின் கனிவான பேச்சுக்கு சிறு பையன், “வேண்டாம், உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நீங்கள் செய்த உதவி பெரிது. அருகில் உள்ள வீட்டுக்கு நானே போய்விடுவேன். இன்று வழக்கத்திற்கு மாறாக இப்படி நடந்து விட்டது, தேங்க்ஸ்” என்றான்.
கனவான் தன் காரில் மீண்டும் பயணித்தார். ஆனால் அவர் தன் காரில் விழுந்த சொட்டையை ரிப்பேரே செய்யவில்லை. தனக்கு அதை ஒரு நினைவூட்டியாக வைத்துக் கொண்டார்.அவசரமான யுகத்தில் யாரும் யாரையுமே கவனிப்பதில்லை; பறந்து கொண்டே இருக்கிறோம்- பார்வையை எங்கோ வைத்துக் கொண்டு.
அருகில் உள்ள சின்னத் தேவைகளைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சின்ன சின்ன உதவிகளில் கவனம் வைக்க வேண்டும் என்பதற்காக தனது காரின் சொட்டையை அவர் அப்படியே வைத்திருந்தார்.
நினைவிருக்கட்டும், சிறிய செயல்கள் தான்! அதன் விளைவைக் கவனித்து பாஸிடிவாக செயல்படுங்கள்!

Pic Source : http://jpupdates.com/wp-content/uploads/2014/10/life-support-machine.jpg

^^^^^^^^^^^^^^^^^^^

நெருக்கடியான நேரத்தில் பிரச்சனையை எதிர்த்து நிற்க வீரம் தேவையா? விவேகம் தேவையா?

– முகமது இலியாஸ்

எதிரிப்படைகள் கோட்டையைத் தகர்த்து விட்டு உள்ளே நுழைந்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் வர அதைக் கேட்ட கோட்டைத் தளபதி மிகவும் ஆவேசம் அடைந்தார். அப்பபொழுது அவரது மனைவி மிகவும் பயங்கரமான செய்தி ஒன்று எனக்கு கிடைத்துள்ளது. அச்செய்தி எதிரிப் படைகள் உள்ளே வருகிற செய்தியைவிட மிகப் பயங்கரமான செய்தி என்றாள். என்ன? என்றார் தளபதி.

நீங்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதை உங்கள் முகம் காட்டும் செய்திதான் அது என்றாள். ஆபத்தான நேரத்தில் தைரியத்தை இழப்பதை விடப் பயங்கரமானது எதாவது உள்ளதா? பயத்தால் வீரம் போன பிறகு விவேகம் எவ்வாறு வேலை செய்யும்? நெருக்கடி யான நேரத்தில் மனம் தளர்ந்தால் உன் பலம்குன்றிவிடும் என்று பைபிள் கூறுகிறது. கோபம் கொண்டு அரிவாளை எடுத்து ஒருவரைக்கொலை செய்வதையே வீரமாகப் பலரும் கருதுகிறார்கள். மாள வைப்பது வீரமல்ல வாழ வைப்பது தான் வீரம் என்பது மன உறுதியில் இருக்க வேண்டுமே தவிர உடல் உறுதியில் அல்ல.

உடல்வலிமை உள்ளவர்களைத் தைரிய மானவர்கள் என்று கருதி அவர்களுக்குப் பயப்படும் நிலை இருக்கிறது. மக்களில் பலரும் பாதுகாப்பிற்காக உடல் வலிமை உள்ளவர்களைச் சார்ந்தே உள்ளனர். ஆனால் மனதளவில் தைரியமானவர்களே உண்மையான தைரியசாலிகள். அண்ணல் காந்திஅடிகளையும், தந்தை பெரியாரையும் இதற்குச்சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அஹிம்சையே பலம் என்ற கருத்தின்படி காந்தியின் பின்னால் சென்ற மக்கள்தான் சுதந்திரத்தைக் கண்டார்கள். தனி ஆளாகப் பகுத்தறிவுப் பாடம் போதித்த பெரியாரின் அஞ்சாமைத் தன்மையில் ஒதுங்கிய பல திராவிடத் தலைவர்களால் தான் தமிழகத்தில் இன்று பெருமளவு மூட நம்பிக்கை ஒழிந்துள்ளன. ஆகவே தன்னை அண்டியவர்களுக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்புத்தரும் இத்தகையவர்கள் தைரியமானவர்கள் ஆவர். சமுதாயக்கேடுகள் அழிக்கப்பட்டு நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதி நிலைபெற வேண்டுமானால் மன உறுதி கொண்ட மனிதனால் மட்டுமே முடியும்.

உதாரணமாகத் தவறு செய்யும் மாணவரைத் தண்டிக்கும் ஆசிரியர், சமுதாயக் குற்றவாளிகளைக் கண்டறியும் காவல் துறையினர், குற்றம் செய்தவதைத் தண்டித்து நல்வழிப்படுத்தும் நீதி மன்றத்தார்,அயல் நாட்டின் அட்டுழியங்களை அழிக்கவல்ல போர் வீரர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஆட்சியாளர்கள், அனைவரும் தங்கள் நடை உடை பாவனைகளால், பேச்சுத் திறனால் பிறருக்குப் பயத்தைத்தரக் கூடியவர்களாக வாழ்தல் வேண்டும். கோலெடுத்தால் குரங்காடும் என்ற பழமொழிக்கு ஏற்பப் பிறருக்குப் பயத்தைத் தரத்தக்க நிலையில் வாழும் மன உறுதி பூண்ட தைரியமான மனிதனால் மட்டுமே நாடு தன்னிலை பெறும். எனவே நல்ல காரியங்களுக்காகப் பிறருக்குப் பயத்தைத் தரக் கூடிய மனஉறுதி கொண்ட மனிதரே தைரியமான மனிதராவர்.

