எலிக்காய்ச்சல் ஒரு கண்ணோட்டம் – மருத்துவர் முகமது ரபி

எலிக்காய்ச்சல் என்று சொன்னவுடன் பழையவர்களுக்கு நினைவுக்கு வருவது பிளேக் நோய்தான். ஆனால் இன்று நமது அண்டை மாநிலமான கேரளாவிலும், நமது சென்னை போன்ற பெரு நகரங்களிலும் பலரை பயமுறுத்தி பலிவாங்கியிருக்கும் காய்ச்சலின் உண்மையான பெயர் இலெப்டோ ஸ்பைரோசிஸ்.இது சுருளியுருவான நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படும் நோய்
எலி,பெருச்சாளி போன்ற பிராணிகளின் சிறுநீர் மூலம் பரவுவதால் இன்று லெப்டோ ஸ்பைரோசிஸ் நோயும் எலிக்காய்ச்சல் என்ற பெயரை பெற்று விட்டது. இந்த நோய்க் கிருமிகள் பொதுவாக எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்த Leptospira interrogans என்ற பெயரைக் கொண்ட கிருமி சுருளியுருவான கம்பைப்போன்றது. 5 முதல் 7 மைக்ரோன்கள் நீளமானது (நிச்சயமாக வெறுங்கண்ணுக்கு தெரியாது. இந்தக் கிருமியிலும் 23 வகையான பிரிவுகள் கண்டறியப்பட்டு உள்ளன.

இவை தம்மைத் தாமே சுற்றுவதன் மூலமும், மடிவதன் மூலமும் அசையக்கூடியன. இந்த சுருளி வடிவ கிருமியின் இரு முனைகளும் குடை போன்ற அமைப்பை பெற்றிருக்கும் . இவ்வளவும் சொன்ன பிறகு எலியில் இந்த கிருமிகள் எங்கே இருக்கும் என்ற ஆவல் உங்களுக்கு வரும்தானே?. எலியின் சிறுநீரகத்தில் உள்ள மடிந்த குழாய்களில் ஏராளமாக இந்தக் கிருமிகள் இருக்கும். ஆனாலும் எலிக்கு இவை நோயை ஏற்படுத்துவதில்லை. எலி தனது இயற்கை கடன்களை கழிக்கும்போது எலியின் சிறுநீருடன் எக்கச்சக்கமான கிருமிகள் வெளியேறும். எலிகள் பொதுவாக எங்கே வாழும்? (பொந்தில் வாழும் என்று எனக்கு புகைச்சலை ஏற்படுத்தாதீர்கள்) வயல்களில் வாழும். வயல்களில் கழித்த சிறுநீர் வயலில் உள்ள நீரில் கலந்து ஆறுகளில் / குளங்களில் சேரும். நீரில் லெப்டேஸ்பைரா கிருமி நீண்ட நாள் வாழக்கூடியது.

லெப்டோஸ்பைரோ கிருமியானது நமது பாதுகாப்பு கவசமாக காணப்படும் தோல் மற்றும் மென்சவ்வுகளை கடந்து செல்லும் ஆற்றல் படைத்தது. அதுவும் தோளில் ஏதாவது சிராய்ப்பு காயங்கள் இருந்தால்சொல்லவே வேண்டாம். அழையா விருந்தாளியாக நமது உடலிலே புகுந்து விடும். குளம் குட்டைகளில் அதிகமாக நீந்தி விளையாடும் போது அவர்களுக்கு இக்கிருமி தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகம். சேற்றில் வேலை செய்யும் விவசாயிகளும் இந்த நோய்க்கு இலகுவாக ஆட்படக்கூடும். தொற்றிய கிருமி நமது உடலின் குருதியை அடைந்து உடல் முழுவதும் பரவுகிறது. மனிதர்களில் பொதுவாக பாதிக்கப்படும் அவயங்களாக இருப்பவை சிறுநீரகம், ஈரல், மூளையின் மென்சவ்வு. இதில் வியப்புக்குரிய வி­யம் என்னவென்றால் கிருமி பெருகும் போது நமது உடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவது இல்லை. ஆனால் இந்த கிருமி அழியும்போது நமது அங்கங்களுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. எனவே இந்த அழிவுகளுக்கு காரணம் இந்த கிருமி களுக்கு எதிராக நமது உடலில் உருவாக்கப் பட்ட பிறபொருள் எதிரிகள் நமது அங்கங்களையும் கிருமி என தவறுதலாக அடையாளம் கண்டு தாக்குவதாக இருக்கலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.

கிருமி உடலுக்குள் புகுந்து ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு பின்னர் மிகுதியாக காய்ச்சல் தோன்றும். (102 டிகிரி) இதன்போது தாங்க முடியாத தலை வலியும், கண்களுக்கு பின்னால் தோன்றும் குத்துவலியும் ஏற்படலாம் வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்கள் மிகவும் கூச்ச மடையும் தவிர அடித்துபோட்டது போல் உடல் தசைகள் பயங்கரமாக வலிக்கும். மிகவும் மோசமாக நோய் இருக்கும் போது கண்கள் கடும் மஞ்சள் நிறம் அடையும் கண்களின் வெண்ணிறப் பகுதியில் அதிகமாக குருதி சேர்வதால் குடிகாரனின் கண் போல சிவந்து காணப்படும். நிலைமை மோசமாகும்போது மூளை மென்சவ்வு அழற்சிக்கு உட்படலாம். இதனால் நோயாளியின் நினைவு தவறும் குருதிச் சிறு தட்டுக்களின்(பிளெட்லெட்) எண்ணிக்கை குறைவடைந்து,ரத்த உறைவு தடைபட்டு குருதிப்பெருக்கு ஏற்படும். சிறுநீரகம் தனது செயலை திடீரென நிறுத்தும். அதேபோல நுரையீரலும் பாதிக்கப்பட்டு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்படும் இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கட்டாயமாக அதிதீவிர சிகிட்சை பிரிவில் சிகிட்சை வழங்கப்படும். ஆயினும் கணிசமான மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் உள்ளது.

இந்த நோய்க்கு ஆய்வுக்கூட பரிசோதனை கள் பல உள்ளன. ஈரல் தொழிற்பாட்டை அளக்கும் குருதிப் பரிசோதனைகள் குருதிச் சிறுதட்டுக்களின் (பிளெட்லெட்) அளவு மூளை,தண்டுவட பரிசோதனை போன்றவை பொதுவான பரிசோதனைகள் ஆகும். இதைத் தவிர குருதியில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் எகிறிக்குதிக்கும்.நோய் தொற்றி முதலாவது வாரத்திற்குள் குருதியை ஊடக வளர்ப்பில் பரிசோதிப்பதின் மூலமும், இரண்டாவது வாரத்தில் என்றால் சிறுநீரை பரிசோதிப்பதன் மூலமும் நோயைக் கண்டறிய முடியும்.

தற்காலத்தில் விசேட­ பரிசோதனைகளான MAT மற்றும் Elisa போன்ற நவீன முறைகளும் பயன்படுகின்றன. PCR எனப்படும் விசே­ முறையில் DNA ஐ கண்டு பிடிப்பது மிகவும் புதிய பரிசோதனையாகும். இவற்றுக்கு மிகவும் பணச்செலவு ஏற்படும் ஆனால் இந்த முறையில் நோய் ஏற்படுத்தும்/ஏற்படுத்தாத கிருமிகளை வேறுபடுத்தி அறிவதுடன் குருதி மாதிரியில் 2 கிருமிகள் சிறுநீரக மாதிரியில் 10 கிருமிகள் இருந்தாலே கண்டுபிடிக்கும் வல்லமை கொண்டது. (சாதாரணமாக நோய் உள்ள காலத்தில் ஆயிரமாயிரம் லெப்டோஸ்பைராக்கள் குருதியில், சிறுநீரில் காணப்படும்) முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் மிகவும் பழைய அதிக காலத்துக்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்ட பென்சிலின் மருந்து இன்று இந்தக் கிருமியை அழிக்கக்கூடியது. ( வேறு கிருமிகள் என்றால் அவை எப்போதோ பென்சிலினுக்கு எதிர்ப்பு காட்ட பழகி விட்டன.) தவிர டொக்சி சைக்கிளின் மற்றும் மூன்றாம் தலைமுறை செபொலஸ்பொரின் மருந்துகளும் வெற்றிகரமாக இந்த கிருமியை கொல்லும் தன்மையை கொண்டிருக்கிறது.

