சிரித்து மகிழுங்கள்! சிறப்புடன் வாழுங்கள்!
—————————————————————–
ச.நாகராஜன்
காமடி காட்சிகளை ஒளிபரப்பாத சேனலே இல்லை. தினமும் ஒரு அரை மணி நேரம் ஏதேனும் ஒரு காமடி நிகழ்ச்சியைப் பார்ப்பதைப் பழக்கமாக வைத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் சிரித்து மகிழ்ந்தால் சிறப்புடன் நோயின்றி வாழ முடியும் என்று பெரியோர்கள் சிரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு தங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலமாகவும் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். சிரித்தால் சிறப்பாக வாழலாம் என்பதை அறிவியலும் ஆதாரபூர்வமாகக் கூறுகிறது.
அமெரிக்காவை கடுமையான உள்நாட்டுப் போர் காலத்தில் வழி நடத்திச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன் எப்போதும் தனது மேஜையின் ஓரத்தில் ஒரு ஜோக் புத்தகத்தை வைத்திருப்பாராம்.
கடுமையான கவலை ஊட்டும் செய்தி வந்தாலோ யாராவது அவரை கோபமுறச் செய்தாலோ உடனடியாக அந்தப் புத்தகத்தைப் புரட்டிப்படித்துமனம்விட்டுச் சிரிப்பாராம்.
நகைச்சுவை உணர்வு மட்டும்இல்லையென்றால் நான் இறந்திருப்பேன் என்றார் அவர்.
இதே வாசகத்தை மகாத்மா காந்திஜியும் கூறினார்: நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்குஇல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்றார் அவர்!
செலவில்லாமல் மனிதன் மகிழ்ச்சி பெற சிறந்த எளிய வழி சிரிப்பது தான்! உலகில் உள்ள உயிரினங்களில் மனித இனம்மட்டுமே சிரிப்பினால் அலுப்பையும் கவலையையும் போக்கிக் கொண்டு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் உடனடியாகப் பெற முடியும்; நோயைப் போக்கி ஆரோக்கியத்தை அடைய முடியும்; தொத்து வியாதியை விட வேகமாக,மிக சுலபமாக மகிழ்ச்சி என்னும் அரிய நிவாரணத்தை கவலையுற்றோருக்குப்பரப்பமுடியும்! சிரிப்பே சிறந்த மருந்து என்பது எல்லா நாட்டு மொழிகளிலும் உள்ள தொன்று தொட்டு இருந்துவரும் பழமொழி! இந்த பொன்மொழியை இப்போது நவீன மருத்துவம் பலமாக ஆமோதிக்கிறது.
சிரிப்பு வலியைக் குறைப்பதோடு டென்ஷனை நீக்கி நோயை விரட்டும் என்றுமருத்துவர்கள் உறுதி கூறுகின்றனர். அமெரிக்கன்ஜர்னல் ஆ•ப் தி நேஷனல் கான்ஸர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை புதிய உண்மையைத் தெரிவிக்கிறது: பத்து ஆரோக்கியமான மனிதர்களிடம் ஒரு மணி நேரம் சிரிப்பு வீடியோ காஸட் போட்டுக் காண்பிக்கப்பட்ட போது அவர்கள் சிரித்துச் சிரித்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் உடலில் நோயைத் தீர்க்கும் ஒரு முக்கியமான இரசாயனப் பொருளான இன்டர்•பெரான் காமா (interferon-gamma) அதிக அளவில் சுரந்ததாம். சுவாச சம்பந்தமான நோய்கள்மற்றும் இதர தொத்துநோய் கிருமிகளை எதிர்த்து போராடும் கெமிக்கல்களும் அதிகமானதாம்.அவர்கள் சிரிக்கச் சிரிக்க மூளைஇயற்கையான வலிக் கொல்லிகளை வெளியிட்டதாம். டென்ஷனை உருவாக்கும் ஹார்மோன்கள் அவர்கள் உடலில் மிகவும் குறைந்து கொண்டே போனதாம்!
இதய நோய் நிபுணர்களால்பால்டிமோரில் உள்ள மேரிலாண்ட் மெடிகல் சென்டரில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு நகைச்சுவை உணர்வுடன் சிரித்து மகிழ்வோருக்கு ஹார்ட் அட்டாக் வராமல் அந்தச் சிரிப்பே அவர்களைப் பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது!
இந்த மையத்தின் டைரக்டரான மைக்கேல் மில்லர், “உங்கள் இதயத்தைப் பாதுகாப்பதைப் பொருத்த வரையில் பழைய காலம் தொட்டு வழங்கி வரும் பொன்மொழியான நகைச்சுவையே சிறந்த மருந்து என்பது உண்மையாகி விட்டது” என்கிறார். நியூயார்க் ஸ்டேட் பல்கலைகழகத்தில் மூளைமனநலம் நோய்த் தடுப்பு இயலில் பேராசிரியராக இருக்கும் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பைப்பற்றி விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். அவரே ஆராய்ச்சிகளின் முடிவான சாரத்தைத் தருகிறார். நோயை உருவாக்கும்பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் எதிர்த்து நோயைத் தடுக்கும் இம்யூனொக்ளோபுலின் ஏ (immunoglobulin A) என்ற ஆன்டிபாடிக்கும், சிரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அவர் கண்டுபிடித்துள்ளார். ஹாப்பி ஹார்மோன் என்று செல்லமாக அழைக்கப்படும் சிடோகின்ஸ் (cytokines) என்ற ஹார்மோனும் சிரிப்பினால் உருவாக்கப்படுகிறது. உடல் மீது படைஎடுக்கும் நோய்களைத் தரும் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் விஷேசமாக எதிர்த்துத் தடுக்கும் இரத்தத்தில் உள்ள வெள்ளை செல்களின் எண்ணிக்கை, சிடோகின் அளவு உடலில் கூடும் போது கூடுவதை கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசிரியரான லீ பெர்க் கண்டுபிடித்து உறுதிப்படுத்துகிறார்.இவைட்யூமர் செல்க¨ளைக் கூட அழித்துவிடும் ஆற்றல் உடையதாம்!
அன்னி ஜாஷ்வே என்ற பிரபல நகைச்சுவையாளர் தனது ‘டோண்ட் கெட் மேட், கெட் •பன்னி’ என்ற புத்தகத்தில் சிரிப்பால் உளவியல்மற்றும் உடலியலில் ஏற்படும் நற்பயன்களைப் பெரிய பட்டியலாகவே தருகிறார்:-
1) சுவாசக்கோளாறுகளை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை உமிழ் நீரில் அதிகப்படுத்துகிறது.
2) கார்டிஸால் ஸீரத்தைக் குறைத்து டென்ஷனின் தீமைகளைக்குறைக்கும் ஆன்டிடாட்டாக அமைகிறது.
3)அல்ஸர்களை வயிற்றில் உருவாக்கும் ஒரு என்ஸைமை பிரிக்கிறது.
4) அடிவயிற்று தசைகளை நிலைப்படுத்துகிறது
5) உடலில் உள்ள எல்லா தசைகளுக்கும் ஓய்வை அளிக்கிறது.
6) பக்கவாதத்தையும் நரம்புக்கோளாறுகளைத் தடுக்கும் அறிகுறிகளைக்குறைக்க உதவுகிறது 7) நமது பார்வையை மாற்றுகிறது.
8)மனச்செயல்பாட்டை பாசிடிவ் நன்மைகளைத் தருவதாக அமைக்கிறது.
9) தொடர்ந்து இருக்கும் சுவாசக் கோளாறுகளைக்குறைக்கும் விதமாக சுத்தக்காற்றை சுவாசிப்பதை அதிகப்படுத்துகிறது.
10)இரத்தஅழுத்தத்தக் குறைப்பதோடு இதயத் துடிப்பையும்குறைக்கிறது.
11) நோய் தடுக்கும் ஊக்கிகளையும் இன்டர்ல்யூகின் 2 -யும் வெளிப்படுத்துகிறது. 12) தொற்றுநோயை எதிர்ப்பதில் உடலுக்கு உதவுகிறது.
13) இயல்பாகவே வலியை நீக்கும் என்டார்பின்களை வெளிப்படுத்துகிறது
14) ஊட்டச்சத்துகளையும் ஆக்ஸிஜனையும் உடல் திசுக்களுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
15) எப்போதும் நல்ல மனநிலையில் உற்சாகத்துடன் இருக்க வைக்கிறது!
இப்படி ஏராளமான நன்மைகளை நாளுக்கு நாள் வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றன.
ஆகவே சின்னத்திரையில் நாம் தினமும் பார்க்க வேண்டிய ஒரு அவசிய நிகழ்ச்சி காமடி காட்சிகள் தான்!