1904‡1905ல் ரஷ்யாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே பயங்கரமான போர் நடந்து கொண்டு இருந்தது. போரில் ஒரு ஜப்பானியக் குடிமகளின் குடும்பத்திலுள்ள அனைவரும் இறந்து விட்டார்கள். மீதியிருந்த அவள் குடும்பத்தின் கடைசி வாரிசான மகனும் இறந்துவிட்டான். இச்செய்தி அவளுக்கு வந்ததும் ஓ வென்று ஆழ ஆரம்பித்தாள். அப்பொழுது அருகிலிருந்தவர்கள், அம்மா உங்களது கணவன், நீங்கள் பெற்ற மற்ற பிள்ளைகள் யாவரும் போரில் இறந்த செய்தி வந்தபொழுது அழாத நீங்கள் இந்தப்பையன் இறந்துவிட்டான் என்ற செய்தி அறிந்ததும் இவ்வாறு அழுகிறீர்களே! இவன் மேல்தான் அதிக பாசமா? என்று கேட்டார்கள். அதற்கு அவள் அவ்வாறு ஒன்றும் இல்லை. இதுவரை போரில் அனைவரும் இறந்த போது அடுத்தடுத்து அனுப்ப ஆள் உள்ளது எனத்தைரியமாக இருந்தேன். இப்பொழுது இவனுக்குப் பிறகு போருக்கு அனுப்பப் பிள்ளைகள் இல்லை, மற்றொரு பிள்ளையைப் பெற்றெடுக்க எனக்கு வயதும் இல்லையே என்பதை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் என்று கூறினாள். இப்படி ஒரு வீரத் தாயா என்று அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சகட்ட நிகழ்ச்சி தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் 1919ம் வருடம், ஏப்ரல் 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்துக்கள், முஸ்ஸீம்கள், சீக்கியர்கள் என இன வேறுபாடின்றி மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்நிய ஆட்சிக்கு எதிராகக்குமுறி எழுந்தனர். ஆங்கிலேயர்கள் தான் ஆளத் தெரிந்தவர்கள் என ஆணவம் கொண்ட ஜெனரல் ஓ டயர் என்ற கொடியவன் இராணுவ வீரர்களிடம் சுடு என உத்தரவிட்டான். சுமார் 600 ராணுவ வீரர்கள் மக்களைக் காக்கா, குருவிகளைச் சுடுவதைப் போன்று சுட்டுத் தள்ளினர். சுமார் 600 பிணங்கள் கீழே சாய, 2000க்கும் மேற்பட்டோர் காயத்துடன் குற்றுயிராய் உருண்டனர்.

உயிருக்குப்பயந்து முண்டியடித்து ஓடிய ஆயிரக்கணக்கானப் பொது மக்கள் ஜாலியன் வாலாபாக் தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து உயிரைவிட்ட போது அந்த இடிபாட்டிற்குள் அதிர்ஷ்டவசமாக சீக்கிய இனத்தைச் சார்ந்த 4 மாத கர்ப்பிணி உயிர் தப்பினாள். அவள் கண் எதிரிலேயே கணவனும், மற்றவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பிறகு அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.அக்குழந்தையை 25வருடங்கள் வீரமூட்டி வளர்த்தாள் அந்தத்தாய். அதற்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. ஜெனரல் ஓ டயர் ஓய்வு பெற்று இங்கிலாந்து சென்றார்.

அந்தச் சீக்கிய பெண்மணி தன் மகனை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தாள், எதற்காக? ஒய்விலே இருந்த ஜெனரல் ஓ டயரைப் பழிவாங்குவதற்காக, தன்னுடையத் தாயினுடையஊக்கத்தின் பிரகாரம் அந்த இளைஞன்ஜெனரல் ஓ டயரை வீட்டில் ஈசிச்சேரில் சாய்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது சுட்டுக் கொன்றான். இது ஒரு சரித்திர நிகழ்ச்சி.சினிமா மாதிரி ஒருவன் 10 பேரை அடிப்பது சாத்தியமா? 100 சதவீதம் சாத்தியம் என்று ஒரு விஞ்ஞானத் தகவல் சொல்லுகிறது. நமக்குக் கோபமும் ஆத்திரமும் வருகின்ற போது, நம்முடைய உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து உடலின் இயக்கத்தில் புதிய சக்தியை ஏற்படுத்துகிறது.
அந்தச் சந்தர்ப்பங்களில் மனிதன் தன்னுடைய சக்திக்கு மீறிய செயல்களைச் செய்வான். 10 மனிதர்களின் பலத்தை அவன் பெற்று விடுகிறான். இரத்த ஓட்டத்தில் இந்தச் சக்தியை விரும்பும் போது நம்மால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்று அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தேவை அக்கறை, உற்சாகம், ஆவேசம், மகிழ்ச்சி தூண்டல், மன எழுச்சி ஆகியவை.
யுத்த களத்திலிருந்து திரும்பிய சிப்பாய் ஒருவன் கடைவீதியில் நின்று கொண்டு தன் வீரப்பிரதாபங்களை விவரித்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் பலர் நின்று அவன் சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஒரு தடவை நான் யுத்த களத்தில் தனியாக மாட்டிக் கொண்டேன். அப்பொழுது என்னை நோக்கி எதிரி நாட்டுச் சிப்பாய்கள் இரண்டு பேர் வந்தனர். நான் உடை வாளினால் அவர்கள் இரண்டு பேருடைய தலைகளையும், ஒரே வீச்சில் வெட்டிச் சாய்த்து விட்டேன் என்றார் அந்தச் சிப்பாய்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த முல்லா, நானும் யுத்த களத்தில் இதற்கு மேல் பல சாகசங்களைச் செய்திருக்கிறேன் என்றார். அப்படியா, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் என்று கூட்டத்தினர் முல்லாவைப் பார்த்துக் கேட்டனர். ஒரு தடவை நான் யுத்த களத்தில் இருந்தேன். எதிரி நாட்டு வீரன் ஒருவன் என்னிடம் மாட்டிக் கொண்டான். உடனே என் உடைவாளினால் அவனுடைய இரண்டு கால்களையும் வெட்டி விட்டேன் என்றார் முல்லா. அப்படியா என்றான் ஒருவன். உடனே மற்றொருவன் முல்லாவைப் பார்த்து, ஏன் முல்லா நீங்கள் அந்த வீரனின் தலையை வெட்டாமல் கால்களை வெட்டினீர்கள்? என்று கேட்டான்.
நான் என்ன செய்ய முடியும், எவனோ ஒருத்தன் எனக்கு முன்னால், அவன் தலையை வெட்டிட்டுப் போய் விட்டானே, எனவேதான் நான் அவன் கால்களை வெட்டினேன் என்றார் வீராதி வீர்ரன முல்லா.
பயில்வானைப் போல் நல்ல உடல் அமைப்புக் கொண்ட ஒருவர் உணவகத்தில் போய் வேலை கேட்டார், கல்லாவில் இருந்தவர், என்ன வேலை தெரியும்? என்று கேட்டார். சாப்பிட்டுவிட்டு யாராவது காசு கொடுக்காமல் போனால் அடித்து உதைத்து, வசூல் செய்வேன் என்றார் பயில்வான்.

