தினம் ஒரு சிறுதானியம்

நாள்   :

திங்கள் – தினை

செவ்வாய் – வரகு

புதன் – சாமை

வியாழன் – குதிரைவாலி

வெள்ளி – கேழ்வரகு

 

செய்யக்கூடிய உணவு வகைகள்:

இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பொங்கல், வடை, அடை, உப்புமா, புட்டு, பனியாரம், பாயாசம், முறுக்கு எள்ளடை, அதிரசம், லட்டு பிரியாணி, சாதம், கூழ், சூப் இவைகளை ருசியாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

 

திங்கள் – தினையின் பயன்கள்:

உடலுக்குத் தேவையான புரதம். ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

இது இதயத்தைப் பலப்படுத்தும்

வைட்டமின் பி. பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது.

 

செவ்வாய் – வரகின் பயன்கள்

நார்ச்சத்து மிக  அதிகம்

உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்

மாதவிடாய்க் கேளாறு குணமாக்கும்

உடல் எடை சர்க்கரை அளவு, மூட்டுவலியையும் குறைக்கக்கூடியது.

 

புதன் – சாமையின் பயன்கள்

ஆண்மைக் குறைபாடுகள் நீங்கும்.

எலும்புகள் தசைகள் வலிமை பெரும்.

கலோரி மிகக் குறைவு, ஊட்டச்சத்துக்கள் அதிகம்

சர்க்கரை நோய், இரத்த சோகை, குடல்புண், மலச்சிக்கல் குணமாகும். மாதவிடாய்க் கேளாறு குணமாக்கும்.

 

வியாழன் – குதிரைவாலியின் பயன்கள்:

சர்க்கரை நோய் இரத்த சோகை குடல் புண், மலச்சிக்கல் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.

 

வெள்ளி – கேழ்வரகின் பயன்கள்:

சர்க்கரை நோய்  இரத்த சோகை, மூட்டுவலி மலச்சிக்கல் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

எலும்பு உறுதிப்படுத்தும் சதையை வலுவாக்கும்.

 

இக்காலத்தில் அதிக அளவு கொழுப்பையும்,நோய் உண்டாக்க கூடிய சர்க்கரைப் பொருள்களைத் தரும் பீட்சா, பர்கர் பொரித்த மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை உண்பதைத் தவிர்த்து, இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொள்ளும் போது உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்போம் என்பது நிச்சயம்.

 

சிறுதானியங்களின் பயன்கள்:

 

கம்பு:

உடல் உஷ்ணமடைவதைக் குறைக்கிறது. வயிற்றுப் புண் மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது.

வெள்ளைச் சோளம்:

செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை  நோய்களைக் குணப்படுத்துகிறது.

கேப்பை:

சர்க்கரை&ரத்த சோகை நோய்களைக் குணப்படுத்துகிறது.

சாமை:

சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.

தினை:

இதயத்தைப் பலப்படுத்துகிறது.

வரகு:

சர்க்கரை அளவு மூட்டுவலியைக் குறைக்கிறது

குதிரைவாலி:

உடல் நலத்தைச் சீராக்கி, சர்க்கரை அளவை குறைக்கிறது.  ஆண்டி ஆக்ஸிடன்டாக வேலை செய்கிறது.

 

உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -2
ச.நாகராஜன்

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதைப் பயன்படுத்திச் செயல்படத் தயாராக இருக்க வேண்டும், அவ்வளவு தான்!” – மார்க் ஆஸ்ட்ரோஃப்ஸ்கி
இந்தியாவிலிருந்து, குறிப்பாக சென்னை, பங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் அபார மூளையால் பல்வேறு விதமான மென்பொருள்களை ‘ஸ்டார்ட் அப் கம்பெனி’ எனப்படும் சிறு கம்பெனிகளை ஆரம்பித்து சிருஷ்டிக்கின்றனர். அவை நன்கு வெற்றி அடைந்தவுடன் மிகப் பெரும் கம்பெனிகள் அந்தக் கண்டுபிடிப்புகளை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. நல்ல பணத்தை தங்களின் இளமைக் காலத்திலேயே பார்க்க முடியும் இவர்களின் அறிவுத் திறனை அறிவியல் உலகம் பாராட்டுகிறது. எல்லோராலும் சாதிக்க முடியும் என்று கண் எதிரேயே நிரூபிக்கும் இந்த இளைஞர்களைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
இவர்களைப் போல இந்தியர்கள் அனைவரும் ஆக முடியும்! எல்லாத் துறையிலும் உலகளாவிய விதத்தில் இந்த வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க இன்னும் சில சாதனையாளர்களைப் பார்ப்போம்:-
ஓப்ரா வின்ஃப்ரே
இன்று அமெரிக்க தொலைக்காட்சியில் ஓப்ரா வின்ஃப்ரே பற்றித் தெரியாதவர் இருக்க முடியாது. அவர் தனது இளமைக் காலத்தில் ஆறு வருடங்கள் தன் பாட்டியுடன் வாழ நேர்ந்தது. மிக்க ஏழ்மையான சூழ்நிலையில் உருளைக்கிழங்குகளை பாக் செய்து வரும் சாக்குகளினால் ஆன உடைகளையே அவர் அணிந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர்களாலும் ஒரு நண்பராலும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் தனது 13ஆம் வயதில் வீட்டை விட்டு ஓடிப் போனார். 14ஆம் வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. பிறகு அவர் தன் தாயுடன் வசிக்கச் சென்றார்.ஆனால் அம்மாவோ அவரை தந்தையடன் வசிக்க அனுப்பி வைத்தார்.
அதனால் அவரது வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கல்லூரிக்கு படிக்கச் சென்றார். அங்கு ஒரு அழகிப் போட்டியில் பரிசைப் பெற்றார். ஒரு ரேடியோ ஸ்டேஷன் அவரை ஆதரிக்க ஆரம்பித்தது. அப்போது தான் அவருக்குத் தன் திறமையே தெரிய வந்தது. பேட்டிகளை எடுக்க ஆரம்பித்தார். பின்னர் நடந்ததை உலகம் அறியும். இன்று உலகின் நம்பர் ஒன் ஷோ ஓப்ரா வின்ஃப்ரே ஷோ! அவரது இன்றைய சொத்தின் மதிப்பு 270 கோடி அமெரிக்க டாலர்கள்!
வால் மார்ட் கண்ட சாம் வால்டன்
அமெரிக்காவில் ஓக்லஹாமாவில் பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியின் போது வால்டன் என்ற ஏழ்மைக் குடும்பம் தவியாய்த் தவித்தது. அன்றாட செலவுகளுக்குப் பணம் வேண்டுமே! வால்டன் பசுமாட்டின் பாலைக் கறக்க ஆரம்பித்தார். கறந்த பாலை வாடிக்கையாளர்களுக்கு ‘டோர்-டெலிவரி’ செய்தார். அன்றாடம் பேப்பர் படிப்பவர்களுக்கும் நாளிதழ்களையும் இதர பத்திரிக்கைகளையும் போட்டு அதில் வரும் வருமானத்தையும் வைத்து செலவுகளை ஒருவழியாய்ச் சமாளித்தார்.
வால்டன் தனது 26ஆம் வயதில் மிசௌரி பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ.படிப்பை முடித்து ஒரு வெரைட்டி ஸ்டோரை ஆரம்பித்தார்.அர்கான்ஸாஸில் உள்ள அந்த ஸ்டோரை 5000 டாலர் ராணுவத்திலிருந்து வந்த பணத்தையும் 20000 டாலர் வங்கி கடனையும் வைத்து வாங்கினார். கடுமையான உழைப்பின் மூலம் ஒரு கடையை இரண்டாக விஸ்தரித்தார். இரண்டை ஒரு சங்கிலித் தொடர் வரிசைக் கடைகளாக்கினார். அது வால்மார்ட் என்று பிரசித்தம் அடைந்தது. இன்று வால்மார்ட் கடைகளைப் பார்ப்பவர் வாயைத் திறந்து பிரமிக்கின்றனர். அவ்வளவு பிரம்மாண்டம்! 1992இல் அவர் இறந்தார். மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வால்மார்ட் உரிமையானது. இன்று வால்மார்ட்டை அறியாதோர் இல்லை!