அதுசரி இந்த நோயை கண்டறிய நல்ல முறைகள் இருக்கின்றன. நோய்க்கு மருந்தும் இருக்கின்றது. ஆனால் அதிகமானவர்கள் இந்த நோயால் ஏன் சாகிறார்கள் ? என நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. அதற்கு காரணம் மற்றைய காய்ச்சலுக்கும் இந்த எலிக்காய்ச்சலுக்கும் அதிக வேறுபாடுகள் காணமுடியாமல் சாதாரண காய்ச்சல் போல வைத்தியம் செய்யப் படுவது தான். இந்த லெப்டோ ஸ்பைரோசிஸ் எனப்படும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் நன்றாக கலகலத்துப் பேசிக் கொண்டிருந்து ஒரு சில மணி நேரத்துக்குள் மிகவும் நோய் முற்றிய நிலைமைக்குள் வந்துவிடுகிறார். எனவே நீங்கள் வைத்தியரிடம் போகும்போது நோயைப்பற்றி கூறும்போது வயல் வெளிகளில், குளங்களில் குளிக்கும் பழக்கம் இருந்தால் அல்லது வயல் வேலை செய்பவராக இருந்தால் கட்டாயமாக அந்த விபரங்களை கூறுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நோய் வரும் முன்னே காப்பது நல்லது. எனவே எலிகளை கட்டுப்படுத்தும் வயல்வெளி, குளங்குட்டைகளில் குளிப்பதை தவிர்த்தலும், இந்தக் கொடிய நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

Pic Source : www.bothellveterinarian.files.wordpress.com/2015/09/leptospirosis-spread.jpg

டயாபடீஸ் உள்ளவர்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்படிச் சொல்வதனால் அவர்கள் சாப்பிடுவதெல்லாமே சுவையற்றதாகவும் சலிப்பானதாகவும் இருத்தல் வேண்டும் என்று அர்த்தமில்லை. தங்கள் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் உணவில் சற்று சுவை உள்ளவற்றையும் அவர்கள் அனுபவிக்கலாம்! இரவில் படுப்பதற்று முன்னர் நொறுக்குத்தீனியைச் சாப்பிடுவதை பல டயாபடீஸ் நோயாளிகள் அறிவுரையாக ஏற்றுப் பழக்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையில் இரவு நேரத்தில் எந்த விதமான நொறுக்குத் தீனியைச் சாப்பிடலாம் என்பதைப் பார்ப்போம். அவை எளிமையானவை. தயாரிப்பதற்குச் சுலபமானவை, மிகச் சுவையானவையும் கூட!
டயாபடீஸ்காரர்களுக்கு ஆரோக்கியமான இரவு நேர நொறுக்குத் தீனிகள்!
டயாபடீஸ் உள்ளவர்கள் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை எப்போதுமே சரியானபடி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சரியான உணவை உட்கொள்வதன் மூலம் இதை எளிதில் அடைய முடியும். டயாபடீஸ் உள்ளவர்கள் நல்ல ஆரோக்கியமான நொறுக்குத் தீனியை படுக்கப் கோகும் முன்னர் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இரவு நேரத்தில் குளுகோஸ் அளவு குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யப்படுகிறது.
டயாபடீஸ்காரர்களுக்கு படுக்கப்போகும் முன்னர் உண்பதற்கான சில ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகனை கீழே பார்க்கலாம். இவை கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், கொழுப்புகள் போன்றவை முறையே இந்த வரிசைப் படியே படிப்படியாக குறைவான அளவில் சேர்க்கப்பட்ட ஊட்டச் சத்தாகும்.
ப்ரூட் சாலட்
இரவு நேரத்தில் படுக்கப் போகும் முன்னர் சாப்பிடும் நொறுக்குத் தீனி வகைகளில் ஒன்றான ப்ரூட் சாலட் சுவை மிக்கதும் கூட! விதவிதமான பழங்களை நறுக்கிக் கொள்ளுங்கள். சிறப்பாகச் சொல்லப்போனால் ஆப்பிளைச் சொல்லலாம். ஆகவே ஒரு முழு ஆப்பிளை நறுக்கிக் கொள்ளுங்கள். சில ஸ்ட்ராபெர்ரிஸ், ப்ளூ பெர்ரிஸ், மாதுளம்பழம், ப்ளம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை விட்டமின், பைபர் அடங்கியவை மட்டும் அல்ல, டீ-ஆக்ஸிபையிங் எனப்படும் உடலைச் சுத்தமாக்கும் செயலையும் இந்த சாலட் செய்து விடும். சர்க்கரையற்ற வனிலா ஐஸ் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பிறகென்ன, விழாக் காலத்தில் சாப்பிடும் உணவாக இது சுவை பயக்கும் அல்லவா!
தானிய வகைகள் (செரியல்ஸ்)
படுக்கப் போகும் முன்னர் சாதாரணமாக சாப்பிடும் நொறுக்குத் தீனி இது தான். குறைந்த கொழுப்பு உடைய பால் மற்றும் உங்களுக்குப் பிடித்த தானிய வகையை எடுத்துக் கொள்ளலாம். பால் சற்று இளஞ்சூடாக இருப்பது நல்லது. அத்துடன் தானிய வகை ஒன்றைச் சேருங்கள். படுக்கும் முன்னர் சாப்பிடுங்கள். பாலை சூடாக்காமல் ஆறி இருக்கும் போதும் கூடச் சாப்பிடலாம். அதில் சில ஸ்ட்ராபெர்ரிஸ் அல்லது வாழைப்பழத் துண்டுகளையும் தானிய வகையுடன் சேர்த்துக் கொள்ளலாம். சோளம், கோதுமை மற்றும் முஸ்லி ஆகியவை சிறந்தவை. ஓட்ஸை பாலுடன் சேர்த்து அருந்துவது இன்னொரு வகை படுக்கை நேர உணவு முறை ஆகும்.
அசைவ உணவு (இறைச்சி)
தேவையான புரோடீன், கார்போஹைட்ரேட்டுகளை சேர்த்துக் கொள்ள சந்தேகமின்றி கொஞ்சம் மீன் அல்லது மாமிசத்தை எடுத்துக் கொள்வதே உகந்ததாகும். கொஞ்சம் சிக்கன் அல்லது மீன் எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரையின்றி அப்போது தான் தயாரிக்கப்பட்ட பழச்சாறை அனுபவித்துச் சாப்பிடுங்கள் அல்லது மீன், சிக்கன், இறைச்சி ஆகியவற்றை உபயோகித்து இரவு நேரத்திற்காகவே சிறிது கட்லெட் செய்து சாப்பிடுங்கள். முட்டை, சோயா பீன்ஸ், கொட்டை வகைகள் (நட்ஸ்) ஆகியவையும் தேவையான புரோடீனை நல்கும்.
சேண்ட்விச் எனப்படும் இடையீட்டு ரொட்டிகள்
டயாபடீஸ் உள்ளவர்களுக்கு படுக்கப் போகும் முன்னர் எடுத்துக் கொள்ள இன்னொரு சுலபமான உணவு வகை சேண்ட்விச் எனப்படும் இடையீட்டு ரொட்டியாகும். ஹோல் க்ரெய்ன் ப்ரெட் எனப்படும் சத்து ரொட்டித் துண்டுகள் இரண்டின் இடையே சற்று சீஸ் வைத்து சுவையான சேண்ட்விச் தயார் செய்யுங்கள். பீநட் பட்டர் கூட சிறந்த சேண்ட்வித் தான்! இனிப்பு கட்டாயம் தேவை என்றால் சர்க்கரையற்ற ஜெல்லி அல்லது ஜாமை உங்கள் ரொட்டித் துண்டுகளில் தடவுங்கள்; படுப்பதற்கு முன் சாப்பிடுங்கள். புதிதாகத் தயாரிக்கப்பட்ட கோதுமை அல்லது சோளம் கொண்ட ஹோல் க்ரெய்ன் ப்ரெட்டைக் கேட்டு வாங்குங்கள்.
க்ராக்கர்ஸ்
படுக்கப் போகும் முன்னர் க்ராக்கர்ஸ் என்னும் இன்னொரு வகையான உணவைக் கூட நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். க்ரஹாம் க்ராக்கர்ஸ் சிறப்பானது. அவை உப்புச் சுவையற்றது. விதவிதமான தானியங்களைக் கலந்து செய்ப்பட்டிருப்பதால் அவை டயாபடீஸுக்கு மிகவும் நல்லது. க்ரஹாம் க்ராக்கர்ஸ் கிடைக்கவில்லை என்றால் உப்புச் சுவையுடன் கூடிய க்ராக்கர்ஸையும் கூட நீங்கள் வாங்கலாம். கடைகளில் அவை விதவிதமாகக் கிடைக்கின்றன. குறைந்த கொழுப்புச் சத்து உடைய சீஸை அத்துடன் துண்டு துண்டுகளாக்கியோ அல்லது அதன் மீது தடவியோ சாப்பிடலாம். அவை சுவையானவை; உடலுக்கு நலம் பயப்பவை! சோளம் அல்லது கோதுமையால் வட்டவடிவமாகத் தயாரிக்கப்பட்ட சூடான டார்டில்லாக்களைக் கூட நீங்கள் மாறுபட்ட சுவைக்காக அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.
நெடுங்காலம் வாழலாம்!
ஒரு நாளை முடித்து விட்ட நிலையில் மேலே கண்ட சுவையான நொறுக்குத் தீனிகளை நீங்கள் உறங்குவதற்கு முன்னர் எடுத்துக் கொள்ளலாம், புதிய உணவு வகைகளை ஆரம்பிக்கு முன்னர் உங்கள் டாக்டர், சத்துணவு ஆலோசகர், உணவுத் திட்ட ஆலோசகருடன் கண்டிப்பாக கலந்து பேசி ஆலோசியுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்; நீங்கள் ஆரோக்கியத்துடன் நெடுங்காலம் வாழ்வீர்கள்!