அப்போது உள்ளே இருந்த ஒருவர் கல்லாப் பெட்டியைத் தாண்டி வெளியே போனார். பயில்வான் ஓடிப் போய் அந்த ஆளை அடித்து, நொறுக்கிக் கீழே தள்ளிவிட்டு மீண்டும் கல்லாவுக்கு ஒடிவந்து, இப்படித்தான் அடித்து வசூல் செய்வேன், வேலை தருகிறீர்களா? என்றார். முதலாளிதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார் கல்லாவில் இருந்தவர்.முதலாளி எங்கே? என்றான், வேலை கேட்டு வந்தவன். இப்போது நீ அடித்து உதைத்தாயே அவர்தான் முதலாளி என்று பதில் வந்தது.
ஆயிரம் பேர்களை வென்றவனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவன் தான் வீரன், என்று புத்தர் உபதேசித்தார்.தைரியமே பிறவிக் குணமாய் அமைந்து உள்ள ஒருவன், எவ்வளவு கேவலமான நிலையை அடைந்தாலும், அந்த தைரிய குணத்தை மாத்திரம் இழக்கமாட்டான், நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் ஜவாலை ஒருகாலும் கீழ்நோக்கி எரிவதில்லை.
நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற மன உறுதிதான் வீரம், அந்த வீரத்தை விவேகத்துடன் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். நல்ல பலசாலிகள், எதிரிகளைத் தாக்காமல் மிரட்டல் மூலமாகவே தவறு செய்பவர் களைத் திருத்திவிடுவார்கள்.

பட உதவி : https://michaelhyatt.com/wp-content/uploads/2012/12/iStock_000015843759Small.jpg

உத்வேகமூட்டும் கதைத் தொடரில் இன்னும் ஒரு கதை! –  ச.நாகராஜன்

பல ஆண்டுகளுக்கு முன்னால் இத்தாலியில் ஒரு சிறிய நகரில் நடந்த சம்பவம் இது.

ஒரு வியாபாரி லேவாதேவிக்காரர் ஒருவரிடம் பெரிய தொகை ஒன்றைத் தன் வணிகத்திற்காகக் கடன் வாங்கி இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது வியாபாரம் பெரும் நஷ்டமடைந்து வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் போனது. அவருக்கு அழகிய மகள் ஒருத்தி உண்டு. அவள் புத்திசாலியும் கூட.

கடன் கொடுத்த லேவாதேவிக்காரருக்கு வியாபாரியின் அழகிய மகளின் மீது ஒரு கண். எப்படியாவது அவளை  மனைவியாக அடைய அவர் திட்டம் தீட்டினார்.

வியாபாரியிடம் வந்தார்.

“இனியும் கடன் தொகையைப் பெறாமல் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஒன்று கடன் தொகையைத் திருப்பித் தாருங்கள்.அல்லது உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுங்கள். அப்படித் திருமணம் செய்து  கொடுத்து விட்டால் கடன் தொகையைக் கேட்கவே  மாட்டேன். என்ன சொல்கிறீர்கள்?”

லேவாதேவிக்காரரின் இந்தப் பேச்சைக் கேட்டவுடன் வியாபாரியும் அவரது மகளும் திடுக்கிட்டனர்.

லேவாதேவிக்காரர் அவரது மகளின் அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ள ஒரு வழியைச் சொன்னார்.

ஒரு பையில் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றும் வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றும் போடப்படும்.அதில் கையை விட்டு ஏதேனும் ஒன்றை அவரது மகள் எடுக்க வேண்டும். கறுப்பு நிறக் கூழாங்கல் கையில் வந்தது என்றால் லேவாதேவிக்காரரின் மனைவியாக அவள் ஆகி விடுவாள். கடன் தொகையும் தள்ளுபடியாகி விடும். வெள்ளை நிறக் கூழாங்கல்லை அவள் எடுத்தாலோ அவள் அவரை மணந்து  கொள்ள வேண்டாம். ஆனாலும் அப்போதும் வியாபாரியின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். ஆனால் அவள் எந்த ஒரு கல்லையும் எடுக்க மறுத்து விட்டால் அவளது தந்தையார் போலீஸ் வசம் ஒப்புவிக்கப் படுவார்.

அவர்கள் ஒரு கூழாங்கற்கள் நிறைந்த ஒரு நடைபாதை வழியே சென்று கொண்டிருந்தனர். திடீரென்று குனிந்த லேவாதேவிக்காரர் இரு கற்களை எடுத்தார்.

வியாபாரியின் மகளின் கூரிய கண்கள் அவர் கைகளைக் கவனித்தன. அவர் எடுத்தது இரண்டுமே கறுப்பு நிறக் கூழாங்கற்கள்.

அவரது சதித்திட்டத்தை மகள் நன்கு புரிந்து கொண்டாள்.

இப்போது என்ன செய்வது?

லேவாதேவிக்காரர் மகளை நோக்கிக் கூறினார்: “பைக்குள் இருக்கும் கற்களில் ஏதேனும் ஒன்றை எடு!”

மகள் பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்தாள்.

அதைத் திறந்து காண்பிக்கும் முன்னர் தானாக அது விழுவது போல நழுவ விட்டாள்.

அந்தக் கல் கூழாங்கற்களின் குவியலில் விழுந்தது.

“அடடா” என்று அலறிய அந்தப் பெண், “அதனால் என்ன, பரவாயில்லை. பைக்குள் இருக்கும் கல் எது என்று பார்த்து விட்டால் நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்து விடுமே” என்றாள்.