www.img.grouponcdn.com/deal/jSNWgW7Bp4vb8fFbN67Q/Ca-2048×1242/v1/c700x420.jpg

*******

நினைவாற்றலைக்கூட்டுவது எப்படி? – இரண்டாம்பகுதி ———- ச.நாகராஜன்

பீட்டர் ரஸ்ஸல் தனது நூலான ‘தி ப்ரெயின்புக்’ கில் நினைவாற்றலை எட்டு விதமாகப் பிரித்துவிளக்குகிறார்.
நிகழ்வு நினைவு: ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படும் பழைய கால நிகழ்வுகள் இந்த வகையைச் சார்ந்தவை.
உண்மை நினைவு: ஆகஸ்ட் 15ம் தேதி,இந்தியாவின் சுதந்திர தினம். இவை போன்ற ஏராளமான உண்மைத் தகவல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
பொருள் நினைவு: யானை ஒரு மிருகம். குயில் ஒரு பறவை. இது போல சாதாரண மனிதன் ஒருவன் ஆயிரக்கணக்கான வார்த்தைகளையும் அவற்றின் பொருளையும் நினைவில் சேமித்து வைத்திருக்கிறான்.
புலன் நினைவு: உங்களுக்குப் பிடித்த சினிமா காட்சி எதையேனும் ஒன்றை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அதில் உள்ள காட்சிகள் உறைய வைக்கப்பட்ட நிலையில் ஒரு காட்சிக்கும்இன்னொரு காட்சிக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளியுடன் உங்கள் பார்வைக்குத் தரப்படுகிறது; ஆனால் நீங்கள் பார்ப்பதோ தொடர்ந்த ஒரு அசையும் சித்திரத்தைத் தான்! இந்த பார்வை உணர்வை நீங்கள் பெறுவதற்கு உங்கள்மூளை அடுத்த சித்திரம் வரும் வரை முதல் சித்திரத்தை சேமித்து வைத்திருக்க வேண்டும். இதே முறை தான் நாம் எதையேனும் காதால் கேட்கும் போதும்பின்பற்றப்படுகிறது. ஒரு சின்ன வார்த்தையை எடுத்துக் கொண்டாலும் கூட அது பல்வேறு ஒலிகளின் கலவை தான்!அடுத்தது வரும் வரை முதல் ஒலி சேமித்து வைக்கப்படுகிறது! இந்த அனைத்துமே ஒரு வினாடியை பல சிறிய பகுதிகளாகப் பகுத்தால் அதில் சில பகுதிகளுக்குள் நடந்து விடுகிறது!
திறமை நினைவு: எல்லாத் திறமைகளும் கூட நினைவாற்றலைக் கொண்டே உள்ளன. எப்படி காரை ஓட்டுவது, எப்படி கோப்பையிலுள்ள காப்பியைக்குடிப்பதுஇவை எல்லாமே நினைவாற்றலின் அடிப்படையாலேயே சாத்தியமாகிறது
உள்ளுணர்வு நினைவு: அநேக நினைவுகள் நமது மரபணுக்களில் சேமித்து வைக்கப்பட்டு நமக்குஜீன்மூலமாக வந்துள்ளன. பிறந்த குழந்தை தாயின் மார்பில்வாய் வைத்து பாலை உறிஞ்சுகிறது! இதுமரபணுவால் வந்த நினவாற்றல்!
கூட்டு நினைவு: கார்ல் ஜங்இனம் சார்ந்த ஒரு நினைவு கூட நம்மிடையே இருக்கிறது என்றுகூறியுள்ளார்.
சென்றஜன்ம நினைவு: சிலர் தங்கள் பூர்வ ஜென்மங்களிலிருந்து அப்படியே பல சம்பவங்களைக் கூறுகின்றனர்.
ஆக இப்படிப் பகுக்கப்பட்டது போல அல்லாமல்இன்னொரு முறை வழியாகவும் நினைவாற்றல் வகைப் படுத்தப்படுகிறது. புலன் சார்ந்த நினைவு, குறுகிய கால நினைவு, நீண்ட கால நினைவு என்றுமூன்று விதமாகவும் நினைவாற்றல்பிரிக்கப்படுகிறது. குறுகிய கால நினைவு இப்போது இந்தக் கணம் நடந்ததை நினைவில் கொள்வது. இதை செயலாற்றும் நினைவு அல்லதுஇப்போதைய நினைவு என்றும்கூறுவதுண்டு. ஒரு டெலிபோன் நம்பரை டயல் செய்யும் போது அதை நினைவில் கொள்வது குறுகிய கால நினைவு. இதுபத்துவினாடிகளுக்குமட்டுமே நீடிப்பது!
நீண்ட கால நினைவு ஒரு பெரிய சேமிப்புக் கிடங்கு போல!அதில் சேமிக்கப்படுவது காலம் காலமாக இருக்கும்!
இந்த நினைவுகளையும் அதிகரிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உங்கள் பார்வையை உபயோகப்படுத்துவது தான்! எதையும் காட்சியாக மாற்றிக்கொண்டால் அது உங்கள் நினைவை விட்டு லேசில் நீங்காது.
ஏதேனும் முக்கியமான ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்குப் பழக்கப்பட்ட இடமான வீடு அல்லது உங்கள் தோட்டம் ஆகியவற்றோடு நினைவில் கொள்ள வேண்டியதை தொடர்பு படுத்தி காட்சியாக ஆக்குங்கள். நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாக உங்கள்வீட்டின் பல பகுதிகளிலும் வைத்துவிடுங்கள். லேசில் அது மறக்காது. கறிகாய் வாங்க வேண்டும், •பேனை ரிப்பேர் செய்ய வேண்டும், சினேகிதி பத்திரிக்கை வாங்க வேண்டும் – அவ்வளவு தானே. கறிகாயை முன்னறை டி.வி. மேல் வைத்துவிடுங்கள்! •பேனை உட்காரும் நாற்காலியில் வைத்துவிடுங்கள்; சினேகிதியை •பேனோடு சுற்றவிடுங்கள்! இந்தமூன்றுமேஇனி மறக்காது! வீட்டின் பல பகுதிகளிலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இவற்றை வைத்து அதை நினைவுக்கும் கொண்டுவரலாம்! மனச் சித்திர நினைவு உங்கள் நினைவாற்றலைக் கூட்ட எளிய ஆனால் சிறந்த வழி!
இப்படி அறிவியல் சார்ந்த உத்திகளை அறிய வேண்டும்; அவற்றைக் கற்க வேண்டும்; கற்றதை நடைமுறையில் பயிற்சி மூலம் உறுதிப் படுத்த வேண்டும்.
அப்புறம் எல்லோரும் உங்களுக்குமட்டும் எப்படி எல்லாம் நினைவில்இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டுவியந்துகூறும் அளவு நீங்கள் நினைவாற்றல் நிபுணராக ஆகி விடுவிர்கள். பழைய காலத்தில் இப்படி நினைவாற்றல் உள்ளவரை அவதானி என்பர். நீங்களும் ஒரு அவதானி ஆகி விடலாம்; இது சாத்தியமே!

Pic Source : http://www.mydailyhealthtips.in/images/Memory-Power.jpg
***************

போன் நம்பர் மறந்து போச்சே, பார்க்கிங் லாட்டில் வைத்த வண்டியை எடுக்க வண்டி நம்பர் மறந்து போச்சே, உப்பு புளி வாங்கணும்னு தான் நினைச்சேன், மறந்து தொலைந்தேனே என்ற கவலை இனி இல்லை உங்களுக்கு.. .. இந்தக் கட்டுரையைப்படியுங்கள்.. .. மறதிக்கு ஒரு பை!
நினைவாற்றலைக்கூட்டுவது எப்படி?
—————————————————-
ச.நாகராஜன்
தகவல்களைப் பெற்று சேமித்து வைக்கும் திறனே நினைவாற்றல் என்றுகூறப்படுகிறது. ஒரு கோப்பில் தகவல்களைச் சேமித்து தேவையான போது அதை எடுத்துப் பார்ப்பது போலத் தான் நினைவாற்றலும்! கணினியில் உள்ள கோப்பு அமைப்பை எடுத்துக் கொள்வோம். அதில் கோப்பு அமைப்பில் தகவல்கள் உள்ளிடப்பட வேண்டும். பிறகு தகவல் சிதையாமல் காக்கப்பட வேண்டும். தேவையான போது அவற்றை எடுத்துப் பெற வேண்டும். இந்தமூன்றுமே R என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களானregistration, retention and recall என்பனவற்றில் ஆரம்பிப்பதால் இதை மூன்று R’sஎன்று உளவியலாளர்கள் குறிப்பிடுவதுவழக்கம்.
மனிதர்களின் நினைவாற்றல் திறன் பிரமிக்க வைக்கும் ஒன்று! வயதுக்கு வந்தோரால் 20,000 முதல் 1,00,000 சொற்கள் வரை நினைவில் வைத்திருக்க முடியும். இத்துடன் கூட ஒரு அன்னிய மொழியைக் கற்கலாம், சிக்கலான திறமைகளைக் கைக்கொள்ளலாம்; எல்லாத் தகவல்களை உள்ளடக்கியவாறே எங்கும் செல்லலாம். பாரத தேசத்தின் மிகப் புராதனமான புனிதமான வேதங்கள் நினைவாற்றல் வழியாகத்தான் பாரம்பரியம்பாரம்பரியமாக ஓதப்பட்டு தலைமுறைகளுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்டு வந்தது. ஏதன்ஸ் நகரத்தில் வாழ்ந்த 20,000 குடிமக்களின் பெயரை தெமிஸ்டோக்ளிஸ் நினைவில் வைத்துக் கூறுவது வழக்கமாம்.ஜெர்ஸக்ஸ் தனது படையில் இருந்த ஒரு லட்சம் வீரர்களையும் பெயர் சொல்லித்தான் அழைப்பானாம்!
அலெக்ஸாண்டர் ல்யூரியா என்னும் அறிஞர் சாலமன் வெனியாமினா•ப் என்பவரின்பிரமிக்க வைக்கும் நினைவாற்றலைப்பற்றி ஆராய்ந்தார். சாலமன் ஒரு பத்திரிக்கை ரிபோர்ட்டர். எல்லா மகாநாட்டு நிகழ்ச்சிகளையும் அவர் கையேடு எதிலும் குறித்து வைத்துக் கொள்ளாமல் தன் நினைவு மூலமாக எழுதித் தருவது வழக்கம்.ல்யூரியா, சாலமனிடம் 70 எழுத்துக்கள்மற்றும் எண்கள் அடங்கிய ஒரு பட்டியலைத் தந்தார். மெதுவாக அவற்றைல்யூரியா ஒரே ஒரு முறைச் சொன்னதைக் கேட்ட சாலமன் அவற்றை முதலிலிருந்து கடைசி வரைக்கும், பிறகு கடைசியிலிருந்து ஆரம்பம்வரைக்கும் ஒரு பிழையுமின்றி அப்படியேகூறக் கேட்ட ல்யூரியா அசந்து போனார்! எதேனும் ஒரு எழுத்தைச் சொன்னால் அதற்கு முன்னும்பின்னும் உள்ள எழுத்தையோ அல்லது எண்ணையோ கூட அவர் சொல்வார்.அவரை சுமார் முப்பது வருட காலம்ல்யூரியா ஆராய்ந்தார். சாலமன் தன் பத்திரிக்கைத் தொழிலை விட்டுவிட்டு நினைவாற்றலை பார்வையாளருக்குச் செய்து காட்டும் தொழில்முறை நினைவாற்றல்நிபுணரானார்!ஆக நினைவாற்றல் மனிதனுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வ ஆற்றல் என்பதை முதலில் உணர வேண்டும்.
நினைவாற்றலைக் கூட்ட ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் எண்களை வரிசையாக நினைவில் வைத்துக்கொள்ள ஒரு வழி நினைவாற்றல் அமைப்பு முறையான நிமோனிக் சிஸ்டம் (Mnemonic system) ஆகும்!
மாணவ மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் எண்களை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுவது அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக போன் நம்பர்கள், கணித சூத்திரங்கள் போன்றவற்றில்வரும் எண்களை எப்படி நினைவில் கொள்வது? இதற்கு ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை உதாரணமாகக் காணலாம். இதே போல தமிழிலும் நமக்கு நாமே நினைவு வாக்கியங்களை அமைத்துக் கொள்ளலாம். உதாரணத்தைப் பார்ப்போம்:
May I have a large container of coffee?
இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள எழுத்துக்களை எண்ணி அவற்றை வரிசையாக சொன்னால் வருவது கணிதக் குறியீடான ‘பை’ க்கான மதிப்பு வரும்.
May – இதில் மூன்று எழுத்துக்கள் ;I- இதில் ஒரு எழுத்து; have இதில் நான்கு எழுத்துக்கள்இப்படியே தொடர்ந்தால் வருவது 3.1415926.
சர் ஜேம்ஸ்ஜீன்ஸ்இன்னொருவாக்கியத்தை அமைத்துக் கொண்டு ‘பை’ யின் மதிப்பை 14 இலக்க சுத்தமாகச் சொன்னார்! அவர் அமைத்த வாக்கியம்:
“How I want a drink, alcoholic of course, after the heavy chapters involving quantum mechanics.” (‘பை’ யின் மதிப்பு: 3.14159265358979)
இந்த நினைவாற்றல் உத்தியை நன்கு கற்று நிபுணராக ஆகிவிட்டால் எந்த இலக்கத்தையும் – போன் நம்பராக இருந்தாலும் சரி, கணித சூத்திரமாக இருந்தாலும் சரி நினைவில் கொண்டு அனைவருக்கும் கூடக் கற்பிக்கலாம். இனி நமது கார், ஸ்கூட்டர் நம்பரைமறந்து விட்டோம் என்ற பேச்சே இருக்காது!
இது போலப் பல வழிகள் உண்டு; அவற்றை கற்குமுன்னர் நினைவாற்றலை எப்படிப்பிரிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்தபகுதியுடன்இந்தக்கட்டுரைமுடியும்