ரிச்சர்ட் டெஸ்மாண்டின் காரேஜ் வாழ்க்கை
ரிச்சர்ட் டெஸ்மாண்ட், பெற்றோர் விவாகரத்து செய்யவே தாயிடம் வளர ஆரம்பித்த ஒரு குழந்தை! தாயும் மகனும் ஒரு காரேஜில் தான் வாழ முடிந்தது. 14ஆம் வயதில் அவர் பள்ளிப்படிப்பை விட்டார். ஒரு ட்ரம்மராக வாழ்க்கையை ஆரம்பித்தார்.சின்ன சின்ன வேலைகளைச் செய்தார். இசையில் பெரிய விற்பன்னராக இல்லாவிட்டாலும் கூட, பின்னால் மெதுவாக ரிகார்டு செய்யும் கடைகளை ஆரம்பித்தார். பின்னர் இசை சம்பந்தமாக இரு பத்திரிக்கைகளை ஆரம்பித்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்தது. பிரிட்டனைச் சேர்ந்த பெண்ட்ஹவுஸ் மற்றும் ஓகே போன்ற பிரபல பத்திரிக்கைகளைப் போல புகழ் படைத்த பத்திரிகைகளை அவர் நடத்த ஆரம்பித்தார். அத்தோடு தனக்கு வந்த வருமானத்தில் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்கு ஈந்து பெரும் நன்கொடையாளராகவும் ஆனார்.
சன் க்ளாஸ் தயாரித்த லியனார்டோ டெல் வெச்சியோ
தாயோ விதவை. நான்கு குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டார். நான்கு குழந்தைகளில் ஒன்றான லியனார்டோ டெல் வெச்சியோ அனாதை இல்லத்தில் வளர்ந்தார். காரின் பாகங்களைத் தயாரிக்கும் மோல்டுகளைச் செய்யும் தொழிலகத்தில் சேர்ந்தார். அத்தோடு கண்ணாடி ப்ரேம்களைச் செய்யவும் கற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஒரு விரலே போனது.
23ஆம் வயதில் கற்ற கலையை வைத்து சொந்தமாக ஒரு மோல்ட் ஷாப்பை ஆரம்பித்தார். கண்ணாடி ப்ரேம்களில் சன் க்ளாஸ்களை அமைத்தார். உலகப் புகழ் பெற்றார், ரே- பன், ஓக்லி போன்ற முத்திரை பெற்ற ப்ராண்ட் வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். லக்ஸோடிகா என்ற அவரது நிறுவனம் விரிவடைந்தது. இன்று ஆறாயிரம் கிளைகளுடன் 1150 கோடி டாலர்களுக்கு அவர் அதிபதி!
இது போல இன்னும் நூற்றுக்கணக்கானவர்களின் உண்மை சரிதங்களை எடுத்துக் காட்ட முடியம், இன்றைய அறிவியல் உலகில்!
சோம்பேறிகளுக்கு இல்லை வெற்றி! கடுமையான உழைப்புடன் மக்களின் தேவைக்கு ஏற்றபடி தங்கள் மனச் சித்திரத்தில் உதித்த சேவைப் பொருள்களை ஆக்கபூர்வமான படைப்பாற்றலைக் குழைத்து சமூகத்திற்குப் படைக்கும் அனவருமே இன்று வெற்றியாளர்கள் தான்!
இதற்கான அடிப்படைக் காரணம் அறிவியல் உலகம் கட்டற்ற வாய்ப்புகளை அவிழ்த்து விட்டிருப்பதே ஆகும்!

Pic Source : https://cdn.yourstory.com/wp-content/uploads/2016/09/oprah.png

உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -1
ச.நாகராஜன்

“ஒரு மனிதரின் மனதையும் இதயத்தையும் புரிந்து கொள்ள அவர் இதுவரை என்ன சாதித்திருக்கிறார் என்று பார்க்காதே! அவர் என்னவாகவிரும்புகிறார் என்பதை அறி!” – கலில் ஜிப்ரான்
அறிவியல் முன்னேற முன்னேற வெற்றிக்கான வரம்பு எல்லையற்று விரிந்து விட்டது!
யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். வானமும் எல்லை இல்லை. எந்த உயரத்திலும் ஏறி வெற்றிக் கொடி நாட்டலாம். அது தான் இன்றையஅறிவியல் உலகம்.
ஆதாரம் வேண்டுமா? இதோ கீழே தரப்படுபவர்களைப் பற்றிப் படியுங்கள். உற்சாகம் அடையலாம்.உத்வேகம் பெறலாம். அது சரியில்லை; இதுசரியில்லை என்று சாக்கு போக்கு சொல்லாமல் உங்கள் லட்சியத்தை நோக்கி முன்னேறி வெற்றி பெறலாம்.
உத்வேகமூட்டும் சில உண்மை வரலாறுகள் இதோ, உங்களுக்காகவே!
மரியா தாஸ் க்ரகாஸ் சில்வா ஃபாஸ்டர்
பிரேஜிலில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம் பெட்ரோப்ராஸ். இதனுடைய தலைமைப் பொறுப்பை முதன் முதலாக ஒரு பெண்மணிஏற்றுள்ளார். உலகமே வியக்கிறது இன்று! மரியா தாஸ் க்ரகாஸ் சில்வா ஃபாஸ்டர் என்ற அந்தப் பெண்மணி சாதனை படைத்து விட்டார். மொரோடொ ஏடியஸ் என்ற ஊரில் தன் இளமைப் பருவத்தைத் தொடங்கினார் மரியா. மிக மிக ஏழ்மையான குடும்பம். அம்மா கடும் உழைப்பாளி. அப்பாகுடிகாரர். வேறு வழியின்றி சாலையில் குப்பையோடு கிடக்கும் கேன்களையும் பேப்பர்களையும் பொறுக்கித் திரட்டி சிறிது பணத்தைச் சம்பாதித்துவந்தார் மரியா.
1978ஆம் ஆண்டு ஆரம்ப பயிற்சியாளராக பெட்ரோப்ராஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். கடுமையான உழைப்பு. எதையும் எதிர்கொள்ளும் திறன். எல்லாதடைகளையும் உடைத்தெறிந்தார் மரியா. முதன் முதலாக CEO எனப்படும் தலைமைப் பொறுப்பு அதிகாரியாக சமீபத்தில் பதவி ஏற்றார்.
நிறுவனங்களைப் பற்றி மதிப்பிடும் உலகின் தலையாய நிறுவனமான ப்ளூம்பெர்க் மரியாவைப் பற்றிய தனது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.அவரது ஓய்வில்லாத கடும் உழைப்பே அவரை இந்த உயர் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்கிறது ப்ளூம்பெர்க். அவரது வேலை செய்யும் பண்புஅவருக்கு கவைரோ என்ற பட்டப் பெயரை நிறுவனத்தில் சம்பாதித்துக் கொடுத்தது. கவைரோ என்பது கிரிமினல்கள் நிறைந்த ப்ரேஜில் நகர்களில்அவர்களை அப்புறப்படுத்த ப்ரேஜில் போலீசார் உபயோகப்படுத்திய போலீஸ் வாகனத்தின் பெயர்! பிப்ரவரி, 2015இல் அவர் சிஇஓ ஆனதற்குஉலகமே வாழ்த்துத் தெரிவித்தது.
மூன்று வேலை பார்த்து கஷ்டப்பட்ட டு வான் சாங்
1981ஆம் ஆண்டு கொரியாவிலிருந்து ஒரு இளம் தம்பதிகள் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தனர். இளம் மனிதரின் பெயர் டு வான் சாங்.மனைவியின் பெயர் ஜின் சூக். அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வாழ்க்கைச் செலவை ஈடுகட்டுவதற்காக டு வான் சாங் ஒரே சமயத்தில் மூன்றுவேலைகளைப் பார்த்தார். ஒரு காபி ஷாப்பிலும். ஒரு பெட்ரோல் பங்கில் பணியாளாகவும், ஒரு கட்டிடத்தில் காவல் காப்பவராகவும் இப்படி ஒரேசமயத்தில் மூன்று வேலைகளையும் பார்த்து பணம் சம்பாதித்த அவர் 1984ஆம் ஆண்டு ஒரு துணிக்கடையை ஆரம்பித்தார்.
அந்த ஒரே துணிக்கடை Forever 21 என்று இப்போது உலகப் புகழ் பெற்றுள்ள நிறுவனத்தை ஆரம்பிக்க வழி கோலியது. இப்போது 480ஸ்டோர்களுடன் ஆண்டு ஒன்றுக்கு 300 கோடி டாலர் வருமானத்தை ஈட்டுகிறது. இதை தனது குடும்ப வர்த்தகமாக மட்டுமே நடத்துகிறார் டு வான்சாங். அவரது மகள்களான லிண்டா மற்றும் எஸ்தர் இப்போது தந்தைக்கு உதவியாக வணிகத்தை போட்டி போட்டுக் கொண்டு வளர்க்கிறார்கள். டுவானின் சாதனைக்குக் காரணமும் கடும் உழைப்பே தான்!
இருட்டறை காபினில் வாழ்க்கையைத் துவங்கிய ஹரால்ட் சிம்மன்ஸ்
இன்று பல கோடி டாலர்களுக்கு உரியவர். அன்றோ சிறிய காபின் ஒன்றில் வாழ்ந்தவர். பெயர் – ஹரால்ட் சிம்மன்ஸ். டெக்ஸாஸில் கோல்டன் நகரில்மின்சாரமும் குழாயுமின்றி இருந்த ஒரு இருட்டறையில் அவர் தன் ஆரம்ப கால நாட்களைக் கழித்தார். இருந்தாலும் மனம் தளரவில்லை.நம்பிக்கையை இழக்கவில்லை. பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.ஏ. படிப்பை முடித்தார்.பின்னர் பொருளாதாரத்தில் மாஸ்டர் பட்டமும் பெற்றார்.
முதல் முயற்சியாக பல மருந்துக்கடைகளின் சங்கிலித் தொடர் ஒன்றை கடன் வாங்கிய பணத்தை வைத்து ஆரம்பித்தார். அது இன்று 100ஸ்டோர்களை உடைய சங்கிலித் தொடர் கடைகளாகப் பரிமளிக்கிறது. அந்தக் கடைகளை எகெர்ட் என்ற பெரும் நிறுவனத்திற்கு 5 கோடிடாலர்களுக்கு விற்றார். அவ்வளவு தான், கையில் கிடைத்த பணத்தை வைத்து பிரம்மாண்டமான கார்பொரேட் ஜெயண்ட் ஆகி விட்டார். இப்போதுஆறு கம்பெனிகளுக்கு உரிமையாளர். அதில் ஒன்று டைட்டானியம் மெடல்ஸ் கார்பொரேஷன் என்ற பெரிய நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம்தான் உலகிலேயே மிக விலைமதிப்புள்ள டைட்டானியத்தை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனம்.
ஆக அறிவியல் உலகம் இன்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆதரவாக எல்லையற்ற சாத்தியங்களைத் திறந்து விட்டிருக்கிறது.
ஆசையும், லட்சியமும் அதற்கேற்ற உழைமப்பும் இருக்கிறதா, வெற்றி நிச்சயம் தான்

Pic Source :http://www.topnews.in/files/Petrobras.jpg

இயற்கையில் கணித இரகசியம் ! – 3

 ச.நாகராஜன்

             “எல்லாமே எண்கள் தான்!”

