உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -1

உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -1
ச.நாகராஜன்

“ஒரு மனிதரின் மனதையும் இதயத்தையும் புரிந்து கொள்ள அவர் இதுவரை என்ன சாதித்திருக்கிறார் என்று பார்க்காதே! அவர் என்னவாகவிரும்புகிறார் என்பதை அறி!” – கலில் ஜிப்ரான்
அறிவியல் முன்னேற முன்னேற வெற்றிக்கான வரம்பு எல்லையற்று விரிந்து விட்டது!
யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். வானமும் எல்லை இல்லை. எந்த உயரத்திலும் ஏறி வெற்றிக் கொடி நாட்டலாம். அது தான் இன்றையஅறிவியல் உலகம்.
ஆதாரம் வேண்டுமா? இதோ கீழே தரப்படுபவர்களைப் பற்றிப் படியுங்கள். உற்சாகம் அடையலாம்.உத்வேகம் பெறலாம். அது சரியில்லை; இதுசரியில்லை என்று சாக்கு போக்கு சொல்லாமல் உங்கள் லட்சியத்தை நோக்கி முன்னேறி வெற்றி பெறலாம்.
உத்வேகமூட்டும் சில உண்மை வரலாறுகள் இதோ, உங்களுக்காகவே!
மரியா தாஸ் க்ரகாஸ் சில்வா ஃபாஸ்டர்
பிரேஜிலில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம் பெட்ரோப்ராஸ். இதனுடைய தலைமைப் பொறுப்பை முதன் முதலாக ஒரு பெண்மணிஏற்றுள்ளார். உலகமே வியக்கிறது இன்று! மரியா தாஸ் க்ரகாஸ் சில்வா ஃபாஸ்டர் என்ற அந்தப் பெண்மணி சாதனை படைத்து விட்டார். மொரோடொ ஏடியஸ் என்ற ஊரில் தன் இளமைப் பருவத்தைத் தொடங்கினார் மரியா. மிக மிக ஏழ்மையான குடும்பம். அம்மா கடும் உழைப்பாளி. அப்பாகுடிகாரர். வேறு வழியின்றி சாலையில் குப்பையோடு கிடக்கும் கேன்களையும் பேப்பர்களையும் பொறுக்கித் திரட்டி சிறிது பணத்தைச் சம்பாதித்துவந்தார் மரியா.
1978ஆம் ஆண்டு ஆரம்ப பயிற்சியாளராக பெட்ரோப்ராஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். கடுமையான உழைப்பு. எதையும் எதிர்கொள்ளும் திறன். எல்லாதடைகளையும் உடைத்தெறிந்தார் மரியா. முதன் முதலாக CEO எனப்படும் தலைமைப் பொறுப்பு அதிகாரியாக சமீபத்தில் பதவி ஏற்றார்.
நிறுவனங்களைப் பற்றி மதிப்பிடும் உலகின் தலையாய நிறுவனமான ப்ளூம்பெர்க் மரியாவைப் பற்றிய தனது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.அவரது ஓய்வில்லாத கடும் உழைப்பே அவரை இந்த உயர் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்கிறது ப்ளூம்பெர்க். அவரது வேலை செய்யும் பண்புஅவருக்கு கவைரோ என்ற பட்டப் பெயரை நிறுவனத்தில் சம்பாதித்துக் கொடுத்தது. கவைரோ என்பது கிரிமினல்கள் நிறைந்த ப்ரேஜில் நகர்களில்அவர்களை அப்புறப்படுத்த ப்ரேஜில் போலீசார் உபயோகப்படுத்திய போலீஸ் வாகனத்தின் பெயர்! பிப்ரவரி, 2015இல் அவர் சிஇஓ ஆனதற்குஉலகமே வாழ்த்துத் தெரிவித்தது.
மூன்று வேலை பார்த்து கஷ்டப்பட்ட டு வான் சாங்