Pic Source : http://tamilfitnessmotivation.com/blog/2017/01/24/make-every-stumbling-block-stepping-stone/

****

தூக்க வியர்வை மிகைப்பு தமிழாக்கம்: ச.நாகராஜன்

தூக்க வியர்வை மிகைப்பு என்பது அந்த வியாதியால் அவஸ்தைபடுவோருக்கு ஏராளமான அசௌகரியங்களை உருவாக்கும் ஒரு நிலையாகும். இந்த நிலை என்றால் என்ன? அது எதையெல்லாம் உருவாக்கும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கட்டுரையில் பதிலைக் காணலாம்.
வியர்வையுடன் காலைப் பொழுதில் நீங்கள் என்றேனும் எழுந்திருந்திருக்கிறீர்களா? ஒரு வேளை கெட்ட கனவு ஒன்றை நீங்கள் கண்டிருக்கக்கூடும் அதனால் வியர்வை வந்திருக்கலாம்.ஒருவேளை போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருந்தாலும் வியர்வை ஏற்படலாம்.ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் உடலில் வியர்வையோடு எழுந்திருப்பது என்பது ஒரு கஷ்டமான உணர்வைத் தரும் என்பது தான்.முதுகெல்லாம் வியர்வை; தலை முடி எங்கும் வியர்வை! படுக்கை எல்லாம் வியர்வையால் நனைந்திருக்கிறது; உடை எல்லாம் வியர்வை நாற்றம் என்றால் எப்படிஇருக்கும்! இதே நிலை ஒவ்வொருஇரவும் தொடர்ந்தால் என்ன ஆகும்? நீங்கள் என்ன தான் செய்வீர்கள்?
கெட்ட கனவுகள், காற்றோட்டமின்மை ஒரு புறம்இருக்கட்டும்; தூக்க வியர்வை மிகைப்புப்பற்றி இங்கு பேசுவோம். இதை சாமான்யன் தன் மொழியில்இரவில் வியர்வை ஊற்றாக வந்தது என்று கூறி விடுவான்.இரவில் வியர்வை அல்லதுதூக்க வியர்வை மிகைப்பு என்பதுஇரவில் வியர்வை அதிகம் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் ஒரு நிலையாகும். இதனால் அவஸ்தைப் படுபவர்கள் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக துன்பப் படலாம் அல்லது துன்பப்படாமலும் இருக்கலாம்.
இதே உணர்வுடன் ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கும் நிலையைக் கற்பனை செய்ய உங்களால் முடியுமா? இந்த அசௌகரியமான நிலை கீழ்க்கண்ட விதங்களில் சில கோளாறுகளின் அறிகுறியாக இருக்கக்கூடும். தூக்க வியர்வை மிகைப்பு ஏற்படுவதன் காரணங்களையும் அதை எப்படி சிகிச்சை மூலம் குணப்படுத்துவது என்பதையும் நாம் புரிந்து கொள்ளமுயலுவோம்.

தூக்க வியர்வை மிகைப்பு – என்னென்ன அறிகுறிகள் பின்னால்வரும்

வியர்வை பலவிதங்களில் ஏற்படலாம். வியர்வை துளிகளாகச் சிந்தலாம். கை, கால்கள் கசகசக்காலாம்..உடைகள் நனையலாம். இது ஒருவர் தூங்கும் விதத்தைப் பாதிப்பதால் மிகவும் துன்பத்தைத் தருவதாகும்.இந்த அசௌகரியம் ஓய்வற்ற தன்மையை உருவாக்குவதோடு தூக்கம்இல்லாமல் போகும் நிலையையும் ஏற்படுத்தும்.
தூக்க வியர்வை மிகைப்பு – ஏன் ஏற்படுகிறது?
தூக்க வியர்வை மிகைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? காரணங்கள் பல. சில சாதாரணமானவை. சில கடுமையானவை.
ஜுரம்
ஒருவருக்குஜுரம்வரும் போது உடலின் உஷ்ண நிலை உயருகிறது. இந்த உஷ்ணத்தை சாதாரண நிலைக்குக் கொண்டு வருவதற்காக உடல் சற்று அதிகப்படியான வியர்வையைச்சுரக்கிறது. இதனால் உடலின் அதிக உஷ்ணநிலை தணியவைக்கப்படுத்தப்படுகிறது.ஜுரம்வரும் போது தூக்க வியர்வை ஏற்படும். ஆகவே ஜுரம் ஒரு முக்கிய காரணமாகும்.

இது உருவாகும் சில நிலைகள்

இரவில் வியர்வை உருவாக ஏராளமான ஆரோக்கிய சம்பந்தமான உடல்நிலை காரணங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் காணப்படுபவை- டயபடீஸ், மைக்ரேன், ஹைபர்தைராய்டிஸம், பக்கவாதம், செரிப்ரல்பால்சி(குழந்தைகளிடம் தூக்க வியர்வை மிகைப்புக்குஇதுவே சாதாரணமாக காரணமாக அமைகிறது) தலை மற்றும் கழுத்தில் காயங்கள்,அப்ஸ்ட்ரக்டிவ்ஸ்லீப் அப்னியா சிண்ட்ரோம், வலிப்பு, புற்று நோய், •பெமிலியல் டிஸடோமியா இத்துடன் ஜீரணத்துடன் தொடர்பு கொண்ட ஆஸிட் ரெப்ளக்ஸ், அஜீரணம், அசிடிடி, வயிற்றுப் பொருமல்மற்றும்GERDஆகிய .இவை அனைத்துமேஇரவில் வியர்வையை ஏற்படுத்தும் காரணங்களாகும்.
மெனோபாஸ் மற்றும் மாதவிடாய் 
பெண்களுக்கு மெனோபாஸ் பல விதமான ஹார்மோன் சமச்சீரின்மையை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். அதே போல் தான் மாதவிடாயும். அதிகப்படியான ஹார்மோன் சமச்சீரின்மை பெண்களிடம் இந்த ‘இரவில் வியர்வை’ என்னும் நிலையை உருவாக்க ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
கவலையும் மன அழுத்தமும்
கவலை மற்றும் மன அழுத்தம் ஒருவரின் மன நிலையை மட்டும் பாதிப்பதில்லை, பல்வேறு விதங்களில் உடலில் அறிகுறிகளை உருவாக்கும்.இவற்றில் அதிகப்படியான வியர்வை ஒரு முக்கியமான ஆரம்ப அறிகுறியாகும்.
தொற்றுகள்
வைரஸ் மற்றும்பாக்டீரியாக்களால் ஏற்படும் சில தொற்றுகள் இந்த நிலையை உருவாக்கி விடக் கூடும். சாதாரண ப்ளூ, ஜலதோஷம் ஹெச்ஐவி, எய்ட்ஸ், எண்டோகார்டிடிஸ், ஆஸ்டியோமைலிடிஸ் மற்றும்இது போன்ற நிலைகள் உள்ளிட்டவை இந்த நிலை உருவாகக் காரணம் ஆகும்.
மருத்துவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
பலமருத்துவ மருந்தளிப்புகள் தூக்க வியர்வை மிகைப்பு என்னும் இந்த நிலையை பக்க விளைவாக ஏற்படுத்தக் காரணமாக இருப்பதும் பலரிடம் காணப்பட்டுள்ளது. ஆன்டி டெப்ரெஸ்ஸன்டுகள், உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்தளிப்புகள் மற்றும் ஆன்டி சைக்காடிக்ஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஆரோக்கியமற்றவாழ்க்கைமுறை.இந்த எல்லாக் காரணங்களையும் விட, இந்த தூக்க வியர்வை மிகைப்பு, குறிப்பாக ஆண்களுக்கு, அதிகமாக புகை பிடித்தல், மது அருந்தல், காரம் மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடுதல், இரவு நெடு நேரம் முழித்திருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருத்தல் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது எனலாம்.