ச.நாகராஜன்

Pic Source : http://livehealthy-md.com/wp-content/uploads/2012/06/diabetic-diet-recipes-banner-large.jpg

வியாதி வராமல் தடுக்க ஒரு ரகசியம்! உங்கள் பிஹெச் வால்யூ என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியாவிடில் முதலில் அப்படி என்றால் என்ன என்பதை அறியப் படியுங்கள் இந்தக் கட்டுரையை!

வியாதி வராமல் இருக்க நீங்கள் அறிய வேண்டிய பிஹெச் வால்யூ!

ச.நாகராஜன்

உணவில் இருக்குது ஆரோக்கிய ரகசியம்
இன்றைய நவீன வாழ்க்கை முறை பல சௌகரியங்களை நமக்குத் தந்திருப்பதாக பெருமையும் சந்தோஷமும் படும் போதே தொழிற்மயமாக்கப்பட்ட நகரங்களில் அது நமக்கு மன அழுத்தத்தால் தரும் வியாதிகளின் கொடூரம் தாங்க முடியாத ஒன்று என்பதைப் பலரும் அறிவதில்லை!
நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு வியாதிகள் நாம் சாப்பிடும் உணவுகளாலேயே ஏற்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் பாஸ்ட் புட் அல்லது தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் என்பனவற்றில் பெரும்பாலானவை அமிலத்தை உருவாக்குபவை.இவற்றை நாம் ஜீரணம் செய்த பின்னர் இவை அமிலங்களை உருவாக்குகின்றன.
நல்லஆரோக்கியத்தைப் பேண நமது உணவில் அறுபது சதவிகிதம் அமில உணவு வகைகளை நாம் உண்ணுதல் அவசியம் என்றாலும் இந்த அமிலம் அளவுக்கு மிஞ்சினால் விஷமாகி விடும்.ஆகவே நமது உணவில் அளவோடு அமில வகை உணவுகளைச் சேர்த்தல் அவசியம்.
ஆல்கலைன் உணவுகளும் அமில உணவுகளும்
ஆல்கலைன் உணவு வகைகளை நிச்சயமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிகாய்கள் ஆல்கலைன் (காரத் தன்மை) உணவு வகைகளில் முக்கியமானது. ஆனால் இதை நாம் சாதாரணமாக அதிகம் சேர்த்துக் கொள்வதே இல்லை! மாறாக காப்பி, டீ, மது வகைகள் ஆகியவற்றை உற்சாக ஊக்கிகள் என்று நினைத்து அதிகமதிகம் சேர்த்துக் கொள்கிறோம். இவைகள் அமிலத்தை அதிகம் உருவாக்குபவை.
நமது புரோட்டீன் உட்கொள்ளளவை சமச்சீராக்க பழங்களும் நல்ல கறிகாய்களும் தேவை. ப்ராஸஸ் செய்யப்பட்ட உணவு வகைகள், கார்போஹைட்ரேட் மட்டும் உள்ள உணவு வகைகள், சர்க்கரைச் சத்துள்ள உணவு வகைகள் ஆகியவை அமிலத்தை உருவாக்குவதோடு ப்ளட் சுகர் அளவை( உயர் க்ளைசெமிக் இன்டெக்ஸால் கொழுப்பு அதிகம்) அதிகமாக்குகிறது.
ஊட்டத்தைக் குறைவாக்கி நச்சுத்தன்மையையும் அதிகம் தருபவை இவை.
பி.ஹெச் வால்யூ என்றால் என்ன?
மனித உடலில் 70 சதவிகிதம் நீரே உள்ளது. ஆகவே சொல்யூஷன் எனப்படும் கரைசல்களில் பல ரகங்கள் உடலில் உள்ளன.இவை அமிலத்தை அதிகமாகவோ குறைவாகவோ கொண்டுள்ளன. பிஹெச் அல்லது பொடன்ஷியல் ஆப் ஹைட்ரஜன் என்பது ஒரு கரைசலின் அமிலம் அல்லது ஆல்கலைன் எவ்வளவு என்பதைக் காட்டும் அளவாகும். பாஸிடிவாக சார்ஜ் ஆகும் ஐயான்களுக்கும் (அதாவது அமிலத்தை உருவாக்குபவை) நெகடிவாக சார்ஜ் ஆகும் ஐயான்களுக்கும் (அதாவது ஆல்கலைன் உருவாக்குபவை) உள்ள விகிதமே இது! ஒரு சொல்யூஷனின் பிஹெச் என்பது ஹைட்ரஜன்-ஐயான் கான்சென்ட்ரேஷனின் அளவாகும். பிஹெச் மதிப்பு அல்லது வால்யூ கூடக் கூட அதிக ஆல்கலைனும் ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பாய்மமும் (fluid)இருப்பதாக அர்த்தமாகும். பிஹெச் மதிப்பு அல்லது வால்யூ குறைவாக இருந்ததென்றால் அதிக அமிலமும் ஆக்ஸிஜன் குறைவாகவும் உள்ள பாய்மம் என்றும் அர்த்தமாகும். பிஹெச் மதிப்பு அல்லது வால்யூ 0 முதல் 14 வரை உள்ளது. 7 என்பது நடுநிலையில் இருப்பது. ஏழுக்கு மேலே உள்ள எந்த அளவும் ஆல்கலைன் அளவு. ஏழுக்குக் கீழே உள்ள எந்த அளவும் அமிலம் இருப்பதாகக் கருதப்படும் அளவு.
மனித ரத்தத்தில் பிஹெச் எவ்வளவு இருக்க வேண்டும்?
மனித ரத்த பிஹெச் சிறிது ஆல்கலைனாக இருத்தல் வேண்டும். அதாவது 7.35 முதல் 7.45 வரை இருக்கலாம். இந்த அளவுக்கு மேலோ அல்லது கீழோ இந்த அளவு இருந்தால் வியாதிக்கு அறிகுறியாகும்! ரத்த பிஹெச் 6.8க்குக் கீழோ அல்லது 7.8க்கு மேலோ போனதென்றால் உயிரணுக்கள் (cells) செயல்படுவதை நிறுத்துகின்றன. உடல் இறக்கிறது.
ஆகவே உடல் எப்போதும் பிஹெச் மதிப்பு அல்லது வால்யூவை சமச்சீராக வைத்திருக்கவே முயற்சிக்கிறது. இந்த சமச்சீர் அளவு அடையப்பட முடியவில்லை என்றால் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
சமச்சீரற்ற உணவு எது
மாமிச உணவில் உள்ள புரோட்டீன், சர்க்கரை, காபி, ப்ராஸஸ் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆகிய அதிக அமிலத்தை உருவாக்கும் உணவு வகைகள் சமச்சீரற்ற உணவு என்று அழைக்கப்படுகிறது. இந்த உணவு வகைகள் உடலின் பிஹெச் நடுநிலை அளவை அடைய உடலைப் போராடும்படி செய்து விடுகின்றன.இந்தச் சமச்சீர் அளவை உடல் அடைய விடாமல் அதாவது ஆல்கலைன் தாதுக்கள் உள்ள சோடியம், பொடாஸியம், கால்சியம் ஆகியவற்றை அடைய விடாமல் செய்யப்படுவதால் உடல் பாதிக்கப்படுகிறது.
ரகசியம் இது தான்! உங்கள் பிஹெச் வால்யூ என்ன. அறியுங்கள்!!
ஆகவே முதலில் உங்கள் உடலின் பிஹெச் வால்யூ என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இது மேலே சொன்ன 7.35 முதல் 7.45 வரை இருந்தால் அதை அப்படியே கடைசி வரை காப்பாற்றி வர வேண்டும். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் வியாதி நிச்சயம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தக் கணம் முதலே ஆரம்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் என்றால் பயப்பட வேண்டாம்.
உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எந்த உணவு வகைகளைச் சேர்ப்பது எதை நீக்குவது என்பதற்கு ஒரு அட்டவணையே உள்ளது.
அதை இன்னொரு கட்டுரையி¢ல் பார்ப்போம்.
********

Pic Source : http://cdn3.bigcommerce.com/s-290wq/product_images/uploaded_images/ph-chart.jpg?t=1422116094

 