                                -பிதகோரஸ்

இயற்கையில் உள்ள கணித ரகசியங்களையும் வடிவமைப்பு ரகசியங்களையும் கண்டுபிடிக்க விஞ்ஞானியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஐன்ஸ்டீன் ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்க ஒளியின் மீது ஏறிச் செல்வது போலக் கற்பனை செய்து அதைக் கண்டு பிடித்தார். ஆனால் சாமானியராக இருந்த பலரும் கணித ரகசியங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக ‘குட் வில் ஹண்டிங்’ (Good Will Hunting) என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் கதாநாயகனான வில் ஹண்டிங் என்ற இருபது வயது இளைஞனைக் கூறலாம். இந்த ஆங்கிலப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்த ஹண்டிங் மிகப் பெரும் மேதைகளாக இருந்த கணிதப் பேராசிரியர்களால் தீர்க்க முடியாத கணிதப் பிரச்சினைகளை அனாயாசமாக தீர்த்து விடுவான்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் அமெரிக்காவில் சாண்டியாகோவில் வாழ்ந்தவர் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாரான பெண்மணி மர்ஜோரி ரைஸ். அவர் கணிதப் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்த ஜாமெட்ரி வடிவங்களை இல்லத்தில் இருந்தபடியே கண்டுபிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். 1976இல் அவர் இப்படி 58 விசேஷ வடிவங்களை அமைத்துக் காட்டினார்.

1998ஆம் ஆண்டு கல்லூரி மாணவரான ரோலண்ட் க்ளார்க்ஸன் என்பவர் மிகப் பெரும் பிரைம் எண்ணை – பகா எண்ணைக் கண்டு பிடித்தார். (பகா எண் என்பது ஒன்றாலும் அதே எண்ணினாலும் மட்டுமே வகுக்கக் கூடிய ஒரு எண். உதாரணமாக 11 என்ற எண்ணை ஒன்றாலும் அதே பதினொன்றாலும் மட்டுமே வகுக்க முடியும்) இப்போது புதுப் புது பிரைம் நம்பர்களைப் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே கண்டுபிடிக்கின்றனர்!

கயாஸ் எனப்படும் குழப்பம் அல்லது சீரற்ற தன்மை பற்றிய கயாஸ் தியரி என்று ஒன்று உண்டு. இந்த குழப்பத்திலும் கூட ஒரு ஒழுங்கு இருக்கிறது என்பதை இப்போது கண்டு பிடித்துள்ளனர்.

வானத்தில் உள்ள மேகக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவத்திலும் அளவுகளிலும் சீரற்ற தன்மையில் இருப்பது போல நம் கண்களுக்குத் தோன்றினாலும் அதை உயர்த்திலிருந்து பார்க்கும் போது அதிலும் ஒரு ஒழுங்கு, லயம் இருப்பதைப் பார்த்து விஞ்ஞானிகள் பிரமிக்கின்றனர்.

இப்படி கணித மர்மங்களை ஏன் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். முதலாவதாக பிரபஞ்சத்தில் உள்ள புதிர்கள் அனைத்திற்கும் விடைகளை கணித எண்களே தருகின்றன! பிரபஞ்சத்தில் உள்ள மர்மங்களைக் கண்டுபிடித்து விட்டால் நாளை என்ன நடக்கும் என்ற கணிப்பைச் சரியாகச் செய்ய முடியும். ஒரு விண்கல் நம் பூமியின் மீது மோத வருகிறது என்றால் அதைத் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கையிலும் ஈடுபட முடியும்.

அத்தோடு இந்த இயற்கை கணித ரகசியங்களைக் கண்டுபிடித்து விட்டால் மிக உயரிய நாகரிகத்தை அடைந்து வளமுடன் அனைவரும் வாழும் வழியையும் கண்டு பிடிக்கலாம்.

நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக் கண்டு பிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர்.ஸ்ரீ யந்திரம் என்பது பிரபஞ்ச  தத்துவத்தையும் ரகசியத்தையும் சிறு யந்திரத்தில் அடக்கிக் காண்பிக்கப்பட்ட வழியே என்றும் அதிக ஆற்றலைக் கொண்ட இந்த யந்திரத்தை இப்போது ‘டீ- கோட்’ செய்ய விஞ்ஞானிகள் முயல்கின்றனர் என்பதும் சுவையான செய்தி அல்லவா! நான்காம் தலைமுறை கணினி கூட ஸ்ரீயந்திரத்தின் சிக்கலான அமைப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை இதுவரை!

பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் பிதகோரஸ் கூறினார் என நம்புகின்றனர். ஆனால் வடமொழியில் உள்ள கடபயாதி சங்க்யா என்ற முறை எதையும் கணித சூத்திரத்தில் அடக்கி விடும் ஒரு வழி முறையாகத் தொன்று தொட்டு நம் நாட்டில் இருந்து வருகிறது. பெயரில் உள்ள எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை -இந்த கடபயாதி வழிமுறை உள்ளிட்ட விஷயங்களை – பல சம்ஸ்கிருத நூல்கள் விளக்குகின்றன!எடுத்துக்காட்டாக ஆதி சங்கரரின் பெயரிலேயே அவர் பிறப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அமைந்துள்ளன. சம்-க-ர என்பதற்கு உரிய எண்களாக 5-1-2 ஆகியவை அமைகின்றன. கடபயாதி முறைப்படி இந்த எண்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டு விவரங்களை அறிய வேண்டும். அதன் படி இந்த எண்கள் 2-1-5 என்ற வரிசையில் மாற்றி அமைத்துப் பார்த்தால் 2 என்பது அவர் பிறந்த மாதமான வைகாசி மாதத்தையும் ஒன்று முதல் பக்ஷமான வளர்பிறையையும் ஐந்து என்பது அவர் பிறந்த திதியான பஞ்சமியையும் குறிக்கும். வைகாசி மாதம் சுக்லபட்சம் பஞ்சமியில் சங்கரர் அவதரித்தார் என இதன் மூலம் அறிய முடிகிறது.

மஹாபாரதத்தின் உண்மைப் பெயரான ஜய என்பதை 8-1 என்ற எண்கள் குறிக்கின்றன. இதை கடபயாதி முறைப்படி திருப்பிப் போட்டால் வருவது 18. ஆகவே பதினெட்டுப் பர்வங்களைக் கொண்ட இந்த நூலில் பதினெட்டு என்ற எண் முக்கியத்துவத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இவை எளிய உதாரணங்கள். ஆனால் சிக்கலான பல மர்மங்களை இந்த முறைப்படி சம்ஸ்கிருத நூல்களில் மறைத்து வைத்துள்ளனர். இதை ஆராய்வோர் பிரமித்து மலைக்கின்றனர்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மர்மங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு, “எல்லாமே எண்கள் தான்” என்ற பிரபலமான தத்துவத்தைச் சொன்னார் பேரறிஞர் பிதகோரஸ். ஆனால் இதையே தொலைக்காட்சி, ரயில், கார் போன்ற நவீன வசதிகள் இல்லாத தமிழக குக்கிராமத்தைச் சேர்ந்த சாதாரண பாமரன் ஒருவன் “எல்லாம் ஒரு கணக்குத் தான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் போது பிரபஞ்சம் பற்றிய பேரறிவை அவனது அனுபவபூர்வமான வார்த்தைகளில் கண்டு பிரமிக்க வேண்டி இருக்கிறது! ஆராய்ந்து பார்த்தால் எல்லாமே எண்கள் தான்!!

Pic Source : https://www.thegreatcourses.com/media/catalog/product/cache/1/image/800×600/0f396e8a55728e79b48334e699243c07/1/4/1406—base_image_4.1424268494.jpg

அன்புடையீர்

கடந்த ஒரு ஆண்டு காலமாக வாரம் இரு தமிழ் கட்டுரைகளும் இரு ஆங்கிலக் கட்டுரைகளுமாக 208 கட்டுரைகளை நீங்கள் படித்து ஆதரித்ததற்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் இதழின் ஆசிரியர் திரு ஆர்.சி.ராஜா   அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தப் பணியைச் செய்து வந்தேன்.

அன்பர் திரு. துஷான் குணபாலசிங்கம் இவற்றை அன்புடன் கடந்த ஒரு ஆண்டு காலம் வெளியிட்டு வந்தார்.

திரு ராஜா மற்றும் திரு குணபாலசிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்தத் தொடர்பு நீடிக்கும் வகையில் அவ்வப்பொழுது நாம் சந்திப்போம்.