உள்ளே இருந்தது கறுப்பு நிறக் கல். அப்படியானால் அவள் எடுத்தது வெள்ளை நிறக் கல்லாகத் தானே இருக்க வேண்டும்.

 

லேவாதேவிக்காரர் தலை குனிந்தவாறே அங்கிருந்து அகன்றார்.

 

சில சமயம் மாற்றி யோசிக்க வேண்டும். அதுவும் ஒரு கணத்தில் யோசித்து சரியாக முடிவை எடுக்க வேண்டும்.

உலகில் சாமர்த்தியமாக வாழும் வழி இது தான்!

Pic Source : www.chinesepebble.com/pic/201071323471662959.jpg

புத்தர் வழி அமேஸான் விளையாட்டு!

 s-nagarajan

ச.நாகராஜன்

 

நல்ல புத்திசாலியான ஒருவன் எப்போழுதும் எதிலும் முதலாவதாக வந்து கொண்டிருந்தான். விளையாட்டுக்களிலும் அவன் தான் முதல். யாருடனும் சேராமல் இருந்த அவனை அவனது நண்பர்கள் ஊருக்கு வந்திருந்த ‘புத்த பிட்சு ஒருவரை பார்க்கப் போகலாம்,வா’ என்று கூறினர்.

புத்த பிட்சுவை தரிசித்த அவன், அவரிடம் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு கேள்வியைக் கேட்டான்.

அவர் புன்சிரிப்புடன், “உனக்கு அமேஸான் விளையாட்டு தெரியுமா?” என்று கேட்டார்.

“அமேஸான் விளையாட்டா? கிரிக்கட், ஃபுட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை கேள்விப் பட்டிருக்கிறேன். அதென்ன அமேஸான் விளையாட்டு?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

பிட்சு புன்முறுவல் மாறாமல். “அது நிஜமாகவே நடக்கும் ஒரு விளையாட்டு. அமேஸான் காடுகளில், பாய்ந்து வரும் அழகிய அமேஸான் நதிக் கரையோரம் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆடும் விளையாட்டு அந்த அமேஸான் விளையாட்டு. அங்கு பணியாற்றச் சென்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டர் ஒருவர் அந்த விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆட்டமும் புரியவில்லை, ஆட்டத்தின் விதிகளும் புரியவில்லை.

முதலில் அங்குள்ளோர் எல்லோரும் ஆண், பெண் வித்தியாசம், வயது வித்தியாசம் பாராமல் முதலில் ஒன்று சேர்ந்தனர். பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். அந்தக் குழுக்களில் எண்ணிக்கை சரி பாதியாகவும் இல்லை. ஆண்கள், பெண்கள், மூத்தவர், இளையவர் என்ற வயது வித்தியாசம் பலசாலி, பலமில்லாதவர் என்று எந்த பேதமும் இல்லை.

இப்படி இரண்டு குழுக்களாகப் பிரிந்தவர்கள் திடீரென வரிசையாக நின்று ஒரு மரத்தைத் தோளில் தூக்கிக் கொண்டனர்.  இன்னொரு போட்டியாளர் வரிசையும் ஒரு மரத்தைத் தூக்கிக் கொண்டது. மரத்திலாவது எடை, நீளம் ஆகியவற்றில் ஒரு சமத்தன்மை நிலவியதா என்றால் அதுவும் இல்லை. அணிக்கு ஏதோ ஒரு மரம், அவ்வளவு தான்!

சற்று தூரத்தில் – சுமார் 100 மீட்டர் தூரம் – இருக்கும் எல்லையை நோக்கி ஆரவாரக் கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் ஓடினர்.

எல்லையை முதலில் அடைந்த கோஷ்டியிலிருந்து வெற்றி பெறாத கோஷ்டிக்கு ஒரு உறுப்பினர் மாறினார். மீண்டும் பந்தயம் தொடங்கியது. இப்படி வெற்றி பெறாத கோஷ்டிக்கு அவனோ அல்லது அவளோ மாறிக் கொண்டே இருந்தனர். போகப் போக விளையாட்டு சூடு பிடித்தது. இரு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் உடையவர்களாக ஆகிக் கொண்டு வந்தனர்.. இரு அணிகளுக்கும் தூரத்தில் உள்ள இடைவெளியும் குறுகிக் கொண்டே வந்தது. நேரம் ஆக ஆக ஒரே ஆரவாரம்.

கடைசியில் இரு அணிகளும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டைத் தொட்டது.

இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்”

புத்த பிட்சு பேச்சை நிறுத்தினார்.

பின்னர் மெதுவாகத் தொடர்ந்தார். “விளையாட்டைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை என்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டருக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. பரவசத்தின் உச்சத்தில் இருந்த அவர் இது போன்ற ஒரு விளையாட்டைப் பார்த்த்தே இல்லை என்று எண்ணி மகிழ்ந்தார்.”

பேச்சை நிறுத்திய பிட்சு கேள்வி கேட்ட புத்திசாலியை கூர்மையாக நோக்கினார்.

“என்ன கேள்வி கேட்டாய்?எப்படி வாழ்வது என்றா? அது சரி, இந்த அமேஸான் விளையாட்டிலிருந்து உனக்கு என்ன புரிகிறது, அதை முதலில் சொல்!” என்றார்.

புத்திசாலியாகத் திகழ்ந்த அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

புத்த பிட்சுவை நமஸ்கரித்து வணங்கினான்;”ஐயனே! எனக்கு வாழும் வழி புரிந்து விட்டது. சொன்னதற்கு என்றும் உங்களுக்கும் புத்தருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” என்றான்.

அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பிட்சு என்ன சொன்னார்? இவன் என்ன புரிந்து கொண்டான்?

அந்த புத்திசாலியே விளக்கினான்.

“புரியவில்லையா! உலகில் பல்வேறு வித்தியாசங்களுடன் மக்கள் இருக்கத் தான் செய்வர். பலமுள்ள்வன் பலமில்லாதவனுக்கு, அறிவாளி படிப்பில்லாதவனுக்கு, செல்வமுள்ளவன் வறியவனுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது சமுதாயம் சமநிலை உள்ளதாக மாறும். அப்போது வென்றவன் தோற்றவன் என்று எவனும் இல்லை. எல்லோரும் வென்றவரே.