தூக்க வியர்வை மிகைப்பு -இதை நீக்க என்னசெய்யலாம்

தூக்க வியர்வை மிகைப்புக்கான சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமானது. என்னென்ன காரணங்களால் இது ஏற்படுகிறது என்பதை நன்கு அறிவதன் மூலம் இந்த சிகிச்சையை நன்கு செய்யமுடியும். அது உருவாக என்ன காரணங்கள் என்று அறிவதற்கான நோய் அறிகுறி காணலை (டயக்னாஸிஸ்) ஒரு டாக்டரிடம் ஆலோசனை செய்வதன் மூலம் மேற்கொள்ளுதல் இன்றியமையாதது.தூக்க வியர்வை மிகைப்புக்கான அறிகுறிகளைக் கண்டு விட்டால் ஒவ்வொரு குறிப்பிட்ட காரணத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டு அதன் தீர்வைக் கண்டுபிடிக்க முடியும்.
இது தவிர இதர சிகிச்சை முறைகளில், ஒருவரின்வாழ்க்கைமுறையை இன்னும் அதிக ஆரோக்கியம் தர வல்லதாக மாற்றுதல், இரவு வியர்வையை நீக்குவதற்கான சிகிச்சையாக சில மருந்துகளை உட்கொள்ளுதல் மற்றும் இறுதி முயற்சியாக அதிகம் வியர்வையைச்சுரக்க வைக்கும் வியர்வை சுரப்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் உள்ளிட்டவை அடங்கும். தூக்கத்தின் போது வியர்வை சுரத்தல் என்னும் நிலை உடலில் ஏதோ ஒரு அசாதாரணமான விஷயம் நடக்கிறது என்பதற்கான அறிகுறியாகும் . அதனால் தான் இந்த நிலை முற்றிலுமாக ஆய்வு செய்யப்படவேண்டும். தேவையான தீர்வுகள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். இதை அலட்சியப்படுத்தி விட்டுவிடாதீர்கள்; ஒன்றுமில்லை என்றுசும்மா இருந்து விடாதீர்கள்.உடனடி சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

Pic Source : http://www.nhs.uk/Conditions/night-sweats/PublishingImages/night-sweats_342x198_AYEBF9.jpg

*******************

மூளைச் சிதைவைத் தடுக்கும் 6 சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துகள்
தமிழாக்கம் : ச.நாகராஜன்

நினைவாற்றல் திறன் இழப்பு என்று பார்க்கும் போது,இழப்பு பெரும்இழப்பாக ஆகி விடும். ஆகவே அது வராமல் தடுப்பதே சாலச் சிறந்தது.நீங்கள் எண்பது வயதையும் தாண்டி வாழ விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அது இப்போது சாத்தியமான ஒன்று தான். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியமுக்கியமான புள்ளி விவரம் ஒன்றுஇருக்கிறது. நேஷனல்இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங் என்ற நிறுவனம் நீங்கள் எண்பதைத் தொடும் போது, உங்களுக்குமனச் செயல்பாட்டில் குறிப்பிடத்தகுந்த அளவு இழப்பு எற்பட 50 சதவிகித வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது. அது உண்மை தான்.பூவா தலையா என்று போட்டுப் பார்த்தால் கூட நிச்சயமாக அது உங்களுக்கு எதிராகத் தான் இருக்கும்.

சென்ற பத்தாண்டுகளில் மட்டும்மூளைச் சிதைவு ஏற்படும் கேஸ்கள் 46 சதவிகிதம் அதிகரித்திருப்பதால் நிபுணர்கள் இப்போது மிகவும் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.இந்த தொல்லை தரும் அதிகரிப்பிற்கான காரணம் என்னெவென்று தெரியவில்லை.என்றாலும் கூட, மோசமான உணவு, சுற்றுப்புறச்சூழலால் எற்படும் நச்சுப்புகை மற்றும் குறைந்த இயக்கமுடைய வாழ்க்கை முறை போன்ற காரணங்கள் நிச்சயமாக இதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஒன்றுமட்டும் நிச்சயம் – வயதாகிக் கொண்டே போகும் போது நீங்கள் உங்களின் மனதையும் நினைவாற்றலையும் நல்ல நிலையில் வைப்பதற்கு விரும்பினால், “அப்படி எல்லாம் எனக்கு வராது” என்ற அபாய மனப்பான்மையைக் கொள்ள முடியாது.சிகிச்சைக்காகக் காத்திருப்பீர்கள் என்றால் அது ஏற்கனவே தாமதமாகி விட்டது.பெரும்பாலான டாக்டர்களிடம் வியாதி வராமல் தடுப்பதைப் பற்றிப் பேசினால் அவர்களிடமிருந்து நீங்கள் எந்த உதவியையும் வேகமாகப் பெற முடியாது.

இப்போதைய மருத்துவ அமைப்பு முறையானது, மூளைச் செயல்பாடுகுறைந்து விட்டதற்கான அறிகுறிகளைக் காண்பிக்கும் வரை காத்திருக்கிறது; அதற்கு முன்னால் சிகிச்சையைப்பற்றிப் பேசக்கூட முடியாதபடி உள்ளது. ஆனால்இங்கே தான் வருத்தம் தரும் உண்மை உள்ளது – நீங்கள் நோய் அறிகுறி பற்றி சோதனை செய்யும் வரை காத்திருந்தால், அது மிகுந்த தாமதமான விஷயம் ஆகி விடும்.நேஷனல்இன்ஸ்டிடியூட் ஆ•ப் ஏஜிங்கின் கூற்றுப் படி, இப்போதைய மருந்துகள்மூளை அழிவிற்கு சிகிச்சை அளிப்பதில் குறைந்த அளவே திறனுடையவையாக இருப்பதோடு பக்க விளைவுகளையும் எற்படுத்துபவையாக உள்ளன. ஆகவே டாக்டர்கள் ஏன் வியாதியைத் தடுப்பதைப் பற்றிக் கவனம் செலுத்தக் கூடாது – அதுவும் பல வழிமுறைகள் பிரமாதமான திறன் உடையவையாக இருக்கும் போது!

6 குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் பிரதானமான பங்கை வகிக்கின்றன. சம்பிரதாயமான மருந்துகளால் புறக்கணிக்கப்பட்ட குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துகள் தான் ரகசிய நிவாரணம் தருபவை என்று நவீன ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அறிவியலானது இந்த ஊட்டச்சத்துகள் மூளை ஆரோக்கியத்தில் மறுக்க முடியாத உடன்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துபவை எனக் காட்டுகிறது. கீழே உள்ள ஆறு ஊட்டச்சத்துகள் “சிறந்தனவற்றுள் எல்லாம் சிறந்தவை”.மேலும் மூளைச் செயல்பாட்டுக்குறைவைத் தடுப்பதில் அதிக நம்பிக்கை தருபவை.
1. CoQ10: மூளையின்இளமை ஊற்று:

உங்கள்மூளை ஆரோக்கியமாகத் திகழ சக்தி வாய்ந்த ஆன்டிடாக்ஸிடண்டான (ஆக்ஸியேற்றிப்பகையான) CoQ10ஐ நம்பிஇருக்கிறது. CoQ10குறைந்திருந்தால்மூளை செயல்படுவதை மிக மோசமாக்கி, மந்தமாக சிந்திக்க வைக்கும்; நினைவாற்றலைக்குறைவுபடுத்தும்.யூ சி எஸ் டி ஆய்வு ஒன்றின் படி CoQ10ஐ போதுமான அளவு கொண்டிருந்தால் மூளை சிதைவு படுவதை 44 சதவிகிதம் மெதுவாக்கி விடலாம். மேலும்,CoQ10ஐ மிக அதிக அளவில் கொண்டிருப்பவர்கள் மனக் கூர்மையையும், இயக்கும் திறனையும், மனோ ஆற்றலையும் அதிக அளவில் கொண்டிருப்பர்.CoQ10உங்கள் இதயத்திற்கு நன்மை தருவதோடு உடலின் மொத்த ஆற்றலுக்கும் நலம்பயக்கிறது.
2. டி ஹெச் ஏ: உங்கள்மூளைக்கு அதிக தேவையாக இருக்கும் ஒமேகா – 3

இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உங்கள்மூளைக்கு நல்லது என்பதைக் கேட்டிருப்பீர்கள். என்ற போதிலும், டி ஹெச் ஏ என்றுகூறப்படும் ஒரு குறிப்பிட்ட ஒமேகா-3 மூளை செயல்பாட்டிற்கு உகந்த மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
நீங்கள் வயதாக ஆக, உங்கள்மூளை செல்கள் டி ஹெச் ஏயை உறிஞ்சும் திறனை இழக்கிறது. மேலும் அதன் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைகிறது. உங்கள் மனதிற்கு வேண்டுவனவற்றைத் தராததோடு, உங்கள்மூளை செயல்பாட்டிலும் நினைவாற்றலைத் தக்க வைப்பதிலும் குறையை ஏற்படுத்துகிறது. ஆகவே டி ஹெச் ஏ ஐ அதிக அளவில் கொண்டிருப்பதானது உங்கள்மூளைக்கு நிஜமாகவே அனைத்தையும் கொடுக்கிறது. ஆனால் வருத்தம் தரும் விஷயம் என்னவெனில், பெரும்பாலானமக்கள் குறைந்த அளவு டி ஹெச் ஏ அளவுகளையே கொண்டிருக்கின்றனர்.
3. Curcumin: இந்தியாவின் அற்புத நறுமணப் பண்டம்:

Curcuminஎன்று அழைக்கப்படும் ஒரு கூட்டுப்பொருள்மஞ்சளின் ஒரு அங்கம். இது கறி தயாரிக்கப் பயன்படும் ஒன்று. இதுமனச் செயல்பாட்டை தீவிரமாகத் தடைப்படுத்தி மூளை சவ்வில் அழிவை ஏற்படுத்தும் இரத்த உறைக்கட்டி உருவாவதை தடுத்து நிறுத்தும்.உண்மையில் யூ சி எல் ஏ -இல் நடத்தப்பட்ட ஆய்வுகள், இந்த Curcumin, ஐம்பது சதவிகிதம் இரத்த உறைக்கட்டி உருவாவதை மெதுவாக்கி விடும் என்று காண்பிக்கின்றன.
உலகிலேயே இந்தியா மிக அதிக அளவில் கர்கமினை நுகர்வு வீதமாகக் கொண்டுள்ளது என்பது ஒரு சுவையான விஷயம். மேலும் தற்செயலாக ஏற்பட்ட ஒற்றுமைஇல்லை என்று சொல்லக் கூடிய அளவில்மூளைச் செயல்பாட்டுக்குறைவையும் மிகவும் குறைவாகக் கொண்டிருக்கிறது!
4.பெர்ரி பழங்கள்: மூளைக்கான ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார்:

குறிப்பிட்ட பெர்ரிப்பழங்களை தினமும் உட்கொள்வதுமுளைச் செயல்பாட்டை சூப்பர் சார்ஜ் செய்யும் என்பதை புதிய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பெர்ரி பழங்கள் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு தருபவை (anti-inflammatory) ஆக்ஸியேற்றிப்பகையானவை(antioxidant) மேலும்உறை எதிர்ப்பைக் கொண்டவை ( anti-clotting) மேலும்மூளையை ஊக்குவிக்கும் ரெஸ்வெரட்ரால் (resveratrol), க்யர்செடின் (resveratrol)மற்றும் விடமின்கள் சி, ஈ ஆகிய ஆக்ஸியேற்றிப்பகைகளை( ஆன்டிடாக்ஸிடண்டுகளை)பெர்ரிப்பழங்கள் கொண்டிருக்கின்றன. தலை சிறந்த நியூரோ சயின்டிஸ்ட் ஒருவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, பெர்ரிப்பழங்கள்மூளை செல்களை அழற்சியிலிருந்து பாதுகாக்கின்றன.
5. ஆல்பா லிபோயிக் அமிலம் (Alpha Lipoic Acid):