டயாபடீஸா? கெமிக்கல்கள் ஜாக்கிரதை!
——————————————————-
ச.நாகராஜன்
உலகெங்கும் சுமார் 18 கோடி பேர் டயாபடீஸால் அவதிப்படுகிறார்கள் என்பது ஆச்சரியகரமான உண்மை!
ஆனால் இதை விட ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இந்த எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் அதாவது 2030ம் ஆண்டு வாக்கில் இரு மடங்காகப் போகிறது என்பது தான்!
டயாபடீஸ் வர முக்கிய காரணமாக மூன்று விஷயங்களை மருத்துவர்கள் குறிப்பிடுவர்:
உணவுப் பழக்கம்
சோம்பேறித்தனம்
உடல் பருமன்
இந்த மூன்றையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலே போதும் டயாபடீஸ் அபாயம் நீங்கி விடும்.
இவற்றில் முதலாவதாகக் கூறப்படும் காரணமான உணவுப் பழக்கத்தில் அதிக •போகஸ் செய்ய வேண்டும்.
நம் உண்ணும் உணவு வழியாக உள்ளே செல்லும் கெமிக்கல்களைப் பற்றிய அடிப்படை அறிவு டயாபடீஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவராலும் அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.
எத்தனை கெமிக்கல்கள்! எத்தனை விதங்களில் நம் உடலுக்குள் நுழைகிறது?! காட்மியம்,மெர்க்குரி,ஆர்ஸனிக். ஈயம்.•ப்ளோரைட், அலுமினியம் ஆகியவை கணையத்தில் பீட்டா செல்களை அழிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
உலகெங்கும் இன்றைய நாட்களில் பரவி வரும் வியாதியாக டயாபடீஸ் கருதப்படுவதால் தக்கபடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான விழிப்புணர்ச்சி ஒவ்வொருவரிடமும் மேம்பட வேண்டும்.
டாக்டர் மார்க் சிர்கஸ் எழுதிய சர்வைவல் மெடிசின் •பார் தி ட்வெண்டி பர்ஸ்ட் செஞ்சுரி (“Survival Medicine for the 21st Century” by Dr. Mark Sircus.) என்ற புத்தகத்தில் கெமிக்கல்களைப் பற்றிய ஏராளாமான விஷயங்கள் உள்ளன
ஈயம் உடலுக்கு பாதுகாப்பானதில்லை என்பதோடு அது ஹைபர் டென்ஷனை உருவாக்கி சிறுநீரக வியாதிகளை உருவாக்கி விடுகிறது!
சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கும் காட்மியம் கணையத்தில் சேரும் போது அது டயாபடீஸ் நோயாளிகளை வெகுவாகப் பாதிக்கிறது.
ஈயத்தை விட அதிக நச்சுத்தன்மை கொண்ட மெர்க்குரி, இன்சுலின் கொண்டிருக்கும் சல்பர் உள்ள கிராஸ்-லிங்குகளைப் பாதிக்கிறது!
ஜங்க் புட் என்று நாம் அழைக்கும் •பாஸ்ட் உணவில் ஏராளமான கெமிக்கல்கள் கலந்துள்ளன.
உதாரணமாக சிக்கனை எடுத்துக் கொண்டால் அதில் ஏராளாமான ஆர்சனிக் கூட்டுப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது டயாபடீஸ் நோயாளிகளுக்குப் பெருத்த அபாயத்தை விளைவிக்கும்.கோழிக்குஞ்சுகளை புஷ்டியாகக் காட்ட ஆர்சனிக் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளை வெளேரென மாவு இருக்கிறதே என்று சந்தோஷப்படக்கூடாது! அதில் அலாக்ஸன் (alloxan) என்ற கெமிக்கல் கலப்பதாலேயே அந்த கவர்ச்சி மயமான வெள்ளை நிறம் கிடைக்கிறது.
இந்த அலாக்ஸனை ஒரே ஒரு டோஸ் கொடுத்தவுடனேயே எலிகளுக்கு டயாபடீஸ் வந்து விட்டது!
சந்தைகளில் அலங்காரமான வார்த்தைகளோடு ‘ஜெனிடிக்கலி மாடி•பைட் புட்ஸ்’ என்று வரும் உணவு வகைகள் மிக அபாயகரமானவை!இவை டயாபடீஸை தூண்டி விடுபவை என ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
அடுத்து குளிர்பான வகைகளைப் பார்த்தால் அங்கும் டயாபடீஸ் நோயாளிகளுக்கு அபாயம் காத்து இருக்கிறது!பென்ஸீன் என்ற கெமிக்கல் இவற்றில் உள்ளது. குளிர் பானங்களில் மிக பாதுகாப்பான பென்ஸீன் அளவு என்ன தெரியுமா? ஜீரோ-ஆம் பூஜ்யம் தான்! அது இருக்கவே கூடாது!
அடுத்து உணவு வகைகளில் கலக்கப்படும் அடிடிவ்ஸ் எனப்படும் கூட்டுபொருள்களும் டயாபடீஸ் நோயாளிகளைப் பாதிக்கும் என்று லிவர்பூல் பல்கலைக் கழக ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கிறது. நீலம் மற்றும் மஞ்சள் போன்ற கவர்ச்சிகரமான நிறங்களை ஏற்படுத்தும் வண்ண கெமிக்கல்கள் மிக அபாயகரமானவை என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
இது தவிர உடல் பருமனைக் கூட்டும் உணவு வகைகள் என்னென்ன அவற்றில் என்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன என்பதையும் அறிந்து கொண்டு அவற்றை விலக்க வேண்டுவது அவசியமாகிறது!
இப்படிப் பார்த்தால் வெளியில் அனாவசியமாக சாப்பிடும் ஜங்க் வகை உணவு வகைகளை விலக்கி விட்டு அவ்வப்பொழுது மூலப் பொருள்களை வாங்கி வீட்டில் சமைக்கும் கறிகாய் உள்ள பொரியல் மற்றும் கூட்டு வகைகள் உள்ளிட்ட உணவு வகைகளே சிறந்த உணவு என்று ஆகி விடுகிறது.
உடல் நலத்திற்காக ஜம்ப வகை உணவு வகைகளை விலக்கி விடுவது தானே நியாயம்! அதிலும் டயாபடீஸ் இருப்பவர்கள் கெமிக்கல்கள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி உணவு பாக்கட்டுகளில் உள்ள மேலுறைகளில் என்ன கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கவனமாய் படித்துப் பார்க்க வேண்டியது அவசியம்!
உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு உடல் பருமனாகாமல் பார்த்துக் கொண்டு சுறுசுறுப்பாய் இருப்பவர்க்கு எங்கிருந்து வரும் டயாபடீஸ்?
************************

Pic Source : http://www.healthaim.com/wp-content/uploads/2016/05/diabetes.jpg

ஆரோக்கியத்திற்கு உதவும் ஏழு இன்றியமையாத பொருள்கள்!

தமிழாக்கம்: ச.நாகராஜன்

கறி மசால் பொருள்கள், மருத்துவ உணவுகள், கை வைத்தியப் பொருள்கள் ஏழு இங்கே தரப்பட்டுள்ளன. இவை உங்கள் ஆரோக்கியத்தை அதிசயக்கத்தக்க விதத்தில் மீட்டுத் தருவதோடு உங்கள் வாழ்க்கையை நீடித்து இருக்கவும் வழி கோலும்:

  1. மஞ்சள்: இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது.கறி மசால் பொருள்களின் அரசன் என்று இதற்குப் பெயர். இந்தப் பெயருக்குக் காரணம் இல்லாமல் இல்லை! குறுகிய மற்றும் நீண்ட கால ஆதாயங்கள் இதை சூப்பர் உணவாக ஆக்குகிறது. எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும்,தோலுக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும், ஜீரண மண்டலத்திற்கும் ரத்த ஓட்டத்திற்கும் நரம்பு மண்டலத்திற்கும் இது ஆதரவாக இருக்கிறது. நோய்களை எதிர்க்கும் குர்க்குமினாய்ட்களை (மஞ்சளகம்) அதிகம் கொண்டிருக்கும் மஞ்சள் விதவிதமான வியாதிகளிலிருந்து உடனடி நிவாரணம் மற்றும் நிரந்தர நிவாரணம் தருவதால் அதற்கு ஈடு இணையில்லை.இன்று உயிர் கொல்லி நோயாகத் திகழும் புற்று நோயைத் தடுப்பதிலும், போக்குவதிலும் மஞ்சள் உதவுகிறது என்பதும் ஆய்வுகளின் மூலமாகத் தெரிய வருகிறது,

ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகின்ற மஞ்சளைப் பற்றிய ஆராய்ச்சிகள் மஞ்சளில் உள்ள முக்கியப் பொருளான குர்க்குமின் கீழ்க்கண்ட விஷயங்களை உறுதிப்படுத்துகிறது:

1) ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது,2) குறைந்த அடர்த்தி லிபோபுரோடீன் ஆக்சிகரணத்தைத் (ஆக்ஸிடேஷன்) தடுக்கிறது.3)இரத்தவட்டுகளின் குழுமுதலைத் (platelet aggregation) தடுக்கிறது.4)இரத்த உறைவையும் மாரடைப்பையும் தடுக்கிறது, 5)டயாபடீஸ் டைப் II க்கான அறிகுறிகளைத் தடுக்கிறது, 6)கீல்வாதம் போன்ற வாத நோயையும் (rheumatoid arthritis) தண்டுவட மரப்பு நோயையும் (multiple sclerosis) அல்ஜெமீர் நோயையும் தடுக்கிறது,7)ஹெச் ஐ வி நகலாக்கத்தை கட்டுப்படுத்துகிறது .

மேலும் இந்த ஆய்வுகள் தெரிவிப்பது: இது கட்டி உருவாவதைத் தடுக்கிறது. காயம் ஆறுவதை விரைவு படுத்துகிறது.கல்லீரல் காயத்திலிருந்து காக்கிறது, பித்தநீர் சுரப்பை அதிகரிக்கிறது. காடராக்ட் உருவாவதிலிருந்து காக்கிறது, நுரையீரலில் நச்சு சேர்வதிலிர்ந்தும் நார்ப்பெருக்கத்திலிருந்தும் (pulmonary toxicity and fibrosis) காக்கிறது.