விட்டுக் கொடுத்து பரஸ்பரம் உதவி செய்து வாழ்க! என்பதே புத்தரின் அறிவுரை. அதை விளக்குகிறது இந்த அமேஸான் விளையாட்டு. அதைத் தான் எனக்கு அருளுரையாக இந்த மகான் கூறினார்!”

பிட்சு கால்நடையாக அடுத்த ஊரில் உள்ள இன்னொரு புத்திசாலியைப் பார்க்க மெதுவாக நடந்து போனார். அவரை நோக்கி அனைவரும் கைகூப்பித் தொழுத வண்ணம் பிரியாவிடை கொடுத்தனர்.

அவன் அன்று முதல் அனைவருக்கும் உதவி செய்பவனாக மாறினான். உயர்ந்தான்!

புத்தர் காட்டும் வழி : – ஒருவருக்கொருவர் கொள்ளும் ஆன்மீக நட்பு என்பது தயை, இரக்கம், சேவை, ஒழுக்கம் ஆகியவற்றை உயர்த்தும் ஒரு வழிமுறை.!

*************

Pic Source : http://media.radiosai.org/journals/vol_10/01JUN12/images/03_FeatureArticles/study_circle/Ananda-1.jpg

ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுயசரிதை! ச.நாகராஜன்

உத்வேகமூட்டும் கதைகளில் இரண்டைப் (ஒரு பெனிசிலின் கதை அத்தியாயத்தில்) பார்த்தோம். இதோ இன்னும் இரண்டு!

ஐந்து அத்தியாயங்களில் ஒரு சுய சரிதை என்ற இந்தச் சுயசரிதையை எழுதியவர் போர்ஷியா நெல்ஸன் (Portia Nelson)கதை நல்ல ஒரு நீதியை நமக்குப் போதிக்கும்.

முதல் அத்தியாயம்

நான் தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

அங்கு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது. நல்ல ஆழமான பள்ளம்.

அதில் விழுந்தேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அது எனது தவறு தான்!

அதிலிருந்து மீள்வதற்கு நெடு நேரம் ஆனது.

இரண்டாம் அத்தியாயம்

நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.அங்கு ஓரத்தில் ஒரு பள்ளம் இருந்தது.

அதைப் பார்க்காதது போல பாசாங்கு செய்தேன்.அதில் மீண்டும் விழுந்தேன்.

அதே இடத்தில் விழுந்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை.ஆனால் அதில் எனது தவறு இல்லை.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு நெடு நேரம் ஆனது.

மூன்றாம் அத்தியாயம்

நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.அங்கு ஓரத்தில் மிக ஆழமான ஒரு பள்ளம் இருந்தது.

அது அங்கு இருப்பதைப் பார்த்தேன்.இருந்தபோதிலும் அதில் விழுந்தேன். அது ஒரு பழக்கம்,

என் கண்கள் திறந்தே தான் இருந்தன.நான் எங்கு இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.

அது எனது தவறு தான்.உடனடியாக அதிலிருந்து மீண்டு விட்டேன்.

நான்காம் அத்தியாயம்

நான் அதே தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.அங்கு ஓரத்தில் மிக ஆழமான ஒரு பள்ளம் இருந்தது.

அதைச் சுற்றிப் போய் விட்டேன்.

ஐந்தாம் அத்தியாயம்

நான் இன்னொரு தெரு வழியே போய்க் கொண்டிருந்தேன்.

எழுதியவர் போர்ஷியா நெல்ஸன்

பணக்கார பிரபுவின் வியாதி!

பணக்கார பிரபு ஒருவர் இருந்தார். அவருக்குக் கண்ணில் வலி.வலி தாங்க முடியவில்லை. பல டாக்டர்களிடம் கண்ணைக்  காண்பித்தார். வலி தீரவில்லை. ஏராளமான நிபுணர்களை அழைத்தார். வண்டி நிறைய மருந்துகள் வந்து சேர்ந்தன.எதையும் விடவில்லை.ஆனால் கண்வலி போன பாடில்லை! இன்னும் அதிகமாக வலிக்க ஆரம்பித்தது.ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

கடைசியில் ஒரு துறவி அவனிடம் வந்தார். அவரிடம் தன் நிலைமையைச் சொல்லி அழுதார் பிரபு.

துறவி கூறினார்; “ஒன்றுமே இல்லை, இது. சுலபமாகக் குணம் ஆகி விடும். நீங்கள் சில காலம் பச்சையாக இருப்பதை மட்டுமே பார்க்க வேண்டும், அவ்வளவு தான். நான் வருகிறேன்.”

அவர் கிளம்பி விட்டார்.சிகிச்சையோ விநோதமாக இருந்தது. ஆனால் எளிதாகப் பின்பற்றக் கூடியது தானே!

பிரபு ஏராளமான பெயிண்டர்களை உடனே வரவ்ழைத்தார். பார்க்கும் இட்மெல்லாம் பச்சை வண்ணத்தை அடிக்கப் பணித்தார்.எங்கு நோக்கினும் பச்சை! ஒரே பச்சை.பீப்பாய் பீப்பாயாக பச்சை வண்ணம் அவர் மாளிகையில் எப்போதும் இருக்க ஆரம்பித்தது. எதைப் பார்த்தாலும் அது பச்சையாக இருக்க வேண்டுமே!

சில நாட்கள் கழிந்தன. துறவி மீண்டும் பிரபுவைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்த காவலாளிகள் ஓடோடிச் சென்று ஒரு பீப்பாய் பச்சை வண்ணத்தை எடுத்து வந்து அவர் மீது தெளித்தனர்.

ஏனெனில் அவர் காவி ஆடையை அணிந்திருந்தார். அவரைப் பச்சை ஆக்கி விட்டனர்.