அன்பன் ச.நாகராஜன்

********************************** ***

 

சந்தோஷம் அடைய எளியவழிகள்! – 2

.நாகராஜன்

இரு கரங்களையும் உயர்த்துங்கள்! இன்றையசந்தோஷத்திற்கு வரவேற்பை அளியுங்கள்” –யாரோ

 1. சந்தோஷத்திற்கும் இசைக்கும் நேரடித்தொடர்பு உண்டு. சோகமான கீதங்களைக்கேட்டாலும் கூட அது மெல்லிய உணர்வுகளைவருடி விட்டு ஆனந்தத்தையே தரும். இன்றையஅறிவியல் உலகில் மின்னணு சாதனங்களுக்காபஞ்சம். பிடித்த பாடல்களைச் சேகரித்துமுடிந்த நேரத்தில் கேட்க ஆரம்பியுங்கள். சிலநிமிடங்கள் இதில் செலவழிக்கப்பட்டால் அதுஉங்களை பல மணி நேரம் ‘மூட்’ மாறாமல்நல்ல மனநிலையை அமைப்பது உறுதி.
 2. திட்டமிடாத வாழ்க்கை பாழ்படும்வாழ்க்கை. எதிரதாக் காக்கும் அறிவினார்க்குஇல்லை அதிர வருவதோர் நோய்.(குறள்-429)திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்க்கையில் ‘ஷாக்’இல்லை. சோகம் இல்லை. திட்டமிடும் போதுவெற்றியை எதிர்பார்க்கும் மன நிலையேஆனந்தத்தின் வாசல்; என்று உளவியல்ஆராய்ச்சிகள் அனைத்தும் குறிப்பிடுகின்றன.ஆகவே நல்ல திட்டங்களையும் அதற்கானவழிமுறைகளையும் வகுத்து நல்லவிளைவுகளுக்காக ஆவலுடன் காத்திருங்கள்.தொடர்ந்த இந்த முயற்சி சந்தோஷத்தைஅடைவதற்கான உறுதியான வழி!

       7 . நண்பர்களுடன் மனம் விட்டுஅளவளாவுவது எதிர்மறை உணர்வுகளைஉடனடியாக நீக்கி விடும். அவர்களை உடன்வைத்தே நல்ல திட்டங்களைத் தீட்டலாம். 80லட்சம் பேர்களை வைத்து நடந்த ஒரு சிறியஆராய்ச்சி பெரிய ஒரு உண்மையைவெளிப்படுத்தி உள்ளது. ஒருவர்இன்னொருவருடன்  டெலிபோனில் பேசும்போது அவருடன் மீண்டும் தொடர்பு கொண்டுபேசினால் அவர்களிடையே ஆழமான நட்புமலர்கிறது என்கிறது ஆய்வு முடிவு. நட்புக்குவிலை மதிப்பே இல்லை என்பதுஉண்மையானாலும் நட்பு மூலம் கிடைக்கும்இந்த மகிழ்ச்சியை பணம் மூலம்அடைவதெனில் நீங்கள் சுமார் 68 லட்சம்ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு செலவழிக்கவேண்டியிருக்கும் என்கிறது ஆய்வு.

 1. உங்களுக்கு நடந்த மூன்று நல்லவிஷயங்களைப் பட்டியலிடுங்கள்

இரவு படுக்கப்போகும் முன்னர், சிலநிமிடங்கள் அன்று நடந்த நிகழ்ச்சிகளைகோர்வையாக நினைத்துப் பாருங்கள். மிகபிரமாதமான நிகழ்வுகள் அன்றாடம் நிகழும்என்பதில்லை. ஆனால் நடந்தவற்றில் மூன்றேமூன்று நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்துஅவற்றால் நீங்கள் ஏன் மகிழ்ச்சி அடைந்தீர்கள்என்பதையும் சற்று சிந்தியுங்கள். இப்படிப்பட்டநிகழ்வுகள் அதிகமாக வழி உண்டாஎன்பதையும் சற்று யோசியுங்கள். இந்தமுறையைப் பின்பற்றுமாறு சொல்லப்பட்ட ஒருஆய்வில், இதில் கலந்து கொண்ட அனைவரும்தங்கள் மகிழ்ச்சி ஆறே மாதங்கள் மிக அதிகஅளவில் பெருகியது என்று கூறினர். அத்தோடுமுன்பிருந்த மனச்சோர்வு, ஏமாற்றம் முதலியஎதிர்மறை உணர்வுகளும் அடியோடு நீங்கினஎன்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரைமேலே படித்தவற்றில் ஏதேனும் சிலவற்றைநீங்கள் ஏற்கனவே செய்திருந்தால் இப்போதேஉங்களுக்கு மூன்று நல்ல விஷயங்கள் உள்ளன!

 1. உங்களுக்கேஉரித்தான இயல்பான நல்லகுணங்களின் வலிமையை வளர்ப்பதால்உங்கள் மகிழ்ச்சி தானே பெருகும். எதில்நீங்கள் மிக நன்றாக இருக்கிறீர்கள்? எந்த ஒருவிஷயத்திலும் மேன்மை என்பதை நீங்கள்காட்டும்போது நீங்களும் மலர்ச்சிஅடைகிறீர்கள், மற்றவர்களும் உங்களைப்பாராட்டுகிறார்கள். எதையெல்லாம் நீங்கள்நன்றாகத் திறம்படச் செய்யமுடியும் எனஎண்ணிப் பாருங்கள். சிலருக்குமற்றவர்களுடன் பழகுவது சுலபமாக வரும்.பாடுவது, பேசுவது, விளையாட்டில் திறமை எனஇப்படி பல விஷயங்கள் உண்டு. நீங்கள் எதில்இயல்பாகவே திறமைசாலி? எதில் இயல்பாகவேமேன்மையுற்றவர். அதில் கவனக் குவிப்புசெய்து அதில் வலிமை பெறுங்கள் அந்ததிறமையை வளர்ப்பதற்கான பயிற்சியில் சற்றுநேரம் செலவழியுங்கள். அந்த பயிற்சிநேரங்களில் உங்கள் மகிழ்ச்சி பன்மடங்காகப்பெருக ஆரம்பிக்கும்.
 2.  நீங்கள்செயலூக்கம்குறைந்தவராக இருந்துஎப்போதுமே கனவு காணுவதில் இன்பம்கொள்பவராக இருந்தால் உங்களுக்கு ஒருசிறிய உதவிக் குறிப்பு இதோ! சந்தோஷமானபகல் கனவு ஒன்றைக் காணுங்கள் அன்றாடம்பகல் நேரத்தில் நம் மனது அங்கும் இங்கும்ஆயிரம் எண்ணங்களோடு அலை பாய்கிறது.அந்த அலைபாயும் மனதை உடன் மறைஎண்ணங்களில் அதாவது பாஸிடிவாக ஒரு முகப்படுத்துவது மிகுந்த ஆதாயத்தைத் தரும்!வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்க வல்லஉத்திகள் பற்றிய ஆய்வு ஒன்றுமேற்கொள்ளப்பட்டது. அதில் பாஸிடிவ்மனநிலை மிகுந்த திறன் வாய்ந்த ஒன்றாகஇருப்பது உறுதி செய்யப்பட்டது இதில் கலந்துகொண்டோர் தங்கள் வாழ்வில் நடந்தஇன்பமான நிகழ்வுகளையும் வெற்றிகரமானதருணங்களையும் உன்னதமான நட்பு,ஆழமான காதல் ஆகியவை பற்றியும் எண்ணிமகிழ்ந்தனராம். கடந்த கால குழப்பங்களையும்தோல்விகளையும் ஏமாற்றங்களையும்அலைபாயும் மனம் நினைத்தாலும் கூட நல்லபகல் கனவில் அது மகிழும் என்பது தான்உண்மை!

ஆக சந்தோஷமாக வாழ முடியவில்லையேஎன்று எண்ணி ஏங்கி எப்போதும் துக்ககரமாகஇருப்பதையே வாழ்க்கை முறையாகக்கொள்வோர் ஒரு சில நொடிகளில் அதிலிருந்துமீண்டு புதிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைநோக்கி அமைத்துக் கொள்ளலாம்.

Pic Source : http://allaboutkim.com/wp-content/uploads/2017/06/How-To-Be-Happy.jpg

****

சந்தோஷம் அடைய எளியவழிகள்! – 1

.நாகராஜன்

நீங்கள் விரும்பும் எதையும் உங்கள்வாழ்க்கையில் நீங்கள் அடையலாம் –நீங்கள் மட்டும் அடுத்தவர்களுக்குஅவர்கள் விரும்புவதை அடைய உதவிசெய்தால்!” –ஜிக் ஜிக்லர்

வாழ்க்கையில் ஏமாற்றமும் விரக்தியும்அடைந்து சதா வருத்தப்பட்டுக் கொண்டேஇருப்பவர்களுக்கு அறிவியல் ஏதேனும் கைகொடுக்குமா? கொடுக்கிறது. ஒவ்வொருவரும்சந்தோஷம் அடைய எளிமையான சிலவழிகளை அறிவியல் சுட்டிக் காட்டுகிறது.

செய்து பார்த்தால் மனதில் மகிழ்ச்சிபொங்கும். வழிகளைப் பார்ப்போம்.