உங்கள்மூளைவிரும்பும் ஒரு ஆன்டிடாக்ஸிடண்ட்
ஆல்பா லிபோயிக் அமிலம் (ஏ எல் ஏ), மிக அதி சக்தி வாய்ந்த ஒன்று. இதுப்ராக்கோலி போன்ற காய்கறியில் காணப்படுவது. மூளை செல்களைத்தூய்மைப்படுத்தும் ஒரு தனித்துவம் வாய்ந்த மூலக்கூற்று பொதிவைக் (molecular composition) இதுமுக்கியமாகக் கொண்டுள்ளது. இந்தப் பொதிவு, வயது அதிகமாகும் போது ஏற்படக்கூடிய நினைவாற்றல்இழப்பைத் தடுக்கும் திறன் வாய்ந்த ஆன்டிடோட்டாக- முறி மருந்தாக- இதை ஆக்குகிறது. இருந்தபோதிலும் சிலர் போதுமான ஏ எல் ஏயை தங்கள் உணவிலிருந்தே அதன் குணமாக்கும் பயன்களை உணரும் அளவிற்குக் கொள்கின்றனர்.
6. வின்போசெடின் (Vinpocetine):

ஐரோப்பாவின் ரகசிய மூளை ஊக்கி. ஐரோப்பாவில் உள்ள டாக்டர்கள் பல்லாண்டுகளாகவே பூ வகைகளுள் ஒன்றான பெரிவிங்கி என்றுகூறப்படும் தாவரத்திலிருந்து (periwinkle plant) எடுக்கப்படும்வின்போசெடினை மூளைச் செயல்பாடுகுறைவிற்கான சிகிச்சைக்காக நம்பி வந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையிலும் ஒரு அர்த்தம் இருப்பது போலத் தெரிய வருகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, வின்போசெடின்மூளைஇயக்கக் கட்டுப்பாட்டைச் செய்யும் சிறுமூளை எனப்படும் செரிபெல்லத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை நிரூபித்துள்ளது. உங்கள்மூளைக்குச் சத்து அளிக்கப்படுவதற்கும், உகந்த அளவு செயல்படுவதற்கும் நல்ல ரத்த ஓட்டமானது இன்றியமையாதது. அமெரிக்காவில்வின்போசெடின்இப்போது தான் அதிக அளவு பிரபலமடையத் தொடங்கி இருக்கிறது.

http://www.eatright.org/~/media/eatrightimages/health/wellness/healthyaging/4typesoffoodstohelpboostyourmemory.ashx

*******************

விட்டமின் 12 குறைபாடு ஏன்? அதைப் போக்குவது எப்படி? – 2
தமிழாக்கம்: ச.நாகராஜன்

விட்டமின் பி12 எதிலிருந்து பெற முடியும்?
விட்டமின் பி12, பாக்டீரியா மற்றும் காளான் வகையிலிருந்து உருவாக்கப்படுகிறது. ஈஸ்ட் அல்லது உயர்வகை செடிகளிலிருந்து அல்ல. நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மிருக மற்றும் மனிதரின் கேஸ்ட்ரோ இன்டெஸ்டினல் பாதையில் மிக அதிகமாக உள்ளன.ஆனால் பி 12 மனிதரிடம் உருவாக்கப்படும் இடம் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய இடமாக இல்லாதிருப்பதால், மனிதரிடம் அது இருப்பதை நம்பகமாகக் கொள்ள முடியாது.ஆகவே சைவ உணவு சாப்பிடுவோர் அதை மற்ற நம்பகமான ஆதாரங்களிலிருந்தே பெற முடியும்.பால், முட்டை ஆகியனவற்றை சாப்பிடுவோருக்கு, பால் பொருள்களும் முட்டை முதலியனவும் பி12 விட்டமினை போதுமான அளவில் தரும் ஆதாரமாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கப் பால் 0.9 மைக்ரோகிராம் விட்டமின் பி12 ஐக் கொண்டுள்ளது. 8 அவுன்ஸ் தயிர் 1.5 மைக்ரோகிராம் கொண்டுள்ளது. சூடாக்கப்பட்ட அல்லது டின்னில் அடைக்கப்பட்ட பால் விட்டமின் பி12ஐ பாதி அளைவு குறைக்கிறது.கொலஸ்ட்ரால் அடங்கிய முட்டையின் மஞ்சள் கருவிலேயே அதிகமான பி12 அடங்கி இருப்பதால் குறைந்த கொழுப்புடைய பால் பொருள்களை நம்புவதே சாலச் சிறந்தது.
சைவ உணவு சாப்பிடுவோர் தாங்கள் சாப்பிடுவதில் சைனோகோபாலமின் அல்லது ஹைட்ரோக்சோகோபாலமின் (cyanocobalamin or hydroxocobalamin) இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நொதிக்க வைக்கப்பட்ட சோயா பொருள்கள் (miso and tempeh போன்றவை), உலரவைக்கப்பட்ட மஷ்ரூம், பாசியினங்கள் ஆகியவை விட்டமின் பி12ஐக் கொண்டிருப்பதில்லை. ஆரோக்கிய உணவகங்களில் விற்கப்படும் இந்த பொருள்கள் அனைத்தும் பி12 ஐக் கொண்டிருக்கும் பிரமாதமான உணவுப் பொருள்கள் என்று சொல்லி விற்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அப்படியில்லை. மாறாக, இவை பி12க்கு ஒத்திசைவானவற்றையே கொண்டிருக்கின்றன. இவை செயல்படுபவை அல்ல; நிஜமான பி12ஐ ஏற்றுக்கொள்வதைத் தடுப்பவையாகும்!

சைவ உணவு சாப்பிடுவோருக்கு பி12 ஆக எதை பரிந்துரை செய்யலாம்?
சத்துணவு கவுன்ஸிலின் பொது மாநாடு சைவ உணவு மட்டுமே சாப்பிடுவோருக்கு விட்டமின் பி12 அதிகமாக உள்ள உணவையோ அல்லது விட்டமின் பி12 சப்ளிமெண்டையோ பரிந்துரை செய்கிறது.இது கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கோ அல்லது குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மாருக்கோ இன்னும் அதிகமாகப் பொருந்தும்.கர்ப்பவதியான ஒருவரின் கர்ப்பகாலத்தின் இறுதி ஐந்து மாதங்களில் கரு கணிசமான அளவு பி12ஐ தாயிடமிருந்து எடுத்துக் கொள்கிறது. பால் கொடுக்கும் தாயிடமிருந்தோ தாய்ப்பாலிலிருந்து பி12ஐ எடுத்துக் கொள்கிறது.
கருவுக்கான போதுமான சேகரிப்பு கர்ப்பமான பெண்ணிடம் இல்லையென்றாலோ அல்லது பால் கொடுக்கும் தாயிடம் குறைந்த அளவு பால் மட்டுமே இருந்தாலோ விட்டமின் பி12 இரத்த அளவு மிகக் குறைந்த அளவாகி விடும். குறிப்பாக சைவ உணவு மட்டுமே சாப்பிடும் ஒரு பெண்மணி பி12 இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடும் போது இது மிகவும் குறைவு பட்டு விடும்.

நெடுங் காலமாக சைவ உணவு மட்டுமே சாப்பிடும் பெண்மணிக்குப் பிறந்த ஒரு சிசு, விட்டமின் பி12 குறைபாடு உடையதாக ஆகும் அபாயம் மிகுந்து விடும், விட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறியைத் தாய் காண்பிக்கவில்லை என்றாலும் கூட தாயிடமிருந்து கருவுக்கு வரும் பி12 பிரதானமாக தாயின் உணவிலிருந்தே வருகிறதே தவிர அவளின் உடலில் சேமிக்கப்பட்டதிலிருந்து அதிகமாக வருவதில்லை. விட்டமின் பி12 குறைபாடு தாய்ப்பால் அருந்தும் சிசிவிற்கு 3 முதல் 6 மாதத்திற்குள்ளாக உருவாகலாம்.பி12 குறைபாடு உள்ள சிசுவிற்கு வலிப்பு,(இயல்பாக இல்லாமல்) மாறுபட்டிருத்தல்,சோம்பேறித்தனமாக இருப்பது, ரத்த சோகை. வளர்ச்சிக் குறைபாடு மற்றும் செயலூக்கத்தில் தவறுதல் ஆகிய அறிகுறிகள் உருவாகும்.

தாவர உணவுவகைகளில் விட்டமின் பி12 போதுமான அளவு இல்லை என்பதால், சைவ உணவு மட்டுமே சாப்பிடுவோர் பி12 உள்ள உணவு வகைகள் அதாவது செறிவூட்டப்பட்ட வலுவான பி12 உணவு வகையான- உடனடியாக எடுத்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள்-செறிவூட்டப்பட்ட சோயா பானங்கள், செறிவான மாமிச ஒத்திசைவு வகைகள் அல்லது வழக்கமாக எடுத்துக் கொள்ளும் விட்டமின் பி12 சப்ளிமெண்ட் ஆகியவற்றை தங்கள் உணவாக ஆக்கிக் கொள்ளலாம்.

5மைக்ரோகிராம் பி12 சப்ளிமெண்ட் தினசரி எடுத்துக் கொள்வதே போதுமானது.சிலர் பி12 சப்ளிமெண்டை நன்றாக மென்று தின்பதே அதை நன்கு உடலில் சேரவைக்கும் முறை என்கின்றனர். முன்பே கூறியது போல, பி12 சப்ளிமெண்டில் செயலூக்கம் உள்ள சைனோகோபாலமின் அல்லது ஹைட்ரோக்சோகோபாலமின் (cyanocobalamin or hydroxocobalamin) இருக்க வேண்டும். கடலில் வளரும் களை (Seaweed) மற்றும் சோயா பொருள்கள் பி12 உடையவை என்று கூறப்பட்டாலும் கணிசமான அளவு பி12 ஐக் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட தவறான தகவலைக் கூறுவது ஏனெனில் பி12 ஐ அளப்பதில் செயல்படும் மற்றும் செயல்படா விட்டமின் வடிவங்களைச் சரியாக வேறுபடுத்தத் தெரியாததால் வருவது தான் !