துறவி சிரித்தார். “அடடா! பச்சையாக் எதையும் பிரபு பார்க்க வேண்டுமே என்பதற்கா இந்தப் பாடு. நீங்கள் இப்படி உலகத்தையே பச்சை ஆக்குவதற்குப் பதில் ஒரு பச்சைக் கண்ணாடியை வாங்கி பிரபு அணிவதற்குக் கொடுத்திருக்கலாமே! முழு உலகையும் பச்சை ஆக்குவது சாத்தியமா, என்ன!”

நாமும் நமது பார்வையை மாற்றிக் கொண்டால் உலகமும் அதன்படியே தோற்றமளிக்கும்!

உலகை மாற்ற முயல்வது முட்டாள் தனம்! முதலில் ந்மது பார்வையை ஒழுங்காக ஆக்கிக் கொள்வோம்!”

குட்டிக் கதைகள் தாம், ஆனால் போதிக்கும் நீதியோ!

ஒரு புதிய பென்சில்!

ச.நாகராஜன்

உத்வேகமூட்டும் சிறு கதைகளுக்கு வாழ்க்கையில் தனி இடம்

ஒன்று உண்டு. இரண்டு கதைகளைப் பார்ப்போம்:

புதிய பென்சில்!

பென்சில் வியாபாரி ஒருவன் புதிய பென்சில் ஒன்றை

பென்சில்களுக்கான பெட்டியில் வைக்கப் போனான். அந்த

பென்சிலை ஒரு அன்புக்குரியவனாகப் பாவித்து அவன்

பென்சிலுக்கு சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.

“இதோ பார், வெளி உலகிற்குச் செல்ல இருக்கிறாய். நீ தெரிந்து

கொள்ள வேண்டிய விஷயங்கள் ஐந்து உண்டு. அவற்றைச்

சொல்கிறேன். கவனமாகக் கேட்டுக் கொள். இதை நினைவில்

வைத்து நடந்து கொண்டாயானால் நீ தான் மிகச் சிறந்த

பென்சிலாக இருப்பாய்.

முதலாவது விஷயம், நீ மிகப் பெரும் காரியங்களைச் சாதிக்க

முடியும், ஆனால் நீ இன்னொருவர் கையில் இருந்தால் தான்

அது சாத்தியம், அதை மறக்காதே!

அடிக்கடி உன்னைக் கூர்மைப் படுத்தும் போது உனக்கு வலிக்கும்.

ஆனால் அதை நீ பொருட்படுத்தாதே. அது தான் உன்னைச்

சிறந்த வேலையைச் செய்ய வைத்து சிறந்த பென்சிலாக

உன்னை ஆக்கும்!

நீ உன்னால் ஏற்படும் தவறுகளை சரி செய்யவும் முடியும்

என்பதை மறந்து விடாதே.

இன்னொன்று, உனக்கு உள்ளே இருப்பது தான் முக்கியம் அதை

நினைவில் இருத்திக் கொள்.

நீ போகும் மேற்பரப்பின் மீது உனது அடையாளத்தை நன்கு

விட்டுச் செல். உன்னைப் பயன்படுத்தும் எந்த பரப்பையும் உன்

செயலினால் அழகு படுத்து. என்ன ஆனாலும் சரி, தொடர்ந்து

எழுது!

இந்த ஐந்து விஷயங்களையும் புதிய பென்சில் கவனமாகக்

கேட்டது. இதன் படியே நடப்பேன் என்று பென்சில்

வியாபாரியிடம் உறுதி கூறியது. அதன் முழு மனதையும் இந்த

விதிகளில் ஊற வைத்து அது நடந்தது. சிறந்த பென்சிலாக

ஆனது!

உலகின் ஏழு அதிசயங்கள்!

வகுப்பறையில் ஆசிரியர் குழந்தைகளை நோக்கி ஒரு

கேள்வியைக் கேட்டார். உலகின் சிறந்த அதிசயங்கள் ஏழு எவை?

நீங்கள் உங்களுக்குள் விவாதித்தும் ஒரு முடிவுக்கு வரலாம்.

தனியாகவும் பதிலைச் சொல்லலாம்.

சில குழந்தைகள் விவாதித்தன. ஒரு முடிவுக்கு வந்தன. தங்கள்

பட்டியலை அளித்தன இப்படி:

1) எகிப்தில் உள்ள பிரமிடுகள்

2) தாஜ்மஹல்

3) க்ராண்ட் கேன்யான்

4) பனாமா கால்வாய்

5) எம்பயர் ஸ்டேட் பில்டிங்

6) சீன நெடுஞ்சுவர்

7) பைசா கோபுரம்

இந்தப் பட்டியலால் மகிழ்ந்த ஆசிரியர் வகுப்பறையை

நோக்கிய போது ஒரே ஒரு சிறுமி மட்டும் தனியாக எதையோ

எழுதிக் கொண்டிருந்தாள்.

“என்ன, உனக்கென தனி லிஸ்ட் ஒன்று வைத்திருக்கிறாயா”

என்று கேட்டார் ஆசிரியர்.

அந்தச் சிறுமி மௌனமாக வந்து தனது பட்டியலைத் தந்தாள்.

1) பார்க்க முடிவது

2) கேட்க முடிவது

3) தொட முடிவது

4) சுவைக்க முடிவது

5) உணர்ச்சிபூர்வமாக உணர முடிவது

6) சிரிக்க முடிவது

7) அன்பு செலுத்த முடிவது

இவை நமக்குக் கிடைத்திருக்கிறதே! இவற்றையே உலகின்

ஏழு சிறந்த அதிசயங்களாக நான் கருதுகிறேன் என்றாள்

அந்தச் சிறுமி.

வகுப்பே அமைதியானது.

மேலோட்டமாக மனிதனால் அமைக்கப்பட்டவற்றை சிறந்த

அதிசயமாகக் கருதுதல் சரியில்லை.

இயற்கையாக அமைந்துள்ள இவையல்லவோ சிறந்த

அதிசயங்கள்!

அனைவரும் அந்தச் சிறுமியைப் பாராட்டி அந்தப்

பட்டியலையே ஏக மனதாக ஆதரித்தனர்!