 1. வாழ்க்கையில் ஒவ்வொருவருமேநடக்காத பல நல்ல விஷயங்களைப் பற்றிச்சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.இப்படிநடந்திருக்கலாம் என நினைத்து நினைத்துவருத்தப்பட்டுப் பயனில்லை. இப்படிச்சிந்திப்பதை விட்டு விட்டு மாற்றி சிந்தித்துப்பார்த்தால் என்ன? வாழ்க்கையில் நாம்எதிர்பார்க்காத எளிதாக நடக்கவே நடக்கமுடியாத பல நல்ல விஷயங்கள் திடீரென்றுநமக்கு நடந்துள்ளனவே, அவற்றைநினைத்துப் பார்க்கலாமே! உங்கள்வாழ்க்கைத் துணை உங்களுக்கு திடீரெனஅமைந்த அந்தச் சம்பவம்… உங்களுக்குவேலையோ அல்லது பிரமோஷனோ கிடைத்தஎதிர்பார்க்காத அந்த அரிய தருணம்..  இப்படிஎத்தனை சம்பவங்கள்.இவற்றை நினைத்தாலே மனதில் மலர்ச்சி ஏற்படும், மகிழ்ச்சி பொங்கும் இல்லையா!!மனதிற்குள் நமக்கு நடந்த நல்லனவற்றை நினைத்துப் பார்த்தால் என்றுமே சந்தோஷம் தான்!
  1. நன்றி மறப்பது நன்று அன்று! சக்தி வாய்ந்த ஒரு உணர்வு நன்றி உணர்ச்சி. உங்களிடம் அந்த உணர்வுஇருப்பது நிஜமென்றால் அடிக்கடி அதைத் தட்டி எழுப்புங்கள். பேனாவை எடுத்து ஒரு சிறிய கடிதம் மூலமாகவாழ்த்து அனுப்ப வேண்டியவருக்கு வாழ்த்தை உளமுவந்து தெரிவியுங்கள். அவசர யுகத்தில் மின்னஞ்சல்இருக்கவே இருக்கிறது. அதைப் பெறுபவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்! உங்களுக்கு தினைத்துணைஅளவு உதவி செய்திருந்தாலும் அதைப் பனைத் துணை அளவாக பாவித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டேஇருங்கள் உங்களுக்கு சந்தோஷம் தானே பெருகும்! “எனக்கு பல்வேறு வகையில் உதவி செய்தவர்களில்பலருக்கு வாரம் ஒருவருக்கு நன்றி தெரிவிக்க ஆரம்பித்தேன், இரண்டே மாதங்களில் மனதில் மகிழ்ச்சி பொங்கஆரம்பித்தது”, என அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள் இதே போல நீங்களும் அடுத்தவரிடம் கூறும்படி நன்றிஉணர்வை வெளிப்படையாகத் தெரியப்படுத்துங்கள்.
  2. பணம் வருகிறது. போகிறது. எவ்வளவோ செலவுகள்! எவ்வளவு வந்தாலும் போதாத வாழ்க்கை தான்நம்முடையது. இதை ஒரு புறம் ஒதுக்கித் தள்ளி விட்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையைபாத்திரமான ஒருவருக்கு நல்ல ஒரு காரணத்திற்காக விளம்பரமின்றி யாரும் அறியாமல் கொடுங்கள்.நாளடைவில் உங்களது வாழ்க்கைப் போக்கே அதிக சந்தோஷம் உடையதாக மாறி விடும். பசித்த ஏழைக்கு ஒருவேளை உணவுப் பொட்டலம், நன்கு படிக்கும் ஏழை மாணவருக்கு பள்ளிக் கட்டணம், ஏழைப் பெண்ணுக்கு ஒருகுந்து மணி தாலித் தங்கம் –இப்படி யோசித்தால் தகுதி உள்ளவர்கள் பட்டியல் தானே வரும்! மற்றவர்களுக்குஇப்படிக் கொடுப்பது நம்மைப் பற்றி நாமே நலமாக உணர்வதற்கான உன்னதமான வழி! உள்ளுக்குள் இருக்கும்மனச்சாட்சி உங்களைப் பாராட்டும். அது போதும், சந்தோஷம் அடைய!
  3. டென்ஷன். டென்ஷன். எப்போதும்டென்ஷன். அதுவே ஆற்றலை வற்ற அடிக்கிறது – எல்லோருக்கும்பொதுவானதாக உள்ள இன்றைய பிரச்சினை இது! ஆகவே சக்தியை அதிகப்படுத்தல் இன்றியமையாதது.இதற்கு ஒரே வழி  செலவில்லாத வழி உடற்பயிற்சி தான். சில எளிய பயிற்சிகளை காலையும் மாலையும்செய்யலாம். அல்லது தினமும் நடைப்பழக்கத்தை மேற்கொள்ளலாம் மனதில் உள்ள டென்ஷனும் அனாவசியகவலைகளும் வெளியே ஓடி விடுவதை அனுபவம் உணர்த்தும். நாற்காலியில் உட்கார்ந்தவாறே செய்யக் கூடியஎளிய பயிற்சிகளையும் எளிய யோகா பயிற்சிகளையும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தினமும்ஏழே ஏழு நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதும் என்கின்றன ஆய்வு முடிவுகள். ஷான் ஆகர் (Shawn Achor)எழுதியுள்ள ‘தி ஹாப்பினெஸ் அட்வான்டேஜ்’ என்ற புத்தகத்தில் மூன்று குழுக்கள் மீது நடந்த ஒரு அதிசயசோதனை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த மூன்று குழுக்களுள் மனச்சோர்வை நீக்குவதற்காக முதல்குழுவினருக்கு மருந்தும் இரண்டாம் குழுவிற்கு உடல்பயிற்சியும் மூன்றாம் குழுவினருக்கு இந்த இரண்டையும்மேற்கொள்ளுமாறும் கூறப்பட்டது. மூன்று குழுவினரும் மனச்சோர்வு நீங்கி மகிழ்ச்சி அடைவதாகச்சொன்னாலும்  உடல்பயிற்சி கொண்டவர்களின் சந்தோஷம் அதிகமாகவும் நீடித்து நிலைத்திருப்பதும் தெரியவந்தது! உடல்பயிற்சி மூளை ஆற்றலையும் வெகுவாகக் கூட்டுகிறது!

   

  ******************

  Pic Source : http://b.vimeocdn.com/ts/208/974/208974515_640.jpg

வெற்றிக்கான கருத்துக்களைஉருவாக்குவது எப்படி? – 3

.நாகராஜன்

     நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறஉத்தரவாதமான வழி ஒன்று உண்டு! ஒவ்வொருநாள் இரவும் தூங்கப் போவதற்கு முன்னர்நாளை என்ன செய்ய வேண்டும் என்று ஆறுமுக்கியமான விஷயங்களை எழுதிக் கொண்டுஅவற்றில் முதலில் எதைச் செய்ய வேண்டும்,அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுவரிசைப் படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த நாள்அந்த திட்டப்படி செய்யுங்கள். காலம் உங்களைவெற்றியாளராக மாற்றி விடும்!”   –     யாரோ

ஸ்காம்பரில் அடுத்தது ‘புட் இட் டு சம் அதர் யூஸ்’ (PUT IT TO SOME OTHER USE) : இதை இன்னொருபயன்பாட்டிற்கு பயன்படுத்தலாமா என்று யோசிப்பதுஅடுத்த உத்தி. ஒரு விஷயத்தை எந்த நோக்கில் நீங்கள்காண்கிறீர்கள்? அதை இன்னொரு நோக்கில் காணமுடியுமா?

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு தாவர இயல்நிபுணர்; அவர் இரசாயனத்திலும் நிபுணர். சாதாரணகடலையைப் பயன்படுத்த 300 விதங்களை அவர்கண்டுபிடித்தார். வேறு எதற்கெல்லாம் இதைப்பயன்படுத்த முடியும்?  புதிய பயன்பாட்டு வழிகள்உண்டா? இதிலிருந்து வேறு புதிய பொருள்களைஉருவாக்க முடியுமா என்றெல்லாம் சிந்திப்பது பல்வேறுபுதிய பார்வைகளையும் கருத்துக்களையும் உருவாக்கஉதவும். மென்பான நிறுவனம் ஒன்று அதை சுவையானஉணவின் ஒரு அம்சமாக சேர்த்து விற்பனையில் பெரியசாதனை படைத்தது.

அடுத்தது எலிமினேட் (ELIMNATE) : சில சமயம்ஏதாவது ஒன்றை உங்கள் பொருளிலிருந்து நீக்கி விடுவதுபுதிய கருத்துக்கு வழி வகுக்கும். இதை சிறிதாக்கலாமா?எதை நீக்கலாம்? எதை இதிலிருந்து தனியே பிரிக்கலாம்?சில விதிகளை மாற்றவோ நீக்கவோ செய்யலாமா?’

மென்பான நிறுவனம் ஒன்று தனது வழக்கமானசந்தையை விட்டு விலகி, தனது பானத்தை விசேஷபானமாக மாற்றி ஆரோக்கியத்தில் அதிக அக்கறைஉள்ளவர்களுக்கானது என்று விளம்பரம் செய்துஆரோக்கியம் மேம்படுவதற்கான விசேஷ பொருள்கள்அதில் எவை எவை உள்ளன என்று பட்டியலிட்டு பெரியவிற்பனையைக் கண்டது.