இந்த உளவியல் பிரச்சினைகள் மற்றும் நிரந்த நரம்பு மண்டல சேதம் ஆகிய அபாயத்தைத் தடுக்க மாமிச உணவைத் தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிடுவோர் அவ்வப்பொழுது தங்கள் சீரம் பி12அளவுகளை (serum B12 levels) சரி பார்க்க வேண்டும். கர்ப்பமாக உள்ள சைவ உணவு மட்டுமே சாப்பிடுவோர் சீரான இடைவெளியில் தங்கள் சீரம் பி12அளவுகளை (serum B12 levels) சரி பார்க்க வேண்டும். பி12 அளவு 300 பிஜி/எம் எல் –க்கு கீழாக இருந்தால் சிறுநீர் மெதில்மலோனேட் அளவுகளை (urinary methylmalonate levels) சோதிக்க வேண்டும்.

பால், முட்டை ஆகியனவற்றை சாப்பிடுவோரில், வயது வந்தோருக்கும் இளம்வயதுக்காரர்களுக்கும் ஒரு நாளைக்கு இரண்டு மைக்ரோகிராம் அளவு பரிந்துரைக்கப்படுகிறது.2.5 மைக்ரோகிராம் அளவு கர்ப்பமுற்றவருக்கும் தாய்ப்பால் கொடுப்பவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு ஒரு மைக்ரோகிராம் அல்லது அதற்கும் குறைவான அளவு பரிந்துரைக்கப்படுகிறது. பால், முட்டை ஆகியனவற்றை சாப்பிடுவோர் பி12 உள்ள குறைந்த கொழுப்பு உடைய பால் தயிர் அல்லது பி12 செறிவூட்டப்பட்ட தானிய வகைகள், மாமிச ஒத்திசைவு உணவுகள் சோயா பால் போன்ற வகை வகையான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
( பி 12 தொடர் முற்றும்)

விட்டமின் 12 குறைபாடு ஏன்? அதைப் போக்குவது எப்படி?
தமிழாக்கம்: ச.நாகராஜன்

விட்டமின் பி12 சைவ உணவு சாப்பிடுவோருக்கு ஏன் மிக அவசியமானது?

விட்டமின் பி12 சைவ உணவு சாப்பிடுவோருக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்த முக்கியமான விட்டமின் தாவரவகைகளில் அதிகமாகக் கிடைப்பதில்லை. அத்தோடு இந்த விட்டமின் குறைவு பட்டால் உடல் இயக்கங்கள் சிலவற்றில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இரத்தச் சிவப்பு அணுக்கள் சாதாரணமான முதிர்ச்சி அடைய இது தேவை. நரம்பு திசுவின் மெயிலின் உறையின் (myelin sheath) கலவைக்கும் இது அவசியம்.
விட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன?

விட்டமின் பி12 குறைபாடு பலவிதங்களில் தெரிய வரும். எலும்பு மஜ்ஜை குறைவான இரத்தச் சிவப்பு அணுக்களை ஏற்படுத்தும். மேலும் பல அணுக்கள் பெரிதாக இருப்பதோடு முதிர்வடையாமல் இருக்கும். இதனால் மாக்ரோசைடிக் அனிமியா ஏற்படும். பி12இன் இரத்த அளவுகள் சாதாரண அளவை விட குறைவுபடுத்தும். இத்தோடு மட்டுமின்றி பரேஸ்தெசியா (கை கால் மரப்பு மற்றும் கூரிய கூச்ச உணர்வு) ஏற்படுதல், நடக்கும் போது பாலன்ஸ் தவறுதல்,பலஹீனம் மற்றும் அளவுக்கு அதிகமான களைப்பு, அதிர்வுகளை இழத்தல்,இருக்குமிடம் பற்றிய உணர்வை இழத்தல், மென்ஸஸ் சரியான காலத்தில் ஏற்படாமல் இருத்தல், தன்னிலை இழத்தல், மனச்சோர்வு, நிலைமாறுபாடுகள் எரிச்சல், நினைவாற்றல் இழப்பு டெம்னிஷியா உள்ளிட்ட உளவியல் சம்பந்தமான பல வித கோளாறுகளும் கூட ஏற்படலாம்.விட்டமின் பி12 குறைபாடு முதியோரிடத்தில் சாதாரணமாகக் காணப்படுகிறது.டெம்னிஷியா மற்றும் முதியோரிடத்தில் காணப்படும் நரம்புக் குறைபாடுகளுடன் தொடர்புடையதாகிறது..
பெரிய முதிர்வடையாத இரத்தச் சிவப்பணுக்களைக் கொண்ட மெகாலோப்ளாஸ்டிக் அனிமியா என்பதே விட்டமின் பி12ன் குறைபாட்டைக் காண்பிக்கும் முதல் அறிகுறி என வெகு காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய அறிக்கைகள் அனிமியா இல்லாத நோயாளிகளிடம் பி12 குறைபாட்டால் நரம்புக் கோளாறு ஏற்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.பி12 தெராபி மூலம் இந்த நரம்பு சம்பந்தமான குறைபாடு போக்கப்படுகிறது.நரம்பு சம்பந்தமான குறைபாடு பல வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்தே போக்கமுடியும்.அல்லது தீர்க்க முடியாதபடி இது தீவிரமானதாக இருந்தாலும் இருக்கக்கூடும்.
இது எல்லா சைவ உணவு சாப்பிடுபவர்களையும் பாதிக்குமா?

உலகெங்கிலும் இருந்து கிடைத்திருக்கும் அறிக்கைகள் நீண்ட காலம் முழு சைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள் (அதாவது முட்டை, மாமிசம், மீன், கோழி அல்லது பால் வகை உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடாதவர்கள்) விட்டமின் பி12 குறைபாடு உள்ள அபாயத்திற்கு உள்ளாவதைத் தெரிவிக்கின்றன.ஆனால் துரதிர்ஷ்டவசமாக முழு சைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள் பி12 குறைபாட்டினால் ஏற்படும் அபாயத்தை உணர்வதில்லை.இவர்களுக்கு குறைவான பி12 சீரம் இருப்பதால் ந்யூரோ சைக்கியாட்ரிக் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.வாய்மூலமாக செலுத்தப்படும் பி12 உதவிப்பொருள்கள் பி12 சீர அளவை மீட்டு மாக்ரோசைடிக் அனிமியாவை நீக்கக் கூடும் என்றாலும் ந்யூரோ சைக்கியாட்ரிக் கோளாறு சிகிச்சைக்குப் பின்னர் பல மாதங்கள் இருக்கக்கூடும். சில கேஸ்களில் நரம்பு மண்டல பாதிப்பை சரி செய்யவே முடியாது.

அரிதான சில சமயங்களில் லாக்டோ -ஓவோ- சைவ உணவாளர்கள்அதாவது மாமிசம் மீன் அல்லது கோழி இவை அல்லாது பால் பொருள்களையும் முட்டையையும் மட்டுமே சாப்பிடுவோர் கூட பி12 உள்ள உணவைக் குறைவாகச் சாப்பிட்டால் அவர்களுக்கும் பி12 சீரம் குறைவாக இருக்கும். குறைந்த அளவு பி12 சீரம் உள்ளவர்கள் மாக்ரோசைடிக் அனிமியாவை வாய்மூலமாக செலுத்தப்படும் பி12 உதவிப்பொருள்கள் அல்லது பி12 ஊசி மருந்து மூலம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.ஆய்வு ஒன்றில் வயதுக்கு வந்த லாக்டோ -ஓவோ- சைவ உணவாளரின் பி12 சீரம் அளவுகள் முழு சைவ சாப்பாடு சாப்பிட ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் 35 விழுக்காடு கீழே வந்து குறைந்தது காணப்பட்டது. இந்த அதி விரைவான குறைந்த அளவு கல்லீரலில் சேமிக்கப்படும் பி12 இன் விளைவாக இருக்கலாம். இருந்தபோதிலும் விட்டமின் பி12 குறைபாடு சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களிடையே அடிக்கடி வருகிறது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல முடியும்.
விட்டமின் பி12 குறைபாட்டிற்கான காரணங்கள் எவை?

பற்பல காரணங்களினால் பி12 குறைபாடு ஏற்படுமென்றாலும், முக்கிய காரணமாகக் கூறப்படுவது
பி12 -ஐ அதிகமாக உட்கிரகிக்காமல் இருப்பது தான்.சிறுகுடலில் இது உட்கிரகிக்கப்படுவதற்காக உணவில் உள்ள விட்டமின் பி12 வயிற்றில் உருவாகும் புரோடீனுடன் சேர்ந்திருக்கப்பட வேண்டும். இப்படி உட்கிரகிப்பதற்காக பி12 ஏற்பிகள் சிறுகுடலின் கீழ் பாகமான ஐலியத்தில் ஏற்படுகின்றன.தினமும் பித்தப்பையில் வயதுக்கு வந்த எவரும் சுமார் 5 முதல் 7 மைக்ரோ கிராம் வரை பி12ஐ சுரக்கிறார்கள்.சாதாரணமாக இதில் பெரும்பாலானதை மறுபடியும் நாம் உட்கிரகிக்கிறோம்.விட்டமின் பி12 உட்கிரகிப்பு திறம்பட இருக்கும் வரையில் குறைபாடு உருவாகாது.என்றாலும் கூட விட்டமினை ஒருவர் உட்கிரகிக்காமல் இருந்தால் மூன்று வருடங்களில் பி12 குறைபாடு ஏற்படும்.
பி12 உட்கிரகிப்பு குறைவு சாதாரணமாக ஏற்படுவதற்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது:
மோசமான உணவுத் தேர்வினால் பி12 குறைந்திருத்தல்,வயதாவதால் கேஸ்டிரிடிஸ் இருத்தல் அல்லது வயிறின் ஒரு பகுதி கேஸ்ட்ரெக்டோமி போன்ற அறுவை சிகிச்சையினால் நீக்கப்படுதல் ஆகிய உள்நிலை காரணத்தினால் சுரப்பது இல்லாத போது வயிறில் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் இல்லாத போது- முக்கியமாக வயதானவர்களிடம் ஐலியல் (சிறு குடல்) உறுப்பு நீக்கம் அல்லது ஐலைடிஸ்
கல்லீரல் சேமிப்பினால் விட்டமின் பி12 குறைபாடு மனிதர்களில் மிக மெதுவாகத் தான் ஆரம்பிக்கும். அமெரிக்கர்களின் சாதாரண உணவு ஒரு நாளைக்கு 5 முதல் 15 மைக்ரோகிராம்கள் கொண்டு கல்லீரல் சேமிப்பைத் தாராளமாக்குகிறது. 3000 மைக்ரோகிராம்கள் ஒரு வயதுக்கு வந்த நபரிடமும் 30 முதல் 50 மைக்ரோகிராம்கள் ஒரு குழந்தையிடமும் சேமிக்கப்படுகிறதென்று மதிப்பிடப்படுகிறது. மாமிச உணவை முழுவதுமாக விட்டு விட்டவர்களிடம் பி12 குறைபாட்டிற்கான அறிகுறியோ அல்லது நரம்பு மண்டல சீர்குலைவுகளின் அறிகுறியோ தோன்ற பல வருடங்களாகும்
(விட்டமின் பி 12ஐ எப்படி உணவில் சேர்க்கலாம் என்பதை அடுத்த கட்டுரையி¢ல் பார்ப்போம்)

Pic Source : http://pcosdiva.com/wp-content/uploads/2012/08/hand-holding-vitamin-B12.jpg
****************************************

சைனஸ் பாதிப்பும் பல்வலியும் – Dr.Sukumar MDS

எண் சாண் உடம்பில் சிரசே பிரதானம். நமது தலையில் உள்ள கண், காது, மூக்கு, வாய், பல் போன்ற உறுப்புகள் ஒன்றினை ஒன்று நெருங்கியும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. மூக்குப் பகுதியில் உள்ள சிற்றறைகளுக்கும், பற்களுக்குமிடையே எப்படி தொடர்புகள் உள்ளது என்பது பற்றியும்,சைனஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு பல்வலி ஏற்படுமா ? என்பது பற்றியும் இந்த இதழில் காண்போம்.
பொதுவாக இரண்டு வகையான பல்வலியைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

1. பற்கள், ஈறுகள் பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்படும் பல்வலி.