  1. இயற்கையான சூரிய ஒளி:(வைட்டமின் டி)

துடிப்பான ஆரோக்கிய வாழ்விற்கு எளிதில் கிடைக்கக் கூடிய ஊட்டச் சத்து தரும் வைடமின் டியைப் போல வேறெதுவும் சுலபமாகக் கிடைப்பதில்லை. சூரிய ஒளியாலும் ‘அல்ட்ரா வயலட் பி’- யினாலும் (UVB) இயற்கையாகவே உடலில் உருவாகும் வைடமின் டி இதய குழலிய (cardiovascular) நோய், டயாபடீஸ், நாளமில்லா சுரப்பியின் சீர்கேடுகள் (endocrine disorders), தொற்றுக்கள், அங்கங்கள் பழுதாவது, மன நலம் குன்றுவதால் வரும் பிரச்சினைகள், நரம்பியல் சம்பந்தமான நோய்கள் தோல் வியாதிகள் ஆகியவற்றைத் தடுக்கிறது. சூரிய ஒளி ஆயுளை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி வைடமின் டி தரும் ஆரோக்கிய நலங்களைப் பற்றி வைடமின் டி கவுன்சில் ஏராளமான தகவல்களைத் தருகிறது.

  1. பாதாம்பருப்பு: பருப்பு வகைகளிலேயே அதிக ஊட்டச்சத்து உள்ள பருப்பு மனிதனுக்குத் தெரிந்த வகையில் பாதாம்பருப்பு ஒன்று தான்! வலி நிவாரணத்திலிருந்து இதர அனைத்திற்கும் சிறந்த வகையில் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிவாரணம் தருவது பாதாம்பருப்பே. பொட்டாசியம், மக்னீஷியம், வைடமின் E, இரும்புச் சத்து ஆகிய சத்துகள் பாதாமில் நிறைய உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதோடு,ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆரோக்கியத்திற்கு நலம் பயக்கும் விதத்தில் உடல் எடையையும் குறைக்கிறது.தினமும் ஒரு கைப்பிடி பாதாம்பருப்பைச் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதிருப்பதோடு மட்டுமல்ல தலைவலி, வீக்கங்கள் மற்றும் அஜீரணத்திலிருந்தும் கூட விடுதலை கிடைக்கும்.

4)  கமு கமு (Camu camu):  தென் அமெரிக்காவில் வளரும் ஒரு மூலிகை கமு கமு (Myrciaria dubia). இதில் வைடமின் சி அதிகம் உள்ளது. ஊட்டச்சத்து அதிகம் உள்ள பழம் இது. ஆரஞ்சுப் பழத்தை விட ஐம்பது மடங்கு அதிகம் வைடமின் சி இதில் உள்ளது, இது மூளை, நுரையீரல், தசைகள்,  கண்கள், இதயம் ஆகியவற்றைச் சீராக்கும் மனிதனின் பிரதானமான நரம்பு மண்டலத்திற்கு பாதுகாப்பை நல்கும்.கமு கமுவைப் பெர்ரிப் பழங்களாகவோ அல்லது  பொடி ரூபத்திலோ சாப்பிடுவது டெம்னிஷியா எனப்படும் மறதி நோயையும் போக்கும். பாக்டீரியா மற்றும் வைரல் தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.
5) சுத்தமான நீர்: சுற்றுப்பறத்திலிருந்தும் அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு வகைகளிலிருந்தும் நச்சு கெமிக்கல்களால் இடைவிடாது நமது உடல் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் உடலின் ஆரோக்கியமான உட்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கு சுத்தமான நீர் அவசியம். உடல் வறட்சியால் ஏராளமான உடல் சீர்கேடுகள் ஏற்படுவதோடு பல உடல் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாவதன் காரணம் ப்ளோரைட் இல்லாத, சுத்தமான, நீர் கிடைக்காமல் இருப்பதேயாகும். ஆகவே லட்சக்கணக்கானோர் தேவையற்று மருந்துகளைச் சாப்பிடுகின்றனர். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வைப் பெற அதிகமான சுத்த நீரை அருந்துதல் வேண்டும்.

6.முட்டைக்கோசு இனக் கறிகாய்கள் (Cruciferous vegetables): ப்ராக்கோலி, காலிஃப்ளவர்,முள்ளங்கி,ப்ரஸ்ஸல்ஸ் ஸ்பரவுட்ஸ் எனப்படும் கிளைக் கோசு, முட்டைக்கோசு மற்றும் முட்டைக்கோசு இனத்தைச் சேர்ந்த கறிகாய்கள் சல்பர் அதிகம் கொண்டவை. இன்று நீடித்த பல வியாதிகளைத் தரும் வீக்கத்தை எதிர்ப்பதில் இவை ஆற்றல் கொண்டவை. சல்ஃபோராபேன் (sulforaphane) என்ற புற்றுநோய் எதிர்ப்புச் சத்தையும் அதிகம் கொண்டிருப்பதால் இரையக குடல்பாதை எனப்படும் கேஸ்ட்ரோ இன்டெஸ்டினல் ட்ராக்டில் உள்ள நச்சுகளை அகற்றி இவை உடல் திசுக்களைப் பழுது பார்த்து வளர வைக்கும்.
7) உள்ளிப்பூண்டு: உள்ளிப்பூண்டின் பலன்கள் ஏராளம். அதனால் தான் ஆரோக்கியத்தையும்  கட்டுடலையும் விரும்புவோர் அனைவரும் இதை சாதாரணமாகவே உண்கின்றனர். அல்லிசின் (allicin) என்ற மருத்துவப் பொருள் உள்ளிப்பூண்டில் நிறைய இருக்கிறது. ஆகவே உடல்நிலையில் நல்லவிதத்தில் பெரிய மாற்றத்தை உள்ளிப்பூண்டு தருகிறது.ஜலதோஷம், ப்ளூ ஆகியவற்றைத் தடுப்பதோடு, இது, புற்று நோய் அபாயத்தையும் நீக்குகிறது. மருத்துவ குணம் உள்ள அல்லிசின் புதிதாக எடுக்கப்பட்ட உள்ளிப்பூண்டில் நிறைய இருப்பதால் அதைப் பயன்படுத்துதல் நலம்.

ஆக எளிதில் கிடைக்க்க் கூடிய இந்த ஏழு இன்றியமையாத உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்து கொள்ளலாம்.

Pic Source : http://wallpapersdsc.net/wp-content/uploads/2016/09/Broccoli-Wallpaper.jpg

அளவறிந்து வாழ்க!

ச.நாகராஜன்
உலகில் யாரும் சொல்லாத சூத்திரங்களைத் தொகுத்துச் சுருக்கமாக ஆங்காங்கே குறளில் சொல்லியுள்ளார் வள்ளுவர்.
வாழ்க்கை நெறிகளைப் பற்றிச் சொல்லும் போது அளவறிந்து என்ற வார்த்தையை அவர் மூன்று இடங்களில் பயன்படுத்துகிறார்.
அளவறிந்து உண்க!
ஒன்றின் மூலம் பெறுதற்கரிய வாழ்க்கையைப் பெற்ற போது நீண்ட நாள் வாழ வழியைச் சொல்கிறார்.

அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு குறள் 943

அளவறிந்து உண்க என்பதன் மூலம் ஆழ்ந்த பொருளை விளக்குகிறார். அதனால் உடம்பு பெற்ற பயனைக் கொண்டு நீண்ட நாள் வாழ முடியும்.
அளவறிந்து கற்க!
அடுத்து அளவறிந்து கற்க என்கிறார் அவர். கற்க வேண்டியதைக் கசடறக் கற்பதோடு அளவறிந்து கற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு குற்ள் 725
இதனால் எந்த அவையின் முன்னாலும் பேசலாம். உலகப் பெரும் தலைவர் ஆகலாம் என்பது அவரது வழிகாட்டுதல்!
அளவறிந்து ஈக!
அடுத்து பெற்ற பொருளைப் பேணிக் காக்க ஒரு வழியையும் கூறுகிறார். அளவறிந்து ஈக என்பது அவரது அறிவுரை.
ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள் போற்றி வழங்கும் நெறி குறள் 477
வருவாய்க்குத் தக்கபடி கொடுக்க வேண்டும் என்பது சுருக்கமான சூத்திரம் போன்ற அறிவுரை.
ஒன்றின் மூலம் நீண்ட நாள் வாழ வழி தந்து, இன்னொன்றின் மூலம் அவையஞ்சா தலைமை கொள்ள வழி காட்டி கடைசிக் குறளின் மூலம் சம்பாதித்த பொருளைப் போற்றும் நெறியைக் காட்டுகிறார்.
அளவறிந்து வாழவில்லையேல்?
இப்படி அளவறிந்து வாழவில்லை என்றால் என்ன ஆகும்?
அதற்கும் அவர் பதில் தருகிறார் இப்படி:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல இல்லாகித் தோன்றாக் கெடும் குறள் 479
தன் வலிமையை அறிந்து வாழ்; தன் வரவை அறிந்து வாழ்; தன் அறிவை அறிந்து வாழ்; தன் உடம்பை அறிந்து வாழ்; அப்படி வாழவில்லையேல் அது வாழ்க்கை நன்றாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தைக் காட்டி உன்னைக் கெடுத்து விடும் என்கிறார் அவர்.
அறம் நிற்கும் இடம்!
அளவறிந்தார் நெஞ்சத் தறம் போல் நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு குறள் 288
அறம் எங்கே நிற்கும்? உலகின் தர்ம மரபுகளை அறிந்து வாழ்க்கையை அளவோடு வாழ வேண்டும் என்று நினைப்பவரின் மனதில் அறம் நிற்கும். அது எப்படி இருக்கிறது என்றால் பாவச் செயல்களைச் செய்வதிலேயே பழக்கப்பட்டவர்களின் மனதில் வஞ்சனை நீங்காது நிலைத்துக் குடி கொள்வது போல இருக்கும்!
என்ன அழகான விளக்கம்!
அளவறிந்து என்ற சொல்லின் பொருளை அறிய வள்ளுவரின் குறளில் அளவு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்திய இதர சில குறள்களையும் படித்தால் முழுப் பொருளையும் அறியலாம்.
வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டிய நூல் வள்ளுவரின் குறள்!
அதைப் பயில்வது தமிழரின் பாக்கியம்!