     ரீ அரேஞ்ஜ் (REARRANGE) அல்லது வேறு விதமாகஅமைத்துப் பார்த்தல்:  படைப்பாற்றலின் ஒருமுக்கியமான உத்தி எதை வேண்டுமானாலும் மாற்றுவிதமாக அமைத்துப் பார்த்தல் ஒரு கால்பந்துவிளையாட்டின் பயிற்சியாளர் தனது குழுவினரை 3,62,880விதமாக மாற்றி அமைக்க முடியும்! இப்போதுள்ளசூழ்நிலைக்கு எந்த வரிசை பொருந்தும்? பாகங்களைவேறு வரிசையில் அமைத்துப் பார்த்தால் பொருள்அனைவரையும் கவர்ந்து விற்பனையை அதிகரிக்குமா?இப்படி புது விதமாக யோசித்து தன் உத்தியை மாற்றிஅமைத்துக் கொள்வது நல்ல  பயனை விளைவிக்கும்.

      ரிவர்ஸ் (REVERSE) அல்லது முறையைத் திருப்பிஅமைத்தல். இப்போது செய்யும் முறை ஒன்று தான்இதற்கு உள்ளதா? இதை ரிவர்ஸ் முறையில் முழுவதுமாகதிருப்பி அமைக்க முடியுமா?’இந்த உத்தியைப் பின்பற்றிபல நிறுவனங்கள் புதிய கருத்துக்களை உருவாக்கிபெரும் பயனை அடைந்திருக்கின்றன. சோடா பாட்டிலைகடையில் விற்பனை செய்வது போய் தேவைப்படும்பொழுது தேவையான அளவு மலிவான விலையில்வீட்டிலேயே சோடாவைத் தயாரிக்கும் சோடா மிக்ஸர்இப்படி உருவானது தான்! கொலம்பஸ் புதிய நாட்டைக்கண்டுபிடித்ததன் காரணம் அந்தக் காலத்திய கருத்துக்குஎதிராக நினைத்து அவர் பயணப்பட்டது தான்!

ஆக புதிய கருத்துக்களை உருவாக்க ஸ்காம்பர்முறை வழி காட்டுகிறது. இந்த முறை இப்போது தெரிந்துவிட்டதால் இனி புதுமைக் கருத்துக்களைப் பொங்கிவழியச் செய்யலாம்.

கருத்துக்களைத் தொகுப்பதற்கும் அதை அடிக்கடிமதிப்பீடு செய்து நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கும்இண்டெக்ஸ் கார்ட் எனப்படும் சுட்டு வரிசை அட்டைகள்பெரிதும் பயன்படும். இண்டெக்ஸ் கார்டுகள் பொதுவாகஆறு அங்குலம் நீளம் நான்கு அங்குல அகலம் உள்ளஅட்டைகள்.

விளாடிமிர் நபோகோவ் பிரபலமான எழுத்தாளர், ‘அடா’ போன்ற நல்ல நாவல்களை எழுதியவர். அவர்தனது கருத்துக்களை இண்டெக்ஸ் அட்டைகளில் தான்தொகுத்தார்! தனது கருத்துக்களை காட்சி வாரியாகஎழுதி வைத்துக் கொள்வார். முதலிலிருந்து கடைசி வரைஎழுத வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் தோன்றியகருத்துக்களை அவ்வப்பொழுது எழுதி வைத்துக்கொள்வார். ‘அடா’ என்ற நாவலுக்கு மட்டும் 2000க்கும்மேற்பட்ட இண்டெக்ஸ் அட்டைகளை உருவாக்கினார்.நினைத்தபடி காட்சிகளையும் கதைப் போக்கையும்மாற்றிக் கொள்ளவும் மேம்படுத்தவும் நீக்கவும் அவருக்குஇண்டெக்ஸ் அட்டைகளே உதவின.

பீத்தோவன் சாலைகளில் நடக்கும் போதும் வனபகுதிகளில் உலா செல்லும் போதும் ஒரு பாக்கட்நோட்புக்கை தவறாமல் கொண்டு செல்வார். திடீர்திடீரெனத் தோன்றும் கருத்துக்களைக் குறித்துக்கொள்வார். இப்போது ஒரு புதிய கருத்து உருவானது எனஅடிக்கடி சொல்வார். அவரது படங்களை வரைந்தஓவியர்கள் அவரது நோட்புக்கையும் மறக்கவில்லை.அதைத் தவறாமல் அவர் ஓவியத்தில் சித்தரித்தார்கள்..

Pic Source : https://s3.amazonaws.com/lifesite/beethoven.jpg

^^^^^^^^^^^^^^^^^^^^

 

வெற்றிக்கான கருத்துக்களைஉருவாக்குவது எப்படி? – 2

.நாகராஜன்

சூழ்ச்சித் திறத்துடன் கையாளுதல் என்பது

படைப்பாற்றலின் கூடப் பிறந்த சகோதரன்போல!        .மைக்கேல் மிகால்கோ

புதிய கருத்துக்களை உருவாக்குவது எப்படி? ஒருபொருள் பயன்பாட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதை மேம்படுத்த ஒன்பது கேள்விகளைக்கேட்டால் போதும்.

அலெக்ஸ் ஆஸ்போர்ன் என்ற அமெரிக்கபத்திரிக்கையாளர் ப்ரெய்ன்ஸ்டார்மிங் (Brainstorming) என்றுஆங்கிலத்தில் கூறப்படும் குழு சிந்தனையை முதன்முதலில் உருவாக்கினார். எந்த ஒரு விஷயத்தையும் பற்றிமனதிற்குத் தோன்றிய கருத்துக்களை ஒரு குழுவில் யார்வேண்டுமானாலும் சொல்லலாம். இதில் நல்ல கருத்துகெட்ட கருத்து என்று ஒன்று இல்லை. சொல்லாமல்மனதிற்குள் அமுக்கி வைத்திருக்கும் கருத்தே கெட்டகருத்து. வெளி வந்த கருத்துக்கள் அனைத்துமே நல்லவைதான். அவற்றுள் சிறந்தனவற்றை எடுத்துப் பயன்பாட்டில்கொண்டு வந்தால் ஒரு நிறுவனம் முன்னேறும்; புதியபொருள் ஒன்று உருவாகும்.

ஆஸ்போர்னின் பல்வேறு கேள்விகளை எளிதில்ஞாபகப் படுத்திக்கொள்ளும் விதமாக பின்னால் வந்தராபர்ட் எபர்லி என்பவர் ஒரு சிறிய வார்த்தையைஉருவாக்கினார். படைப்பாற்றல் சம்பந்தமாக பலபுத்தகங்களை எழுதிய அவரது புதிய வார்த்தையேஅனைவரையும் உத்வேகப்படுத்திப் பல புதியகருத்துக்களைப் பெற வழி வகுத்தது. அந்த வார்த்தைதான் ஸ்காம்பர். ஆங்கிலத்தில்  SCAMPER என்றவார்த்தையை விரிவு படுத்தினால் வருவது SUBSTITIUTE, COMBINE, ADAPT, MAGNIFYஅல்லது MODIFY, PUT TO OTHER USES, ELIMINATE, REARRANGE அல்லது REVERSE ஆகிய ஏழுவார்த்தைகள்.(இரண்டு வார்த்தைகள் கூடி இருப்பதால்ஒன்பது என்றும் கொள்ளலாம்). இவற்றை விரிவாகப்பார்க்கலாம்:-
ஸப்ஸ்டிடியூட் (SUBSTITIUE) : ஒரு பொருளுக்குப்பதிலாக மாற்றுப் பொருள் உருவாக்க முடியுமா?  பால்எஹ்லிச் என்ற விஞ்ஞானி ஒரு சோதனையை நடத்தஒவ்வொரு வண்ணமாக 500 வர்ணங்களை மாற்றிமாற்றிப் பார்த்தார். சோதனைச் சாலை எலிகளின்நாளங்களில் சரியான வர்ணப் பூச்சைப் பூசி தன்சோதனையை நடத்த பல்வேறு வர்ணச் சேர்க்கைகளைஉருவாக்கி இறுதியாக நல்ல ஒரு வர்ணத்தைஉருவாக்கினார். எலிகளின் நாளம் நன்கு தெரிய வந்தது,சோதனை வெற்றி பெற்றது!

இந்த கொள்கையின் படி ஒரு இடம், ஒரு உலோகம்,ஒரு அணுகுமுறை ஒரு நபர், ஒரு நடைமுறை, ஒருஉணர்ச்சி, ஒரு கருத்து இவற்றில் எதைவேண்டுமென்றாலும் மாற்றிப் பார்க்கலாம். அப்படிமாற்றிப் பார்த்தால் புதியன உருவாகுமா? இப்படியோசிப்பது ஒரு முறை.

அடுத்தது கம்பைன் (COMBINE) : ஒன்றோடு ஒன்றைசேர்த்தால் பயன் வருமா? க்ரிகார் மெண்டெல் என்றவிஞ்ஞானி ஜெனிடிக்ஸ் எனப்படும் மரபணுவை இந்தமுறையில் தான் கண்டுபிடித்தார். எதைச் சேர்க்கலாம்?எதற்காகச் சேர்க்கலாம்? எப்படிச் சேர்க்கலாம்?எவற்றுடன் சேர்க்கலாம்? சேர்ப்பனவற்றின் பயன்கள்எப்படி இருக்கும்? சேர்த்தால் கவர்ச்சி கூடுமா? பயன்கூடுமா? இப்படி யோசித்து பல கருத்துக்களைஉருவாக்குவது இன்னொரு  முறை.