எல்லோரும் குறை உள்ளவர்கள் தான். குற்றம் செய்யாத மனிதர்கள் என்று இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. எல்லோரும் குற்ற மனப்பான்மை உள்ளவர்களே.
ஒருவரை ஒருவர் ஏன் குறை பேசுகிறோம்? தன்னைவிட ஒரு காரியத்தை வேறு ஒருவர் திறமையாகச் செய்கிற போதும், ஒரு மனிதன் தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்று கிறபோதும், நம்மிடம் பொறாமைத்தனம் மிகுதியாகுகிறபோதும், நாம் மற்றவர்களை அவதூறு பேசுகிறோம்.
குறை காண்பது எளிது, ஆனால் அக்குறையே இல்லாமல் நடப்பது கடினமான காரியம் ஆகும். குற்றம் எதுவுமே இல்லாத மனிதன், மனிதன் அல்ல, நம்முடைய குறைகளை முதலில் கண்டு பிடிப்பவர்கள் நம்முடைய எதிரி கள்தான். நாம் குறைகள் இல்லாமல் இருக்கிறோம் என்பதற்காக, நம்மிடம் பழகுகின்றவர்களிடம் உள்ள குறைகளைப் பார்த்து ஆத்திரப்படக்கூடாது.
குறை இல்லாத நண்பனைத் தேடினால் ஒருவன்கூட அமைய மாட்டான். தன்னுடைய குறைகளைப் பார்க்கின்ற வனுக்கு மற்றவர்களுடைய குறையைப் பார்க்கவே நேரமிருக்காது. மிகச் சிலரே தங்களுடைய குற்றம், குறைகளை ஒப்புக்கொள்கிறார்கள். நம்மிடமுள்ள குறைகளைச் சாமர்த்தி யத்தால் மறைக்க முடியாது. ஆனால் அனுதாபத்தால் அழித்து விடலாம். மற்றவர்களிடம் தெரிகின்ற குறைகள் அழகற்றவையாக நமக்குத் தெரிகின்ற போது, நம்முடைய குறைகளை நாம் திருத்தியே ஆக வேண்டும்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளை நாம் பெரிதுபடுத்துவதைப் பற்றிச் சுயமுன்னேற்ற நூல்கள் எழுதிப்புகழ் பெற்ற நெப்போலியன் ஹில் கூறுவது யாதெனில், வீட்டிலிருக்கும் நாய்தான் தன் உடலில் உள்ள பூச்சிகளை நினைத்துக் குரைத்துக் கொண்டிருக்காது. கடமையை மட்டும் எண்ணி மற்ற பிராணிகளைப் பிடிப்பதற்குப் பாய்ந்து செல்லும். சிறிய குறைகளைச் சொல்லி புலம்புபவர்கள் சிறுபிள்ளைத் தனமானவர் கள்தான். ஆனால் இலட்சியவாதிகள் குறைகளைச் செல்லிப் புலம்பாமல், காரியம் ஒன்றையே கருத்தில் கொண்டு முன்னேறுவார்கள் என்றார்.
பட்டினத்தார் தன்னுடைய செல்வங்கள் யாவற்றையும் முற்றும் துறந்த பின் ஒருநாள் வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். நல்ல வெயில், அதிகக் களைப்பு, ஒய்வு எடுக்க விரும்பினார். சற்று இளைப்பாறலாம் என நினைத்து அருகிலுள்ள வேப்பமரத்தின் அருகில் வந்து உட்கார்ந்தார். வேப்பமரக்காற்று இதமான சுகம் தரவே. மெதுவாக உடலைத் தரையில் சாய்த்துப்படுத்தார். வயல்வெளி என்பதால் வயலின் வரப்பில் தலையை வைத்துக் கொண்டு, தூங்க ஆயத்தமாகிக் கண்களை மூடினார்.
அப்போது அந்த வழியாகச்சில பெண்கள் சென்று கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருத்தி பட்டினத்தாரைக்கூர்ந்து கவனித்தாள். பட்டினத்தார் படுத்திருப்பதைப் பாருங்கடி முற்றும் துறந்தவர் என்கிறார்கள். வெற்றுத்தரையில் படுத்து உறங்குகிறார். முற்றும் துறந்த துறவிக்குத்தலையணை சுகத்தைத் துறக்க முடியவில்லை போலும் என்று ஒரு பெண் சொல்லவும், மற்ற பெண்கள் கலகல வெனச் சிரித்தனர்.
தூங்குவதற்குத் தயார் நிலையில் படுத்திருந்த பட்டினத்தாரின் காதுகளில் அந்தப் பெண்களின் பேச்சு விழுந்தது. அத்தனை செல்வங்களையும் துறந்து துறவு மேற்கொண்ட பின்னும் இந்தப் பெண்களின் சிரிப்புக்கு ஆளாகி விட்டேனே. தூக்கம் வருவதற்காக வயல் வரப்பில் தலை சாய்த்ததற்கு, தலையணை சுகம் என்று கேலி பேசுகிறார்களே… என மனதிற்குள் நினைத்த பட்டினத்தார், வயல் வரப்பில் இருந்து தலையை எடுத்துத் தரையில் வைத்துக் கொண்டார்.
பட்டினத்தாரின் இந்தச் செய்கையை உற்றுக் கவனித்த பெண்களில் இருவர் மீண்டும் சிரித்தனர். என்னடி… பட்டினத்தாருக்குத் தலையணை சுகம் எதற்கு? என நீ கேட்டாய்? முற்றும் துறந்த துறவி பட்டினத்தார் தலையை வரப்பிலிருந்து எடுத்துத்தரையில் வைத்துப் படுத்திருக்கிறாரே… இன்னும் என்ன சிரிப்பு? என்று ஒருத்தி கேட்டாள். இப்போது கூட அடுத்தவர் பேசுவதை ஒட்டுக்கேட்கும் பழக்கம் போகவில்லை. இவரா முற்றும் துறந்த துறவி? என்றாள். பட்டினத்தார் திகைத்துப் போனார்.
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா என்னும் கவிதையின் வரிகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.அதிகம் சிரித்துப் பேசுபவர்களை இளிச்சவாயன்கள் என்றும், குனிந்து நடப்பவர்களைக் கூனன் என்றும், நிமிர்ந்து சென்றால் நெஞ்சை நிமிர்த்தித் திரிகிறான் என்றும் குறை சொல்லும் கூட்டங்கள் அதிகமாகி விட்டது.
