க்ரிட் டெஸ்ட்!

க்ரிட் டெஸ்ட்!      ச.நாகராஜன்

ஹௌ இன்டெலிஜெண்ட் ஆர் யூ (How intelligent are you?) என்ற கேள்வி போய் ஹௌ க்ரிட்டி ஆர் யூ (How gritty are you?) என்ற கேள்வியே இன்று உலகில் முதலில் கேட்கப்படும் கேள்வியாக ஆகிக் கொண்டிருக்கிறது. (grit என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி courage மற்றும் resolve (தைரியம் மற்றும் மன உறுதி) என்று அர்த்தம் தருகிறது)
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஸ்டான்போர்டைச் சேர்ந்த உளவியலாளர் வால்டர் மிச்செல் என்பவர் ‘மார்ஷ்மல்லோ சோதனை’ என்ற ஒரு சோதனையை நடத்தினார். நான்கு வயதுள்ள குழந்தைகள் மட்டும் சோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் மேஜைகளில் இனிப்புப் பண்டம் அழகாக வைக்கப்பட்டிருந்தது. விஞ்ஞானிகள் குழந்தைகளை நோக்கி உடனே வேண்டுமென்றால் ஒரு இனிப்புப் பண்டம் தான் எடுத்துக் கொள்ளலாம் என்றும் 15 நிமிடங்கள் கழித்து என்றால் இரு இனிப்புப் பண்டங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினர். எல்லா குழந்தைகளுமே (இரண்டிற்கு ஆசைப்பட்டு) காத்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் எல்லோராலும் அப்படிக் காத்திருக்க முடியவில்லை சிலர் மட்டுமே பதினைந்து நிமிடம் காத்திருந்து இரண்டைப் பெற்றுக் கொண்டனர்.
இதே குழந்தைகளை விஞ்ஞானிகள் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து கண்காணித்தனர். யாரெல்லாம் மன உறுதியுடன் 15 நிமிடம் காத்திருந்தனரோ அவர்கள் அனைவரும் உயர்நிலைப் பள்ளியிலும் சிறந்து விளங்கினர்.அதிக மார்க்குகளைப் பெற்றனர். மிச்செல், “அவர்கள் தங்களது கவனத்தை சிறப்பான உத்தி மூலம் பங்கீடு செய்தனர் இனிப்புப் பண்டத்தை உற்றுப் பார்க்காமல் மேஜைக்கு அடியில் பார்வையைச் செலுத்தி அவர்கள் தங்களது கவனத்தைத் திசை திருப்பினர். அவர்களது மன உறுதியே இதற்குக் காரணம்” என்றார்.
இந்த அடிப்படையில் இப்போது க்ரிட் டெஸ்ட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகி விட்டது.
இப்போது அனைவருக்குமான க்ரிட் டெஸ்ட் கீழே தரப்படுகிறது.
க்ரிட் டெஸ்ட்
கீழே 12 கேள்விகள் உள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் கீழே தரப்படும் ஐந்து சாய்ஸ்களில் – விருப்பத் தேர்வுகளில்- உங்களுக்குப் பொருத்தமானதாக நீங்கள் கருதுவதை டிக் செய்து கொள்ளுங்கள்
நிச்சயம் நான் தான் இது
என்னைப் போலவே அசலாக இருக்கிறது இது
சிறிது என்னை ஒத்திருக்கிறது இது
என்னைப் போல இல்லை.
நிச்சயமாக நான் இல்லை இது

1.ஒரு முக்கியமான சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்காக அதில் இருந்த பின்னடைவுகளைத் தகர்த்து வெற்றி கொண்டேன்.
2. புதிய கருத்துக்களும் திட்டங்களும் சில சமயங்களில் என்னை முந்தைய திட்டாங்களிலிருந்து திசை திருப்புகிறது.
3, எனது விருப்பங்கள் வருடத்திற்கு வருடம் மாறுகிறது.
4.பின்னடைவுகள் என்னைத் தளரச் செய்யாது.
5. ஒரு கருத்தில் அல்லது திட்டத்தில் மிகவும் வெறியாக சில காலம் இருந்து விட்டுப் பின்னர் அதில் ஆர்வமே எனக்குப் போய் விடுகிறது.
6.நான் ஒரு கடின உழைப்பாளி.
7. நான் முதலில் ஒரு லட்சியத்தை மேற்கொள்வேன். பின்னர் வேறொன்றைப் பின்பற்ற ஆரம்பிப்பேன்.
8. முடிப்பதற்குச் சில மாதங்கள் ஆகும் திட்டங்களின் மீது என் கவனத்தைக் குவிப்பதில் எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
9.ஆரம்பித்த எதையும் முடித்து விடுவேன்.
10. பல வருட வேலையைக் கொண்ட ஒரு லட்சியத்தில் நான் வெற்றி பெற்றேன்.
11. புதிய விஷயங்களில் ஒவ்வொரு சில மாதங்களிலும் எனக்கு ஆர்வம் வருகிறது.
12. நான் தளராதவன்
இப்போது தேர்வை முடித்த நிலையில் எவ்வளவு மார்க்குகளை நீங்கள் பெறுகிறீர்கள் என்பது முக்கியம்.
1,4,6,9.10,12 ஆகிய கேள்விகளுக்கு கீழே உள்ளபடி மார்க்குகளைப் போட்டுக் கொள்ளுங்கள்
5 மார்க் – நிச்சயம் நான் தான் இது
4 மார்க் – என்னைப் போலவே அசலாக இருக்கிறது இது
3 மார்க் – சிறிது என்னை ஒத்திருக்கிறது இது
2 மார்க் – என்னைப் போல இல்லை.
1 மார்க் – நிச்சயமாக நான் இல்லை இது
2,3,5,7,8,11 ஆகிய கேள்விகளுக்கு கீழே உள்ளபடி மார்க்குகளைப் போட்டுக் கொள்ளுங்கள்
1 மார்க் – நிச்சயம் நான் தான் இது
2 மார்க் – என்னைப் போலவே அசலாக இருக்கிறது இது
3 மார்க் – சிறிது என்னை ஒத்திருக்கிறது இது
4 மார்க் என்னைப் போல இல்லை.
5 மார்க் – நிச்சயமாக நான் இல்லை இது
12 கேள்விகளுக்கும் மேலே கண்டபடி மார்க்குகளை போட்டுக் கொண்ட பின் மொத்தத்தைக் கூட்டுங்கள். கூடுதல் தொகையை 12ஆல் வகுங்கள். 5 என்பது அதிக மன உறுதியைக் காட்டும். 1 என்பது குறைந்த மன உறுதியைக் காட்டும். உங்கள் மார்க்குக்கு ஏற்ப மன உறுதியை அதிகப் படுத்தும் வழிகளை மேற்கொள்ளுங்கள்.வெற்றி நிச்சயம்.
சின்ன உண்மை!
க்ரிட் டெஸ்டில் குறைந்த மார்க்குகளே கிடைத்துள்ளது என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். க்ரிட் என்பதையும் புத்திகூர்மையை வளர்த்துக் கொள்வது போல வளர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ஆஞ்சலா டக்வொர்த்.

Pic Source : https://www.authentichappiness.sas.upenn.edu/sites/default/files/styles/slider/public/banner/Grit%20slider.png?itok=IXgKcPij

Related Post