Pic Source : valluvaredutrust.org/wp-content/uploads/2014/10/valluvar.png

********

எலும்புப் புற்றுநோய் – ஒரு விழிப்புணர்வு

-மருத்துவர்.கார்த்திகேயன்

கட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான,அசுர வேகத்தில் பல்கி பெருகும் செல்கள் தான் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்ற பகுதிக்கு பரவும் தன்மை புற்று நோய் கட்டிகளுக்குஉண்டு. புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து விட்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விசயம்.எலும்புக் கட்டிகளில் உள்ள இருவகைகளைப் பார்ப்போம்.
1) பரவும் தன்மை கொண்டது.
2)பரவாத தன்மை கொண்டது என 2 வகைகள் உள்ளன. பரவும் கட்டியை ‡ மாலிக்னட் ட்யூமர் என்றும் பரவாத புற்று நோயை ‡ பினையின் ட்யூமர் என்றும் அழைப்பர். பரவாத கட்டியைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை.இதற்காகசெய்யப்படும் சிகிச்சைக்கு பலன் உண்டு. ஆனால் பரவும் தன்மை உடைய கட்டிக்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.இந்த எலும்புப்புற்று நோயை சாதாரணமான பரிசோதனையிலேயே 60 சதவிகிதம் உறுதிப்படுத்தி விடலாம். எனினும் எக்ஸ்ரே, போன் ஸ்கேன்(யநுஹிசி றீளீபுஹி) எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் மிக மிகத் துல்லியமாக பரவியுள்ள அளவையும் கண்டறிய முடியும். மேலும் என்ன வகையான புற்றுநோய் அதற்கு என்ன சிகிச்சை தேவைப்படும் என்பதை திசுப் பரிசோதனை செய்து 100% உறுதியாகக் கூறிவிடலாம்.
புற்றுநோயிலுள்ள 2 வகைகள்:
1. முதல் நிலை எலும்புப் புற்று:
20 வயதுக்கு கீழ் அல்லது 50, 60 வயதுகளில் தாக்குகிறது.இந்த முதல் நிலை எலும்புப் புற்று நோயில் எலும்பில் புற்று நோய் தோன்றி மற்ற இடங்களுக்கு பரவும்.முதல் நிலை எலும்புப் புற்றுநோய் தோள் பட்டை, கை மணிக்கட்டு, கால் முட்டி போன்ற இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
2. இரண்டாம் நிலை எலும்பு புற்று:
60 வயதுக்கு மேல் உள்ள மனிதர்களையே தாக்குகிறது. இது உடலின் வேறு பாகத்தில் தோன்றிபுற்றுநோயாகப் படிப்படியாக பரவி எலும்பினை பாதிக்கும் புற்று நோய் இரண்டாம் நிலையாகும். இந்த எலும்புப் புற்றுநோய் அறிகுறிகள் நோயாளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. மேலும் ஏற்படும் இடங்களைப் பொறுத்தே புற்றுநோய் அறிகுறிகளை அறிய முடியும். வீக்கம், வலி, அசைக்க முடியாத நிலை, எலும்பு முறிவு இது போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியமான ஒன்றாகும்.
சிலபேருக்கு சாதாரணமான மூட்டு வலி ஏற்படலாம். மாத்திரைகள் எடுத்த பின்பு இது சரியாகி விடும். ஆனால் மாத்திரைகளுக்கும் பலனளிக்காமல் வலியும், வீக்கமும் தொடர்ந்து இருந்தால் புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
சிகிச்சை முறைகள் :
1. ஹீமோ தெரபி 2. ரேடியோ தெரபி
3. அறுவைச் சிகிச்சை
ஹீமோ தெரபியில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கும்,கட்டுப்படுத்தும் மருந்துகளை உண்ண வேண்டும்.
ரேடியோ தெரபியில் கதிரியக்க அலைகள் மூலம் கேன்சர் செல்கள் அழிக்கப்படும்.
அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியை முற்றிலுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவது.
எலும்புப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றி விட்டு மற்றொரு இடத்தில் இருந்து எலும்பை எடுத்து, மாற்றி வைப்பது அல்லது Stainless Steel ல் செய்த எலும்பை போன்ற அமைப்பு கொண்ட கம்பியை பொருத்துவது அல்லது இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாற்று எலும்புகளைப் பொருத்தி ஊனமாகும் சூழ்நிலையைத் தவிர்க்லாம். இதனால் தரமான வாழ்க்கை வாழ வழி செய்யலாம்.

Pic Credit : www.cancer.gov/PublishedContent/Images/images/cancer-types/cthp/boneanatomy_enlarge.jpg

dr-selvam

Doctor Selvam, MD (Derm)

சொரியாசிஸ் என்றால் என்ன?
சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கட் தொகையில் 1%-2% மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள். தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும். இதன் விளைவாக தோல் மந்தமாகிவிடும். புரையோடும்.தோலிலுள்ள அதிகரிக்கப்பட்ட பல சிறு இரத்த நாளங்கள் வீங்கி விடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.
சொரியாசிஸ் எவ்வாறு காணப்படும்?
சொரியாசிஸ் என்பது தோலில், பொடித்து விழும் புரையுடன் கூடிய சிவப்பு திட்டுகளாகக் காணப்படும். உடலின் எந்தப் பாகமும் தாக்கப்படலாம்.முழங்கை, முழங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படும்.
சொரியாசிஸ் தொற்றும் தன்மையுடைத்ததா?
சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்குப் பரவாது. குறைந்த சுகாதாரத்தின் காரணமாக இது ஏற்படாது.
சொரியாசிஸை எது ஏற்படுத்தும்?
சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சுழல் நிலை இவற்றின் இணைப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 1/4‡1/3 பங்கினர் அதே நோயுடைய குடும்பத்திலிருந்த வந்வதர்களே. சிலர் விசயங்களில் மரபு நிலை பங்காற்றுகிறது.
உடல், மன அழுத்தங்கள், குரல்வளைத்தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டிஹைபர்டென்சிவ் போன்ற சில மருந்துகள், சொரியாசிஸை மேலும் மோசமாக்கும்.
குடி பழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்த கடினமாக்கும்.
சொரியாசிஸ் பிற சூழ்நிலைகளுடன் தொடர்புடையதா?
ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் எற்படும்.

சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், வண்ண மாற்றத்தையும், நகங்கள் தடிப்பையும் எற்படுத்தும்.
சொரியாசிஸ் யாருக்கு வரும்?
சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கும்.
செரியாசிஸ் வழக்கமாக 20வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு கால மாற்றங்கள் ஏற்படும்.
சொரியாசிஸக்கு என்ன மருத்துவங்கள் கிடைக்கின்றன?
மேற்பூச்சுக்கள்:
இவற்றுள், ஈரப்படுத்துவன , கரி எண்ணை டித்ரானால், கால்சியாட்ரியல் டாபிகல் ஸ்டீராய்ட்ஸ் அடங்கும்.
சொரியாசிஸால் பெரும்பாலான மக்கள் லேசான நோயைப் பெற்று, டாபிகல் கிரீம்களைப் பயன்படுத்துவதால் நல்ல நிவாரணத்தைப் பெறுகிறார்கள்.
போட்டோதெரபி :
அல்ட்ராவைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.அல்ட்ராவைலட் ஒளி அது UVபு அல்லது UV இருந்தாலும் சரி, தொடர்ந்து பல மாதங்கள், மருத்துவம் செய்து கொண்டால், சொரியாசிஸை நன்கு குணப்படுத்தலாம்.
மருந்துகள் :
தீவிர சொரியாசிஸக்கு, உங்கள் தோல்துறை வல்லுனர் வாய்வழி கொள்ளும் மெதாட்டுரக்ஸாட் அசிட்ரெடின், சைக்ளோஸ்போரின், சல்பா சலாஜைன் போன்ற மருந்து வில்லைகளை எழுதித் தரலாம்.
இத்தகையை மருந்துகள் சில சமயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசேதனை செய்து கொள்ள வேண்டும்.
சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக் கூடாதவை:
1.தோலைச் சொரியாதீர்கள், ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும். மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்தி விடாதீர்கள்.
2.சொரியாசிஸைக் குணப்படுத்த எழுதித் தரப்பட்ட மருந்து வில்லைகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்தி விடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும். மருத்துவத்தைத் தொடர்ந்து சீராக எடுத்துக் கொள்ளுங்கள்.
3.தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், புரையேற்படுவதையும் தடுக்கும்.
4.சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே. ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
5.மன அழுத்தம் சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும், அமைதியாகயிருக்க, உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக் கொள்ளவும், விருப்பு எடுத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

Pic Source: www.taseerlabs.com/Skin/images/image079.jpgபுகழ்பெற்ற மாரத்தான் ஓட்டங்களும், கூட்டமாக ஓடும் ஓட்டங்களும்

dr-durai-singh  Dr.Durai Singh.