இதனால் எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டும் எனத் தெரியாமல் திண்டாடித் தங்களை அறியாமல் சிலர் தவறு செய்து விடுகிறார்கள். இப்போது எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனோபாவம் பலரிடம் வளர்ந்து விட்டது. நக்கீரரின் பரம்பரை என்றே தங்களைக் கருதி அவர் சரியில்லை, இவர் சரியில்லை எனக்குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கவும் சிலர் துணிந்து விட்டார்கள். ஒரு திருடன் திருடுவதற்கு ஒரு வீட்டைக் குறி வைத்தான். அப்போது அந்த வீட்டுச்சுவர் இடிந்து, அவன் தலைமேல் விழுந்தது. அவன் இறந்தான். திருடனின் சாவுக்கு யார் காரணம் என்று ஊர் பஞ்சாயத்தில் விசாரணை நடந்தது. திருடனின் சாவுக்கு வீட்டுக்காரர் தான் காரணம் என்று பஞ்சாயத்துத் தலைவர் கூறினார். நான் காரணம் அல்ல, மோசமாக சுவரைக் கட்டிய கொத்தனார்தான் காரணம் என்று வீட்டுக்காரர் சொன்னார். அதற்கு கொத்தனார் நான் காரணம் அல்ல சாந்து கலக்கும் கலவையில் அதிகமாக தண்ணீர் ஊற்றிய சித்தாள்தான் காரணம் என்றார். சித்தாளும் தன் மீது கூறப்பட்ட புகாரை மறுத்தார்.நான் காரணம் அல்ல குடத்தைப் பெரியதாகச் செய்த குயவன்தான் காரணம் என்றார். குயவனோ, நான் காரணம் அல்ல, நான் குடம் செய்யும்போது தெருவில் நடந்து சென்ற தாசிப் பெண் மீது என் கவனம் போனதுதான் காரணம் என்றார். தாசிப்பெண்ணோ நான் காரணமல்ல, என் துணியைச்சரியான நேரத்துக்கு வெளுத்துத்தராத சலவைத் தொழிலாளிதான் காரணம் என்றார். சலவைத் தொழிலாளியோ, நான் காரணமல்ல. நான் துவைக்கும் கல்லில் ஒரு சாமியார் வந்து உட்கார்ந்து விட்டார். அவர்தான் காரணம் என்றார். குழம்பிப்போன பஞ்சாயத்தார் தலையில் கைவைத்தனர். இப்படி ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிக் கொண்டே போனால் அது சங்கிலித் தொடர் போல் நீண்டு கொண்டேதான் போகும்.
குறையே நிறை என்பதை அதிகமானோர் உணர்வதில்லை. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சிறுவயதிலிருந்தே சரியாகக் காது கேட்காது. கவனமாக உற்றுக்கேட்டால்தான் மற்றவர் கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குறையைச் சரிசெய்ய அவரது நண்பர்கள் எடிசனை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள்.
டாக்டர், எடிசனைச் சோதித்து விட்டு, இதை வெகு விரைவில் குணப்படுத்தி விடலாம் பயப்பட எதுமில்லை என்று சொல்ல எடிசன், வேண்டாம் இந்தக்குறையை சரி செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. இப்படியே விட்டுவிடுங்கள் என்று சொன்னார். டாக்டர், ஏன்? என்று திகைப்போடு கேட்டதற்கு எடிசன், சிறு வயதிலேயே இந்தக்குறையைப் போக்குவதற்காக நான் முயற்சி செய்தேன். தினமும் ஜனசந்தடி அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்று, அரைமணி நேரம் மற்றவர்கள் பேசிக் கொள்வதை உற்றுக்கேட்டேன். சுமார் மூன்று மாதங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்து வந்தேன். பிறகு வேண்டாம் என்று நிறுத்தி விட்டேன். ஏனெனில் கடந்த மூன்று மாதங்களாக, நான் கேட்ட சம்பாசணைகளில் 99 சதவீதம் பயனற்ற பேச்சுக்களே… அதனால் இவற்றைக் கேட்பதை விட கேட்காமல் இருப்பதே உத்தமம் என்று தெரிந்து கொண்டேன். எனவே எனக்கு அவசியமான நேரங்களில் மட்டும் அதாவது ஆராய்ச்சி பற்றியோ என் தொழில் பற்றியோ மற்றவர்கள் பேசும்போது கவனமாகக் கேட்டுக் கொள்வேன். நான் ஆழ்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் போது, என்னைச் சுற்றிப்பத்து பேர் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தால் கூட, நான் கவனம் சிதறாமல் புத்தகத்தைப் படிக்க முடிகிறது. எனக்கிருப்பது குறையே அல்ல. கடவுள் தந்த வரம். எனவே என் காதுகள் இப்படியே இருக்கட்டும் என்றார் உறுதியுடன்.
உலகத்தில் 70% தண்ணீர் இருந்தாலும் ஒரு சதவீதம் தண்ணீர்தான் குடி நீராகப்பயன்படுகிறது. இது போன்று பக்தர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அதில் பக்குவப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஆகையால் யாரும் யாரையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல. எல்லோரும் தம்மை விட்டு, வேறு எதையோ சீர்திருத்த முயல்கிறார்கள் என்று தாகூர் கூறினார்.
பிறருடைய குற்றங்களை அதிகமாகச் சிந்திப்பதை விடத்தங்களின் குற்றங்களை அதிகமாகச் சிந்தியுங்கள் என்பது நபிகள் நாயகத்தின் பொன்மொழியாகும்.
நிறை கண்டால் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் கூறாதீர்கள் என்பது பைபிளின் கூற்று.
நம்முடன் நன்றாகப் பழகக் கூடியவர்கள் நம்மை வேண்டுமென்றே குறை பேசக்கூடிய நேரத்தில் நாம் முத்தில் சொத்தை இல்லையா? பவளத்தில் பழுது இல்லையா? என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

-நன்றி.முகமது இலியாஸ்

படங்கள் : http://www.healthguidance.org/hgimages/16451Criticizing.jpg