1981ஆம் ஆண்டு கொரியாவிலிருந்து ஒரு இளம் தம்பதிகள் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தனர். இளம் மனிதரின் பெயர் டு வான் சாங்.மனைவியின் பெயர் ஜின் சூக். அமெரிக்காவிற்கு வந்த புதிதில் வாழ்க்கைச் செலவை ஈடுகட்டுவதற்காக டு வான் சாங் ஒரே சமயத்தில் மூன்றுவேலைகளைப் பார்த்தார். ஒரு காபி ஷாப்பிலும். ஒரு பெட்ரோல் பங்கில் பணியாளாகவும், ஒரு கட்டிடத்தில் காவல் காப்பவராகவும் இப்படி ஒரேசமயத்தில் மூன்று வேலைகளையும் பார்த்து பணம் சம்பாதித்த அவர் 1984ஆம் ஆண்டு ஒரு துணிக்கடையை ஆரம்பித்தார்.
அந்த ஒரே துணிக்கடை Forever 21 என்று இப்போது உலகப் புகழ் பெற்றுள்ள நிறுவனத்தை ஆரம்பிக்க வழி கோலியது. இப்போது 480ஸ்டோர்களுடன் ஆண்டு ஒன்றுக்கு 300 கோடி டாலர் வருமானத்தை ஈட்டுகிறது. இதை தனது குடும்ப வர்த்தகமாக மட்டுமே நடத்துகிறார் டு வான்சாங். அவரது மகள்களான லிண்டா மற்றும் எஸ்தர் இப்போது தந்தைக்கு உதவியாக வணிகத்தை போட்டி போட்டுக் கொண்டு வளர்க்கிறார்கள். டுவானின் சாதனைக்குக் காரணமும் கடும் உழைப்பே தான்!
இருட்டறை காபினில் வாழ்க்கையைத் துவங்கிய ஹரால்ட் சிம்மன்ஸ்
இன்று பல கோடி டாலர்களுக்கு உரியவர். அன்றோ சிறிய காபின் ஒன்றில் வாழ்ந்தவர். பெயர் – ஹரால்ட் சிம்மன்ஸ். டெக்ஸாஸில் கோல்டன் நகரில்மின்சாரமும் குழாயுமின்றி இருந்த ஒரு இருட்டறையில் அவர் தன் ஆரம்ப கால நாட்களைக் கழித்தார். இருந்தாலும் மனம் தளரவில்லை.நம்பிக்கையை இழக்கவில்லை. பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.ஏ. படிப்பை முடித்தார்.பின்னர் பொருளாதாரத்தில் மாஸ்டர் பட்டமும் பெற்றார்.
முதல் முயற்சியாக பல மருந்துக்கடைகளின் சங்கிலித் தொடர் ஒன்றை கடன் வாங்கிய பணத்தை வைத்து ஆரம்பித்தார். அது இன்று 100ஸ்டோர்களை உடைய சங்கிலித் தொடர் கடைகளாகப் பரிமளிக்கிறது. அந்தக் கடைகளை எகெர்ட் என்ற பெரும் நிறுவனத்திற்கு 5 கோடிடாலர்களுக்கு விற்றார். அவ்வளவு தான், கையில் கிடைத்த பணத்தை வைத்து பிரம்மாண்டமான கார்பொரேட் ஜெயண்ட் ஆகி விட்டார். இப்போதுஆறு கம்பெனிகளுக்கு உரிமையாளர். அதில் ஒன்று டைட்டானியம் மெடல்ஸ் கார்பொரேஷன் என்ற பெரிய நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம்தான் உலகிலேயே மிக விலைமதிப்புள்ள டைட்டானியத்தை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனம்.
ஆக அறிவியல் உலகம் இன்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆதரவாக எல்லையற்ற சாத்தியங்களைத் திறந்து விட்டிருக்கிறது.
ஆசையும், லட்சியமும் அதற்கேற்ற உழைமப்பும் இருக்கிறதா, வெற்றி நிச்சயம் தான்

Pic Source :http://www.topnews.in/files/Petrobras.jpg

Related Post