நூற்றுக்கணக்கில் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் மதரத்தான் போட்டிகள் மிகவும் பிரபலம். அவை பெரும்பாலும் முழு மாரத்தான் தூரமான 26 மைல்கள் வரை ஓட வேண்டியது வரும். ஆனால், போட்டிகளில் பங்கேற்கும் பெரும்பாலானோர் போதுமான பயிற்சி பெறாத வீரர்கள். ஆகவே, அவர்களுக்கு உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் கால்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று தெரிய வாய்ப்பில்லை. தொடர்ச்சியான பயிற்சி முறைகளால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆகவே, ஒவ்வொரு மாரத்தான் போட்டியின்போதும் ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். அதில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர ஓட்டத்தால் ஏற்படும் நீர் இழப்பு, அதிக உஷ்ணம், வெப்பநிலைக் குறைவு, குளுக்கோஸ் குறைவு (குறிப்பாகச் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு (போன்றவை பற்றிய விழிப்புணர்வு அவசியம். மேலும், இவற்றால் உடல்நிலையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் பற்றிய அறிவும் இன்றியமையாதது.
மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை மருத்துவமனை வசதிகளும் மிகவும் அவசியம். இந்த மருத்துவக் குழு திட்டமிட்ட முறையில், முறையான விழிப்புணர்வோடு போட்டிக்கு முன்னரே ஏற்பாடு செய்வது மிகவும் அவசியம்.
நீர்ச்சத்துக் குறைபடுதல்
நீண்ட தூர மாரத்தான் போட்டியின்போது உடல் எடையில் 5 முதல் 6 சதவீதம் குறைவு அதாவது 3-4 லிட்டர் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இது அந்த இடத்தில் உள்ள தட்பவெப்ப நிலையைப் பொறுத்தும் வேறுபடுகிறது.
இதனால், இரத்தக் குழாய்களில் இந்த நீர் இழப்பைச் சரிசெய்ய குழாய் இறுக்கம் ஏற்படுகிறது. இது போட்டி முடிந்து சில மணிநேரம் வரை நீடிக்கிறது. ஆகவே, மாரத்தான் போட்டி முடியும் இடத்தில் மருத்துவக் குழு மிகவும் அவசியம். சில சமயங்களில் நூற்றுக்கணக்கானோர் ஒரே சமயத்தில் போட்டியை நிறைவு செய்வர்.
மேலும், போட்டியின் இடையே வீரர்களுக்கு நீர் இழப்பைச் சரிசெய்யும் வகையில் குளுக்கோஸ் பானங்களைக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்வது அவசியம்.
இந்த வகையான குறைபாடுகள் ஏற்படும் வீரர்களை உடனடியாக ஓய்வு பெறச் செய்து, கால்களை உயரமாக வைக்க வேண்டும். மேலும் போதுமான பானங்களை அருந்தச் செய்ய வேண்டும்.
உடலில் ஏற்படும் அதிகப்படியான உஷ்ணம்
நீண்ட தூர ஓட்டத்தின்போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடலின் 75 சதவீதம் சக்தியானது எரிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு அதிகமான உஷ்ணமானது, உடலில் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
சில காரணிகள் இதைப் பாதிக்கின்றன. மந்தமான (அ) ஈரப்பதம் நிறைந்த வானிலை, அதிகப்படியான ஆடைகள், அதிகப்படியான வெப்பநிலை, குறைவான தேக ஆரோக்கியம், உடல்பருமன், வயது, ஜலதோசம் மற்றும் ப்ளூ காய்ச்சல் போன்றவையாகும்.
இதைத் தவிர்க்க வீரர்களுக்குப் போதிய பயிற்சிகளும், இவை பற்றிய விழிப்புணர்வும் கொடுக்க வேண்டியது அவசியமாகும். (இவை குறிப்பாக இராணுவப் பயிற்சிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், அவர்கள் அதிகப்படியான ஆடைகள் அணிவதால்) இதனால் ஏற்படும் அறிகுறிகள் பள்ளி வீரர்களும், முதல் உதவி கொடுப்பவர்களும் அறிந்திருக்க வேண்டும். அவையாவன,
குளிர் போன்ற உணவு, தலைவலி (அ) அழுத்தம், நிலையில்லாமை, அதிமான எச்சில் சுரத்தல், வியர்வை வருவது குறைபடுதல், நடையில் மாற்றம், மனக் குழப்பம், பேச்சில் தடுமாற்றம் போன்றவை சில அறிகுறிகளாகும். மேலும் மலவாய் வெப்ப நிலையைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும்.
இதை நிவர்த்தி செய்யப் பாதிக்கப்பட்ட நபரை நல்ல காற்றோட்டமான, மற்றும் அவரது ஆடைகளைத் தளர்த்தியும், குளிர் நீரினால் (அ) ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
வெப்பநிலை குறைபடுதல்
இதுவும் நாம் கவனிக்கவேண்டி முக்கியமான ஒன்றாகும். மலவாய் வெப்பநிலையைக் கணக்கிடுவதன் மூலம் அறியலாம். மேலும், சில காரணிகள் வெப்பநிலையைக் குறைக்கின்றன. அவையாவன,
குளிர் வானிலை, மழை, மெதுவாக ஓடுதல் மற்றும் மிகவும் குறைவான ஆடைகள் இவை குறிப்பாக ஓட்டத்தின் இரண்டாவது பாதியில் மெதுவாக ஓடுவதால் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் சோர்வு காரணமாக இது நேரிடுகிறது.
இதைச் சரிசெய்ய உடனடியாக ஈரமான ஆடைகளை மாற்ற வேண்டும். ஒரு கம்பளியினால் போர்த்தி வெப்பநிலையைச் சரி செய்யவும் மேலும், அவருக்குச் சூடான பானங்களை பருகக் கொடுக்கலாம்.
தீவிரமான பயிற்சிகளினால் உடலில் ஏற்படும்
பாதிப்புகள் மாதவிலக்கு நின்று போதல்
மாரத்தான் வீராங்கனைகளுக்கு இந்தப் பாதிப்பு வழக்கமாக ஏற்படுகிறது. இது பெரும்பாலும் மெலிந்த தேகம் கொண்ட, குறைவாhனன எடையுள்ள மற்றும் போட்டிகளின்போது ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தத்தினாலும் ஏற்படுகிறது.
இதை ஆய்வு செய்ததில் பெண்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு மாதம் தீவிரப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒரு குழுவினர் தங்களுடைய உடல் எடையைக் குறையாமல் பார்த்துக் கொண்டனர். இதில் உடல் எடை குறைவு ஏற்பட்டவர்களுக்குப் பாதிப்பு அதிகம் காணப்பட்டது அதாவது மாதவிடாய் தள்ளிப்போகுதல் மற்றும் லூட்டினை கார்போன் (தூண்டும் ஹார்மோன்) இழப்பும் ஏற்பட்டது. இவ்வாறாக ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்பட்hல் மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.
மேலும் மாதவிடாய் சீக்கிரம் ஏற்பட்டாலும் பிரச்சனைதான். இதனால் தொடர்ச்சியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பினால், திசுக்களின் அசாத்திய வளர்ச்சியால் கேன்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
தீவிரப் பயிற்சிகளால் ஏற்படும் மலட்டுத் தன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் சுரப்புப் பாதிக்கப்படும் போது கர்ப்பப்பையில் வீக்கமும் (அ) சுருக்கமும் ஏற்படலாம். மேலும், இவர்களுக்கு எலும்புகளில் கால்சியம் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இரத்த சோகை
நீண்ட தூர மாரத்தான் வீரர்களுக்கு உடம்பில் உள்ள மொத்த ஹீமோகுளோபின் அளவு அதிகமாகிறது. மேலும், இவர்களுக்கு இரும்பு, சத்து வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறுவதாலும் இரத்தசோகை ஏற்படுகிறது.
சில சமயங்களில் இது மோசமான விளைவுகளைக் கூட உண்டாக்கும். உதாரணமாக இரத்தத்தின் திரவத்தன்மை குறையும் பட்சத்தில் இது மரணத்தைக்கூட உண்டாக்கும். இதற்குத் தக்க உதாரணம், 19 டச்சு வீரர்களின் மரணம். மற்றும் பெல்ஜியம் சைக்கிளின் வீரர்களின் மரணம்.
ரேப்டோமையோலைசிஸ்
நீண்ட தூர மராக்லின் வீரர்களுக்கு இரத்தத்தில் கிரியேட்டின் கைனோல் மற்றும் சில பிளாஸ்மோ புரோட்டின் அளவு அதிகமாகிறது. மேலும், புரோட்டின், தசைகளிலும் வெளியேறுவதாலும் இது ஏற்படுகிறது. இது இதயத்தைப் பாதிக்கிறது.
குறிப்பு: (இதே பாதிப்புகள் மற்றும் மாற்றங்கள் மாரடைப்பு ஏற்படும் இதய நோயாளிகளுக்கும் ஏற்படுகிறது)
இதனால், மாரத்தான் வீரருக்கு மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் மலையின்மேல் கீழாக ஓடுதல், ஸ்வாட்ஜம் (தவளை ஓட்டம்), மேலும் சில இராணுவப் பயிற்சிகள் சில சமயங்களில் மோசமான விளைவுகளை உண்டாக்குகின்றன.