2. சைனஸ் பாதிப்பினால் ஏற்படக்கூடிய பல்வலி.

1. பல், ஈறு பாதிப்பு பல் வலி:
பல், ஈறுகள் போன்றவற்றில் பாக்டீரியா தொற்றினால் பல்வலி ஏற்படும்.
ஈறுகளில் ரத்தம் கசிதல், பற்களில் குழி விழுதல் போன்ற அறிகுறிகள் பல்வலியினை உணர்த்தும்.
2. சைனஸ் பாதிப்பினால் பல்வலி:
மூக்கின் இரண்டு பக்கமும் உள்ள மேல் தாடை எலும்புப் பகுதி (மாக்ஸிலரி)யிலுள்ள சைனஸ் காற்று அறைகளில் ஏற்படும் தொற்றுகள், வீக்கம் போன்றவற்றினால் பல்வலி ஏற்படலாம்.
மேக்சிலரி சைனஸ் பகுதியில் தேங்கும் (சளி) நீரானது, மேல் தாடை எலும்புப் பகுதியில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்துவதால், மேற்பகுதி பற்களில் வலியினை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்:
எந்த விதமான அறிகுறிகளுமின்றி திடீரென விண்விண் என்று தெரிக்கக்கூடிய அளவில் பல்வலி ஏற்படும். உணவினை பற்களால் மென்றாலும் வலி ஏற்படும். ஆனால் ஒரு சில பேருக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்படலாம். கன்னத்திலுள்ள எலும்புகளை தொட்டால் வலி ஏற்படுவது போன்ற உணர்வு, முகவீக்கம், தாங்கமுடியாத தலைவலி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
ஆனால் மேற்கூறிய சைனஸ் பாதிப்புகளால் பல்வலி ஏற்படுவது குறித்து விபரம் தெரியாத மக்கள் பல்லை பிடுங்கி விடுங்கள் என பல் மருத்துவர்களிடம் சென்று அடம்பிடிக்கின்றனர். பல் மருத்துவர்கள் இது சைனஸ் பிரச்சனையினால் ஏற்படும் பல் வலி என எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் டாக்டர் என வலுக்கட்டாயமாக ஆரோக்கியமான பற்களை அவசரப்பட்டு,அடம்பிடித்து பிடுங்கி விடுகின்றனர்.
ஆகவே நோய் ஓரிடம் வலி ஓரிடம் என்பதனை அறிந்து சைனஸ் பிரச்சனைக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீணாக ஆரோக்கியமான பற்களை இழக்கவேண்டாமே! பல் போனால் சொல் போச்சு என்பதனை நினைவு கொள்வோம்.

Pic Source: https://mannfamilydental.com/wp-content/uploads/2014/09/sinuses_and_tooth_pain_9314.jpg

எச்சிலை சோதித்தால் ஒரு மனிதனின் வயதை அறிய முடியும்!

தமிழாக்கம் ச.நாகராஜன்
பல்வேறு வியாதிகளின் சிகிச்சை ஆய்வில் நோய் பற்றி அறிய ஒரு மனிதனின் எச்சிலை சோதனை செய்வது வழக்கம். ஆனால் ஒரு மனிதனின் எச்சிலை சோதனை செய்து பார்ப்பதன் மூலம் அவன் வயதை அறிய முடியும் என்பது இப்போது தெரியவருகிறது. எச்சில் மாதிரியை எடுத்து வயதை எப்படி அறிவது என்பதை இந்த கட்டுரையில் காணலாம். ‘உனது வயதை யாரும் அறியாமல் இருக்க துப்புவதை நிறுத்து’ என்ற பழமொழியை நீங்கள் ஒருவேளை கேட்டிருக்கலாம். அதன் அர்த்தம் என்ன என்று புரியாமல் விழித்திருக்கலாம். அதன் அர்த்தம் புரிய இதைத் தொடர்ந்து படியுங்கள்

வாயில் ஊறும் எச்சில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடலின் ஒவ்வொரு இயக்கத்திலும் பங்கு வகிக்கிறது.உடல் நலம் சீராக இல்லாத போது மட்டுமே நாம் எச்சிலை பரிசோதனை செய்து பார்க்கிறோம். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக இப்போது எச்சில் தலைப்புச் செய்தியாக மாறி இருக்கிறது. இது வியாதி பற்றிய செய்தி அல்ல. ஆனால் உங்களது பிறந்த வருடத்தை அறிவது பற்றிய விஷயம் இது!
என்ன,எச்சில் மூலம் வயதை அறிய முடியுமா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்க முனைவது இயல்பு தான்! ஆனால் இந்த ஆச்சரியமான விஷயம் அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இது விஞ்ஞான ஆராய்ச்சியில் மட்டும் பெரும் முன்னேற்றம் என்று மட்டும் கூறி விட முடியாது; குற்றவியலிலும் குற்றப் புலனாய்வுகளிலும் ஒரு பெரும் கருவியாகத் திகழ இருக்கும் பெரும் சாதனை என்று கூறத்தக்கதாகும்! எச்சில் மாதிரியை எடுத்து ஒரு மனிதனின் வயதை நிர்ணயிப்பது எப்படி என்பதை இனி பார்க்கலாம்
ஒரு மனிதனின் வயதை நிர்ணயிக்க எச்சில் பரிசோதனை ஏனெனில் அவனது மரபு பற்றிய தகவல்கள் மற்றும் ரகசியங்களை அவனது எச்சில் கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பதால் தான்! முறையாக ஒரு மனிதனின் எச்சிலை ஆய்வு செய்வதன் மூலம் அவனது வயதை நிர்ணயித்துவிடலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படி வயதைச் சுட்டிக் காட்டும் காரணி எது?எச்சிலை அடிப்படையாக வைத்து வயதை நிர்ணயிக்கும் செய்முறைக்கு மெதிலேஷன் என்று பெயர். மெதிலேஷன் என்றால் என்ன? டிஎன்ஏ எனப்படும் மரபணுவை உருவாக்கும் பில்டிங் ப்ளாக் கெமிக்கல் எனப்படும் கட்டுமான இரசாயனங்களில் மாறுதலை இந்த நடை முறை ஏற்படுத்தும். மெதிலேஷன் படிவங்கள் வயதுக்குத் தக்கப்படி மாறுகிறது.
டிஎன்ஏ யும் வயதாக வயதாக மாறுகிறது. விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில் மெதிலேஷனுக்கும் வயதுக்கும் தொடர்பைக் காண்பிக்கும் டிஎன்ஏ யின் 88 இடங்களைக் (sites) கண்டு பிடித்துள்ளனர். குறிப்பாக இரண்டு ஜீன்கள் மெதிலேஷனை ஒரு மனிதனின் வயதுடன் தொடர்பு படுத்துகிறது. இந்த ஜீன்களே ஒரு மனிதனின் வயது எவ்வளவு என்பதை நிர்ணயிப்பதில் உதவி புரிகிறது!
சமீபத்திய ஆய்வு ஒன்றில் இரட்டையர்களாகப் பிறந்த 34 ஜோடி ஆண்களின் எச்சில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சோதனைக்கு உள்ளான இவர்களின் வயது 21 வயதிலிருந்து 55 வயது முடிய இருந்தது. மாதிரிகளை ஆய்வு செய்து முடித்த பின்னர் மெதிலேஷன் படிவங்களில் உள்ள வித்தியாசங்களினால் இவர்களின் வயதை வெற்றிகரமாக நிர்ணயிக்க இவர்களின் எச்சில் பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட முன்னாள் யூசிஎல் மரபியல் நிபுணரான டாக்டர் ஸ்வென் போக்லாண்ட், மெதிலேஷனுக்கும் ஒரு மனிதனின் வயதுக்கும் உள்ள தொடர்பு வலுவானது என்றும் ஒரு மனிதனின் ஜெனோமிலுள்ள இரண்டு பில்டிங் ப்ளாக்குகள்(அவள் அல்லது) அவனது வயதை நிர்ணயிக்க பெரிதும் உதவுகிறது என்றும் கூறினார். ஒரு டூத்பிரஷிலிருந்தோ அல்லது எதையாவது கடித்த எச்சிலிலிருந்தோ, ஏன் ஒரு கப், கோப்பை , கிளாஸ் அல்லது ஏதேனும் எச்சில் படுத்தப்பட்ட பாத்திரத்திலிருந்தோ எடுக்கப்பட்ட எச்சில் மாதிரிகள் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்படலாம் என்று இந்த ஆய்வுக் குழு முடிவு செய்தது!
ஆய்வின் அடிப்படைகள்
யூசிஎல்ஏயில் குழந்தை இயல் மற்றும் யூராலஜி மற்றும் ஜெனிடிக்ஸ் துறை பேராசிரியரும் இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவரும் ஆன டாக்டர் எரிக் வைலெய்ன், ‘எச்சில் ஒரு மனிதனின் வயதை நிர்ணயித்துக் கூற திறமாகப் பயன்படுத்தப்படலாம்’ என்று கூறுகிறார். மருத்துவ மற்றும் குற்றவியல் புலனாய்வுகளில் சந்தேகத்துக்குரிய ஒருவரின் வயதை துல்லியமாக மதிப்பிட தங்களின் ஆய்வு உதவும் என்றும் அவர் கூறுகிறார்.
குற்றம் நடந்த இடங்களில் சென்று புலனாய்வை மேற்கொள்ளும் குற்றவியல் மற்றும் தடயவியல் புலனாய்வாளர்களுக்கு இது சாதாரண செய்தி அல்ல!ஒரு மனிதனின் சரியான வயதைத் தீர்மானிக்க ஒரு திறமையான தடயவியல் கருவியாக இது அமைகிறது. இதன் மூலம் குற்றம் நடந்த இடங்களில் சேகரிக்கக்கூடிய ஒரு சிறிய எச்சில் மாதிரியைக் கொண்டு ஏராளமான கிரிமினல் கேஸ்களின் தீர்வை சரியான படி கண்டுபிடிக்க முடியும்!
இந்த ஆய்வில் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது. ஒரு மனிதனின் உடலியல் ரீதியாக அவரது பயோ ஏஜ் என்ன என்பதை அவரது எச்சில் மாதிரியிலிருந்து கண்டுபிடிக்க முடியும். இது மருத்துவ விஞ்ஞானத்தில் பெரும் உதவியை அளிக்கும். ஏனெனில் எதிர்காலத்தில் ஒருவர் எந்தெந்த மாதிரியான உடல்நலப் பிரச்சினைகளை எதிர் கொள்ளக்கூடும் என்பதையும் எச்சில் மாதிரி மூலம் டாக்டர்கள் முன்கூட்டியே சொல்ல முடியும். ஒருவரது பயோ ஏஜ் என்ன என்பதை நிர்ணயித்தவுடன் (அவள் அல்லது) அவரோ என்ன விதமான உடல் நல பிரச்சினைகளை எதிர் கொள்ளக் கூடும் என்பதையும் தெரிந்து கொண்டு அவருக்கு அந்த அபாயங்களைத் தவிர்க்க திறமான யோசனைகளை இனி தருவது சாத்தியம். அதிக நேரம் எடுக்கக்கூடிய மிகுந்த செலவுடைய இதர சிகிச்சைகளுக்கும் அதற்கான ஆய்வு சோதனைகளுக்கும் இனி அவசியமே இல்லை என்றும் ஏனெனில் இந்த எச்சில் மாதிரியின் மீதான சோதனை மிகவும் எளிமையானது என்றும் டாக்டர் வைலெய்ன் கூறுகிறார். அத்தோடு ஒருவரின் உண்மையான வயதை விட அவரது பயோ ஏஜ் எனப்படும் உடலியல் ரீதியான வயது மாறுபட்டிருக்கலாம் என்பதால் இந்த சோதனை ஒரு மனிதனின் உடல்நல அபாயங்களை உரிய காலத்தில் முன் கூட்டியே கண்டுபிடித்து அவரை எச்சரிக்க வழி வகுக்கும்!
ஒருவரின் எச்சில் மாதிரி எப்படி அவரது வயதை நிர்ணயித்து குற்றவியல் மற்றும் மருத்துவ விஞ்ஞான தளங்களில் உதவி புரிய முடியும் என்பதை இங்கு சுருக்கமாகப் பார்த்தோம்.உண்மையிலேயே எண்ணி எண்ணி பெருமிதப்பட வேண்டிய ஒரு ஆராய்ச்சி இது என்பதில் ஐயமுண்டா என்ன?