அடுத்தது அடாப்ட் (ADAPT): பொருந்தச் செய்தல்உத்தி என்பது இன்னொரு வழிமுறை. தாமஸ் ஆல்வாஎடிஸன்.  “மற்றவர்கள் எந்த விதமாக ஒன்றைவெற்றிகரமாகச் செய்கிறார்கள் என்பதை உற்றுக்கவனித்துக் கொண்டே இரு; அவற்றை உனக்கேற்பபொருத்திக் கொள்” என்று கூறுவார். உங்களதுபிரச்சினைகளுக்கு மற்றவர்களின் வழிகள் உதவுமாஎன்று பார்ப்பது சுலபமானது. வேறு யாருக்கு இதுபோன்ற நிலை அல்லது பிரச்சினை உள்ளது? அவர்கள்எப்படி இதை வெற்றிகரமாக்க் கையாண்டனர்.அவர்களிடமிருந்து அதை நகலெடுப்பது போல காபிசெய்யலாமா? இதர இடங்களில் பயன்படுத்தப்படும்எந்தக் கருத்து அல்லது வழிமுறை இப்போதுபயன்படுத்தப்படலாம் என்று கேள்விகள் கேட்டுகருத்துக்களை உருவாக்கிக் கொள்வது பொருந்திப்பார்க்கும் உத்தியாகும்.
அடுத்தது மாக்னிஃபை அல்லது மாடிஃபை: (MAGNIFY OR MODIFY) சிறுமாற்றம் செய்தல்அல்லது மிகைப்படுத்தல்.என்னும் வழியாகும்.

ஒரு பொருளில் எதை மாற்றலாம்? அல்லதுமிகைப்படுத்தலாம்? எடுத்த பல்லாயிரக்கணக்கானஅடிகள் கொண்ட பிலிமை எடிடிங் டேபிளில் போட்டுப்பார்த்து ஒரு இரண்டு மணி நேரத் திரைப்படத்தைஉருவாக்குவது போலத் தான் இந்த உத்தி.

எதை அதிகமாக அழுந்தச் சொல்லலாம்? எதைநீக்கலாம் அல்லது சேர்க்கலாம்? இன்னும் அதிக மதிப்புகூட என்ன வழி. ஒரு பெரிய டிராமா வடிவில்கவர்ச்சிகரமாக அனைவரையும் ஈர்க்கும் விதமாகஎதையாவது செய்ய முடியுமா?

ஃபெடரல் எக்ஸ்ப்ரஸ் என்ற கூரியர் சேவையைஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஆரம்பித்தஃப்ரெட் ஸ்மித் ஆழ்ந்து யோசித்து இந்த மாக்னிஃபைஅல்லது மாடிஃபை உத்தியைப் பயன்படுத்தினார், முன்றேமூன்று விமான வழிகளிம் மட்டுமெ விமான சரக்குசேவையை ஆரம்பித்த அவர் இந்த உத்தியைக்கடைப்பிடித்தன் மூலம் லட்சக்கணக்கான அளவில்பார்சல்களை உலகெங்கும் கொண்டு செல்ல்லானார்.பொருள்களின் அளவுகளை (நீள அகல உயரங்களை)மாற்றுதல், நடைமுறையை மாற்றுதல், சேவையின்நோக்கத்தை மாற்றுதல் அல்லது விரிவுபடுத்தல் என்றமூன்றையும் ஆழ்ந்து சிந்தித்து புதிய வழிகளைஅறிமுகப்படுத்தினார். அதன் விளைவே இன்று நாம்காணும் பெட் எக்ஸ் சேவை.

மாடிஃபை என்றால் எதில் வேண்டுமானாலும் ஒருசின்ன ட்விஸ்டைக் கொடுப்பது தான்! கதையில் ஒருசின்ன ட்விஸ்ட் அதாவது திருப்பம்! வண்ணத்தில்,நடையில், ஒலியில், வடிவத்தில், உருவத்தில், வாசனையில்.. ஒரு ட்விஸ்ட் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

Pic Source : https://d3tvpxjako9ywy.cloudfront.net/blog/content/uploads/2017/04/Screen-Shot-2017-04-19-at-9.49.41-AM-624×364.png?av=51536eb7381a951947d09ab79864055e

உபநிடத சத்தியம் : மனமே பற! உயரப் பற!

                                              ச.நாகராஜன்

 1

மனமே, பற! உயரப் பற!!

பற, பற என்றால் எப்படிப் பறப்பதாம். முடியாது.முயன்று பார். அண்டார்டிகா போக முடியுமா?ஓ! அது முடியும். இதோ அண்டார்டிகா போய் விட்டேன். ஆஹா! க்ளேசியர் என்று சொல்கிறார்களே, பனிப்பாறைகள், ஓ, அற்புதம்!அட, அண்டார்டிகா சென்று அதன் வர்ணனை வேறா! திரும்பி வீட்டிற்கு வர முடியுமா?

வர முடியுமாவாவது. வந்தே விட்டேன். ஒரு நொடியில். பழைய டேபிள். அதே லாப் டாப்.! அதே அறை!!அட! இது போலப் பறக்க முடியாதா?ஓ! இது போலப் பறக்க முடியுமே. இதோ சந்திரன்! ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால்டித் தடங்களைப் பார்க்கிறேன். அட, அப்படியே செவ்வாய் கிரகம் செல்கிறேன். அங்கு தண்ணிரைப் பார்க்கிறேன்.

சபாஷ். என்ன சபாஷ், இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம். அலுப்புத் தான் மிஞ்சுகிறது. ஒரு பிரயோஜனமும் இல்லை.

வந்தாயா, வழிக்கு. அதனால் தான், மனமே பற, உயரப் பற என்றேன். பறப்பது என்றால் மேலே சும்மாவாவது பறப்பது என்று அர்த்தமில்லை. மனமே உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு பற என்று சொன்னேன். அதனால் நீ மட்டுமல்ல; சமுதாயமே  மேலே எழும்பும்.

“அப்படி பறக்க எனக்குத் தெரியாது! உயரிய சிந்தனையோடு பற என்றால் என்ன அர்த்தம்?” அப்படிக் கேள், சொல்கிறேன். ஒரு வாஹனம் தருகிறேன். அதில் ஏறிப் பறந்தால் உயர்ந்த சிந்தனையோடு பறக்கலாம்.

அட, ஜோராக இருக்கிறதே. என்ன வாஹனம், எப்படிப் பறப்பது.உபநிடதம் என்னும் வாஹனம். அதில் ஏறினால் சிகரமான சிந்தனைகள் வரும். மனமே, உனக்கு மட்டுமல்ல,பிரயோஜனம், நீ அதைப் படித்தால் அனைவருக்குமே நல்லது நடக்கும் அளவிற்குச் சிந்தனை உயரும்.உபநிடதமா, பார்க்கலாமா?

உபநிடதங்கள் ஏராளம் உள்ளன. முக்கியமான 108 உபநிடதங்கள் இதோ உள்ளன. ஏதாவது ஒன்றை எடுத்துப் பாரேன்.சரி,கைக்கு வந்த இந்த் உபநிடதத்தைப் பார்க்கிறேன். இதன் பெயர் அம்ருத பிந்து உபநிடதம்.

“அழகான உபநிடதம்!”

அதில் முதல் வரிகளைப் பார், அதனால் உயரப் பறக்க முடியுமா என்று பார்!

ஓம். மனோ ஹி த்விதம் ப்ரோக்த்ம் சுத்தம் சாசுத்த மேவ ச I

அசுத்தம் காம ஸங்கல்பம் சுத்தம் காமவிவர்ஜிதம் II

 மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:…I

“ஓ! அர்த்தம் என்ன?“மனது சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரு வகையாகக் கூறப்பட்டுள்ளது. ஆசையில் நாட்டமுடையது அசுத்தம். ஆசை இல்லாதது சுத்தம். மனதே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்.” இது தான் அர்த்தம்.

மனமே!இதை மட்டும் சிந்தித்துப் பாரேன். உயரப் பறக்க முடிகிறதா!அட, மனமாகிய என்னைப் பற்றி அல்லவா இந்த உபநிடதம் கூறுகிறது. மன ஏவ மனுஷ்யாணாம். உண்மை தான். உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன!

2. மனதிற்கும் அதன் ரகசியம் உணர்ந்த ரிஷிக்கும் நடந்த (கற்பனை) சம்பாஷணையைத் தான் மேலே படித்தீர்கள்.மனதைப் பற்றிய ரகசியங்களை நன்கு விளக்கும் உபநிடதம் அமிருதபிந்து உபநிஷத். மனதை விஷயப்பற்றில்லாததாகச் செய்.

 உலகப் பொருள்களைப் போல் பரம்பொருள் சிந்தனைகுரியதன்று.ஆனால் சிந்திக்கத் தகாதது அன்று. சிந்தனைக்கெட்டாததாயினும் சிந்தித்தற்குரியது அது ஒன்றே. அப்படி காணும் போது பக்ஷபாதம் முற்றும் நீங்கிய பிரம்மம் அடையப்பட்டதாகிறது.

 3

மனதைப் பற்றிய இரகசியங்கள் அனைத்தையும் விளக்கும் அற்புத உபநிடதம் அமிருத பிந்து உபநிடதம்.22 ஸ்லோகங்கள் உள்ளன. 