 

பட உதவி : expertenough

 

 

dr-roy

குழந்தைகளைப் பாதிக்கும் எலும்புத் தொற்றுநோய்.

Dr.Francis Roy – M.S., MCh., (Ortho)

துடுக்குத்தனமும், அதிக சுறுசுறுப்பும் உள்ள குழந்தைகளை அனைவருமே விரும்புவர். ஆனால் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் மீது தனிகவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். குழந்தைகளுக்கு தவறி கீழே விபந்து அடிபட்டு, இரத்தக் காயம், வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டு விடுகிறது. மோசமான மிகவும் ஆழமான வெட்டுக் காயங்களால் நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் தொற்றுகள் சில சமயம் எலும்புகளைப் பாதித்து ஆஸ்டியோமைலிட்டிஸ் என்கின்ற எலும்பு தொற்று நோயை உருவாக்கும். இந்த எலும்பு தோற்றினை ஸ்டெப்பெல்லோ காக்கஸ் ஏரியஸ் என்கின்ற பாக்டீரியாவே பொதுவாக ஏற்படுத்து கிறது.மேலும் பல பாக்டீரியாக்களினாலும் கூட ஏற்படலாம். அவை நோயாளியின் வயது நோயாளியின் தாக்கப்பட்டுள்ள எலும்புகளையும் பொறுத்ததே.
குழந்தைகளுக்கு கை, கல்களில் உள்ள எலும்புகளையும், தோள்பட்டை எலும்புகளையும் ஆஸ்டியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த எலும்புத் தொற்று தாக்கக்கூடும்.
எலும்புகளில் தொற்று எப்படி ஏற்படுகிறது?
எலும்புகளில் பாக்டீரியா தொற்றுவது பல வழிகளில் ஏற்படுகிறது. உடலில் பாக்டீரியாவனது ஒரு இடத்தில் தொற்றிக் கொண்ட பிறகு இரத்த நாளங்களின் வழியாக எலும்புகளுக்குள் நுழைகின்றன. இதற்கு யஹமட்டோஜெனஸ் ஆஸ்டியோ மைலிட்டிஸ் என்று பெயர் பெரும் பாலானவர்களுக்கு இந்தத் தொற்றே ஏற்படுகிறது.
சில சமயம் நோயின் மேற்பகுதியில் ஏற்படும் மிக மோசமான/ஆழமான வெட்டுக் காயங்களின் வழியாக உடலுக்குள் நுழையும் பாக்டீரியா க்கள் திசுக்களின் ஊடாகவும், எலும்புகள் உடைந்து தோலின் மேற்பகுதி வரை தெரியுமளவிற்கு ஏற்படும் காயங்கள் மூலமும் ஆஸ்டியோமைலிட்டிஸ் உருவாக காரணமாக ஆகி விடுகிறது.
வயதானவர்களிடம் கால் மற்றும் பாதங்களில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அந்த இடத்தில் நடைபெறும் ரத்த ஒட்டத்தினாலும் இந்தத் தொற்று ஏற்படலாம்.
இதன் நோய் அறிகுறி குணங்கள என்ன?
(ஆஸ்டியேமைலிட்டிஸ்) எலும்புகளில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விட்டது என்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளில் அதிக வலி ஏற்படும். அந்த இடத்தைச் சுற்றிலும் கதகதப்பாக இருக்கும். சிலபேருக்கு காய்ச்சல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட எலும்புகள் மேற்புறத் தோலில் புண்கள் ஏற்படலாம், அல்லது சிவந்து வீங்கியும். தடித்தும் இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளிடம், பச்சிளம் சிறார்களிடமும் இது எந்த ஒரு வலியோ மேற்குறிப்பிட்ட அறிகுறிகளையோ இது வெளிப்படுத்தாது. மேலும் வயதான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தக் குழாய்கள் நரம்புகளால் இந்த வலியை உணர முடிவதில்லை.
மருத்துவ சிகிச்சைகள் என்ன?
பாதிக்கப்பட்ட எலும்புகளில் வலி அல்லது வீக்கம், ஆனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக ஒரு எலும்பு சிகிச்சை நிபுணரை கலந்து ஆலோசிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால் ஆஸ்டியோ மைலிட்டிஸ் நமது எலும்புகளுக்கு பெரிய ஆபத்தை உருவாக்கும் என்பதனை மறந்து விட கூடாது.
நாம் மருத்துவரை அணுகும் பட்சத்தில், அவர் நமது உடலை பரிசோதித்து பாதிக்கப்பட்ட இடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள், எலும்புகள் முறிவுகள் பற்றி சில கேள்விகளையும், விபரங்களையும் கேட்பர். அலர்ஜி, மற்றும் வேறு ஏதாவது நோய்க்கான சிகிச்சைகள் ஏதும் எடுத்துக் கொண்டிருக்கிறோமா என்பதனையும் தெரிந்து கொண்ட பிறகு, இரத்தப் பரிசோதனையை செய்ய வேண்டும்.
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையின் மூலமும் நோய் தொற்று உள்ளதா என கண்டறிய முடியும்.திடீரென தோன்றி மறையும் ஆஸ்டியோ மைலிட்டிஸ் எலும்பு எக்ஸ்ரே போன்றவற்றின் மூலம் கண்டறிய முடியும் என்றாலும், எலும்புகளில் பாக்டீரியா தொற்று இருப்பதை உறுதி கேட்பதற்காக மருத்துவர் போன் ஸ்கேன் (யலிஐe விஉழிஐ) செய்ய வேண்டும் என அறிவுறுத்துவர் எலும்பு ஸ்கேன் மூலம் துல்லியமாக நோய் பாக்டீரியாவை க்ணடறியலாம். சில பேருக்கு னியூணூ ஸ்கேன் எடுக்கச் சொல்வது ஏனென்றால் எவ்வளவு தூரம் எலும்புகளில் பாக்டீரியா பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிவதற்காகத்தான்.
இதற்கான சிகிச்சைகள் தற்போது தாராளமாக அனைத்து நகரங்களிலும் கிடைக்கின்றன. பாதிக்கப்பட்ட எலும்புப் பகுதியில் இருந்த ஊசி மூலம் பாக்டீரியாவினை எடுத்து அது எந்த வகையான பாக்டீரியா என சோதனை மூலம் கண்டறியப்படும் அதன் பிறகு அதற்கு தந்த ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும்.
மேலும் சில பேருக்கும் எலும்புகளில் துளை சிதைவு ஏற்பட்டு, சீழ் பிடித்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட எலும்பு சிதைவுகளில் உள்ள சீழ், போன்றவற்றை வெளியே எடுத்து விடுவதன் மூலம், அந்த எலும்புப் பகுதி சுத்தம் அடைகிறது. இதனால் விரைவாக குணமடையலாம்.
ஆஸ்டியோ மைலிட்டிஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் உங்களுக்குத் மருத்துவமனையில் தங்கி ரத்த நாளங்களின் ஊடாக (ணூஐமிrழிஸeஐலிற்வி) ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டு தொற்றினை எதிர்த்து அழிக்க வேண்டியது இருக்கலாம். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் (வாய் வழியாகப் மாத்திரை மூலம் சில வாரங்களுக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்நோய் வருவதற்கு காரணமான ஆழ்ந்த வெட்டுக் காயங்கள் இரத்தக் காயங்கள் போன்றவை ஏற்படும். பட்சத்தில் சோப் அல்லது குழாயில் ஊற்றும் நீரினால் நன்றாக குறைந்தது 5 நிமிடம் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு காயம்பட்ட இடத்தில் ஆன்டிபயாடிக் கிரீம் தடவ வேண்டும்.
அக்காயத்தை சுத்தமாக வைக்க கிருமிகள் நீக்கப்பட்ட வலைத்துணியால் மூட வேணடும். அதில் கிருமிநாசினி மருந்தை தடவ வேண்டும். ஒன்றில் மட்டும் கவனம் தேவை. காயம் ஆறாமல் இருந்தாலோ அல்லது அதில் தொடர்ந்து வலி இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.