Pic Source : http://medifitbiologicals.com/wp-content/uploads/2015/11/SPUTUM-TEST-3.jpg
************************

தொலைக்காட்சியில் தோல் பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கு பிஹெச் பற்றிய உண்மைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன! உங்கள் பிஹெச் வால்யூ சரியாக இருக்க என்னென்ன உணவு வகைகளை விலக்க வேண்டும் எவற்றைச் சேர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியாவிடில் முதலில் அதை அறியப் படியுங்கள் இந்தக் கட்டுரையை!
சென்ற கட்டுரையின் தொடர்ச்சி.

சரியான பிஹெச் வால்யூ பெறுவதற்கான உணவு வகைகள்!
—————————————————————————

ச.நாகராஜன்

உங்கள் உடலின் பிஹெச் வால்யூ 7.35 முதல் 7.45 வரை இருந்தால் அதை அப்படியே கடைசி வரை காப்பாற்றி வர வேண்டும். ஏனெனில் நீங்கள் அபூர்வமான ஆரோக்கியம் உள்ளவர். ஆனால் இது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் வியாதி நிச்சயம் என்பதால் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எந்த உணவு வகைகளைச் சேர்ப்பது எதை நீக்குவது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். முதலில் பிஹெச் வால்யூ சரியான அளவாக இல்லாமல் இருந்தால் அஸியோடிஸ் உருவாகி விடும் என்பதையும் இந்த அஸியோடிஸ் உருவாக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொண்டால் நீங்கள் மலைத்துப் போவீர்கள்.
அஸியோடிஸ் (Acidosis) உருவாக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள்:-

இதய குழலிய சேதம் (Cardiovascular damage)
உடல் எடை கூடுஹல், உடல் பருமன், டயாபடீஸ் (Weight gain, obesity and diabetes)
சிறுநீர்ப்பை பிரச்சினைகள் Bladder condition)
சிறுநீர்ப்பையில் கற்கள் (Kidney stones)
நோய் தடுப்புத் தன்மை குறைவு (Immune deficiency)
இயக்கு உறுப்பு சேதம் விரைவுபடுதல் (Acceleration of free radical damage)
ஹார்மோன் பிரச்சினைகள் (Hormonal problems)
உரிய காலத்திற்கு முன்பே வயதான தோற்றம் அடைதல் (Premature aging)
எலும்பு மெலிதல் மற்றும் மூட்டுவலி (Osteoporosis and joint pain)
தசை வலி மற்றும் லாக்டிக் அமிலம் அதிகரிப்பு (Aching muscles and lactic acid buildup)
குறைந்த சக்தி மற்றும் தொடர்ந்து களைப்பு (Low energy and chronic fatigue)
மெதுவாக ஜீரணமாதல் (Slow digestion and elimination)
ஈஸ்ட்/பூஞ்சை அதி வளர்ச்சி (Yeast/fungal overgrowth)
சக்தியின்மை மற்றும் களைப்பு (Lack of energy and fatigue)
உடல் உஷ்ண நிலை குறைதல் (Lower body temperature)
தொற்று வருவதற்கான போக்கு (Tendency to get infections)
ஊக்கம், சந்தோஷம், உற்சாகம் இழப்பு (Loss of drive, joy, and enthusiasm)
மனச்சோர்வான போக்கு (Depressive tendencies)
சுலபமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவது (Easily stressed)
வெளுத்த தோற்றம் (Pale complexion)
தலைவலி (Headaches)
கண் இமை வீக்கம் (Inflammation of the corneas and eyelids)
தளர்ந்த வலியுள்ள பற்கள் (Loose and painful teeth)
வீக்கமுடைய கூசும் ஈறுகள் (Inflamed, sensitive gum)
வாய் மற்றும் வயிற்றுப் புண் (Mouth and stomach ulcers)
உதடோர வெடிப்பு (Cracks at the corners of the lips)
வயிற்றில் அதிகமாக அமிலம் (Excess stomach acid)
வாயுக் கோளாறு (Gastritis)
மெலிதான நக வளர்ச்சி மற்றும் சுலபமாக உடைதல்(Nails are thin and split easily)
கேசம் பளபளப்பின்றி இருத்தல், சுலபமாக உதிர்தல் (Hair looks dull, has split ends, and falls out)
வறட்டுத் தோல் (Dry skin)
தோல் சுலபமாக எரிச்சல் உறுவது (Skin easily irritated)
கெண்டையேறல் மற்றும் விறைப்பு (Leg cramps and spasms)

அடேயப்பா என்று பயப்படக்கூடிய அளவு பிரச்சினைகளை இந்த சீரற்ற பிஹெச் வால்யூ உருவாக்கி விடும்.
இதைப் போக்குவதற்காக நாம் விலக்க வேண்டிய மற்றும் ஏற்க வேண்டிய உணவு வகைகளின் பட்டியல் இதோ:-
ஆல்கலைன் உணவு வகைகள் (ஏற்க வேண்டிய உணவு வகைகள்)
1)முட்டைகோஸ்,வெங்காயம்,காலிப்ளவர்,முள்ளங்கி,கீரைகள்,காரட்,பீட் ரூட், க்ரீன் பீன்ஸ்,உள்ளிப்பூண்டு,வெள்ளரி உள்ளிட்ட கறிகாய் வகைகள்
2)எலுமிச்சம்பழம்,ஆவாகாடோ, தக்காளி திராட்சை உள்ளிட்ட பழ வகைகள்
3)ப்ரஷ் வெஜிடபிள் ஜூஸ், தூய்மையான நீர், எலுமிச்சை சாறு, ஹெர்பல் டீ, சர்க்கரை சேர்க்கப்படாத சோயா மில்க், பாதாம் பால்
4) பாதாம் பருப்பு, பறங்கி, சன் ப்ளவர்,வெந்தயம் உள்ளிட்ட பருப்பு வகைகள்
5) தேங்காயெண்ணெய், ஆலிவ் ஆயில்
அமில உணவு வகைகள் (விலக்க வேண்டிய உணவு வகைகள்)
1) பன்றி, ஆட்டு, பசு மாமிசம் உள்ளிட்ட அனைத்து மாமிச வகைகள்
2) மீன்கள் உள்ளிட்ட கடல் உணவு வகைகள்
3) பால், முட்டை, சீஸ், க்ரீம், தயிர், ஐஸ்க்ரீம்
4) வினிகர், ஒய்ட் பாஸ்தா, ஒய்ட் ப்ரெட், ஹோல்மீல் ப்ரெட், பிஸ்கட்டுகள்,தக்காளி சாஸ்,தேன், செயற்கை இனிப்பு வகைகள்
5) இனிப்பு வகைகள்,சாக்லெட், மைக்ரோவேவ் உணவுகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், இன்ஸ்டண்ட் உணவு வகைகள்,பாஸ்ட் புட் வகைகள்
6) வெஜிடபிள் ஆயில்,சன் ப்ளவர் ஆயில், கார்ன் ஆயில்
7) ஆல்கலைன் பட்டியலில் இல்லாத இதர பழங்கள்
8) முந்திரிபருப்பு
இன்னும் அதிக விவரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டால் அவர் விளக்குவார்.
பி ஹெச் வால்யூவை அறிந்து கொள்ளுங்கள் நல்ல நோயில்லா வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழும் வழியை மேற்கொள்ளுங்கள்!

Pic Source : https://trans4mind.com/nutrition/alkaline.jpg
**********************************