ஸர்வபூதாதிவாஸஞ் ச யதுபூதேஷு வஸத்யதி I

ஸர்வானுக்ராஹகத்வேன ததஸ்ம்யஹம் வாஸுதேவ: II

ததஸ்ம்யஹம் வாஸுதேவ இதி II

 எல்லா உயிர்களும் எவனிடம் வாழ்கின்றனவோ, எவன் எல்லா உயிரிகளிடத்தும் அருள்புரிந்து கொண்டு வாழ்கின்றானோ அந்த வாஸுதேவன் நானாயிருக்கிறேன்.. அந்த வாஸுதேவன் நானாயிருக்கிறேன் என்றவாறு.

 என்று இப்படி முடிகிறது இந்த உபநிடதம். மூவுலகிலும் நிறைந்து வசிப்பதால் பகவானுக்கு வாஸுதேவன் என்ற பெயர் ஏற்பட்டது. 

அவனை மனதில் ஏற்றினால் மனம் பறக்கும்; உயரப் பறக்கும்.அதனால் நன்மை பறக்கும் மனதிற்கு மட்டுமல்ல; உலகிற்கே நன்மை!

 4

ராமகிருஷ்ண தீபம் என்னும் உரையுடன் ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை-4,  108 உபநிடதங்களை உரையாசிரியர் அண்ணா அவர்களின் உரையுடன் வெளியிட்டிருக்கிறது. உபநிடதப் பொக்கிஷம் இது. தமிழில்  மட்டுமல்ல, உபநிடத விளக்கவுரைகள் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

பல ரகசியங்களை அறிந்து கொள்ளவும் நமது மனம் உயரப் பறக்கவும் ஒரே வழி -உபநிடதங்களைப் படிப்பது தான்!

Pic Source : https://i.ytimg.com/vi/1WFapJXkNZY/maxresdefault.jpg

வெற்றிக்கான கருத்துக்களை  உருவாக்குவது எப்படி? – 1               ச.நாகராஜன்

“சாரமாகச் சொல்லப் போனால், மனித சரித்திரமே கருத்துக்களின் வரலாறு தான்!        ஹெச்.ஜி.வெல்ஸ்

வாழ்க்கையில் வெற்றி பெறுவோரை நன்கு கவனித்துப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக இலங்குவது அவர்களின் சில கருத்துக்களே என்பதை அறிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட நல்லகருத்துக்களை எப்படிப் பெறுவது? அனைவராலும் பெற முடியுமா? முடியும் என்கிறது அறிவியல்.

லினஸ் பாலிங் (Linus Pauling –தோற்றம் 28-2-1901 மறைவு 19-8-1994) என்பவர் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற பெரும் விஞ்ஞானி. இவருக்கு மூன்றாவது நோபல் பரிசும் கிடைக்க இருந்தது. நல்லகருத்துக்களைச் சொல்வதில் சிறந்த மேதை. உலக அமைதிக்காகப் பெரிதும் பாடுபட்டார். எப்படி இவருக்கு நல்ல அரிய கருத்துக்கள் உருவாகி வந்தன? அவரே இதைச் சுலபமாகச் சொல்லி விட்டார்.

“ஒரு நல்ல கருத்தை அடைவதற்கான சிறந்த வழி, ஏராளமானகருத்துக்களை உருவாக்கிக் கொள்வது தான்! பிறகு மோசமானவற்றைத் தூக்கி எறிந்து விட வேண்டும்”  – இது தான் அவரது எளிய வழி!

சுலபமான வழியாகத் தெரிந்த போதிலும் நிறைய கருத்துக்களை எப்படிஉருவாக்குவது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

விஞ்ஞானிகள் எப்படி கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை ஜெர்மானிய விஞ்ஞானியான ஜூஸ்ட் ரீக் (Joost Reek) அழகாகச் சொல்கிறார். அவருக்கு இரண்டு ‘யங் கெமிஸ்ட் விருதுகள்’ கிடைத்த போது அவரைப் பேட்டி கண்ட ஒருவர் அவரது வெற்றிக்கானஇரகசியம் என்ன என்று கேட்டார்.

அதற்கு ரூஸ்ட்,” நான் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை எழுதி வைத்துக் கொள்வேன். ஒவ்வொரு முறை ஒரு புதிய ப்ராஜக்ட் அல்லது ஆய்வைத் தொடங்கும் முன்னர் என் முன்னே ஏராளமான கருத்துக்கள் இருக்கும். அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது சுலபம். அவற்றிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் ஆழ்ந்து ஈடுபடுவேன்” என்று பதில் கூறினார்.

இளம் வயதிலேயே பெரும் பேராசிரியராக ஆன அவர் தன் 42ஆம் வயதில் உலக விஞ்ஞானிகள் வரிசையில் ரசாயனத்தில் 643வது இடத்தில் இருந்தார். இதற்கான காரணம் ஒரு நாளைக்கு ஒரு புதிய கருத்து என்ற அவரது புதிய பாணி தான்!

இதை செயல்படுத்திப் பார்க்கலாம் என்று முனைந்த இளைஞர் ஒருவர் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஒரு நாளைக்கு ஒரு கருத்து என்று ஆரம்பித்தால் சில மாதங்களில் நிறைய கருத்துக்கள் சேரும். ஆனால் அவரோ தினசரி ஐந்து நிமிடங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து தனக்குத் தோன்றிய கருத்துக்களை எல்லாம் ஒரு நோட்புக்கில் குறித்து வரலானார், அத்தோடு அவ்வப்பொழுது தனக்குத் தோன்றும் கருத்துக்களையும் குறித்துக் கொண்டார். நிறைய கருத்துக்கள் தோன்ற வேண்டுமெனில் தனக்குப் பிடித்த விஷயம் சம்பந்தமாக பிரபல விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன், பெர்மி ஆகியோர் படித்ததைப் போல தனக்கே உரித்தான பொருள் பற்றிப் பல புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தார். ஆகவே புதிய கருத்துக்கள் உதயமாக ஆரம்பித்தன. இவற்றை 30 நாட்கள் கழித்து ஆராய்ந்து பார்த்ததில் அன்றாடம் ஐந்து நிமிடத்தில் உதயமான கருத்துக்கள் மொத்தம் 208. அவ்வப்பொழுது குறித்து வைத்த கருத்துக்கள் மொத்தம் 35. ஆக தினமும் ஐந்து நிமிடம் ஊன்றி யோசித்தால் புதிய கருத்துக்கள் அவ்வப்பொழுது தோன்றுவதை விட ஐந்து மடங்கு அதிகமாகத் தோன்றுகிறது. சரி, அவற்றின் தரம் எப்படி? இதற்கு விடை காண அவரே ஒன்று முதல் 10 வரை மதிப்பெண் கொடுத்தார். ஒன்று என்றால் உருப்படாத ஐடியா இரண்டு என்றால் நடைமுறைக்கு ஒவ்வாதது இப்படியே 10 என்றால் அற்புதம், அருமை என்ற படி மதிப்பெண் கொடுத்து ஒவ்வொரு கருத்தும் இந்த மதிப்பெண் வரிசையில் எந்த இடத்தில் வருகிறது என்று பார்த்தார். முதலிடம் பெறும் கருத்துக்களின் அடிப்படையில் திட்டங்களை வகுத்தார். இந்த ஆய்வு உணர்த்திய முக்கிய உண்மை ஐந்து நிமிடம் யோசிக்கும் போது உருவாகும் கருத்துக்களும் அவ்வப்பொழுது தோன்றும் கருத்துக்களும் தரத்தின் அடிப்படையில் ஒன்று தான். ஆனால் உட்கார்ந்து ஒரு இடத்தில் சிந்திக்கும் போது கருத்துக்களோடு அவற்றைச் செயல்படுத்தும் வழி முறைகளும் பிறக்கின்றன என்பதை அவர் கண்டறிந்தார். அவரது அனுபவம் மூன்று உண்மைகளைச் சுட்டிக் காட்டின:-

1)    உங்களுக்கு விருப்பமான ஒன்றில் தினசரி ஐந்து நிமிடம் ஆழ்ந்து யோசித்து கருத்துக்களை உருவாக்குங்கள்.

2)    ஒரு விஞ்ஞானியின் ஆய்வின் தரமானது அவன் கொண்டுள்ள கருத்துக்களின் எண்ணிக்கைக்கு இணங்கவே இருக்கிறது என்று டீன் கெய்த் சிமொண்டான் தனது ‘ஆரிஜின்ஸ் ஆஃப் ஜீனியஸ்’ நூலில் சொல்வதை மனதில் கொள்ளுங்கள்.

3)    அவ்வப்பொழுது உருவாகும் கருத்துக்களை விட தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கும் போது உருவாகும் கருத்துக்கள் சிறப்பாக உருவாவதற்கான காரணம் கவனக் குவிப்பினால் தான். வழிமுறைகளும் அந்த கருத்துக்களுடன் தோன்றும்

இந்த புதிய வழியில் அன்றாடம்  கருத்துக்களை  உருவாக்கி அவற்றை அலசி ஆராய்ந்து குப்பை போன்றவற்றை ஒதுக்கி விட்டு நல்லனவற்றில் ஆழ்ந்து ஈடுபட்டு அவற்றை நடைமுறைப் படுத்தினால் வெற்றி நிச்சயமே!

புதிய கருத்துக்களை உருவாக்க உள்ள சில வழிகளை மேலும் பார்ப்போம்.

Pic Source :  http://i.telegraph.co.uk/multimedia/archive/01699/linus-pauling_1699054c.jpg

******************