தசைகள் எப்படி வளர்கிறது?

தசைகள் எப்படி வளர்கிறது?

இதில் நாம் தசைகளின் வகைகளையும் அவை எவ்விதம் வேலை செய்கிறது என்பது பற்றியும் பார்ப்போம்.

பெரும்பாலானவர்கள் ஜிம்மிற்குச் சென்று உடலை கச்சிதமாகவோ,அல்லது தசைகளை வலுவாக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டே செல்கின்றனர். ஆண்களைப் பொறுத்த மட்டில் எடைப்பயிற்சிகளை செய்யும் போது அவர்கள் தசைகள் எளிதாக வலுப் பெற்று அழகு பெற்றுவிடுகிறது. ஆனால் பெண்களைப் பொறுத்தமட்டில் ஆண்களைப் போல் அவ்வளவு விரைவாக தசைகள் வளர்வதில்லை.நீங்கள் எப்பொழுதாவது உங்கள் தசைகள் எப்படி வளர்கிறது என்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா?

தசை எப்படி வளர்கிறது என்பதை அறிவியல் பூர்வமாகப் பார்ப்போம்.மனித உடலானது சிக்கலான அமைப்பினைக் கொண்ட தசைகளால் ஆனது. நமது உடலின் பாதி எடையினைக் கொண்டது. 650 வகையான தசைகள் நமது உடலில் உள்ளது. இந்தத் தசைகள் ரத்தத்தை udaudaஉடலெங்கும் சீராகப் பரவச்செய்வதற்கும்,உடலை உறுதியாக வைப்பதற்கும்,உடல் உள்உறுப்புகள் சரிவர இயங்குவதற்கும் உதவி செய்கின்றன.

மூன்று வகையான தசைகள் நமது உடலில் உள்ளது.

  1. இதயத் தசைகள்: இது நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் (inVoluntary Muscles) இவ்வகையான தசைகள் நமது இதயத்தை இயக்குவதற்கும்,சீராக துடிப்பதற்கும் உதவுகிறது.
  2. எலும்புத் தசைகள் : இது நமது கட்டுப்பாட்டில்/ நம்மால் இயக்கப்படும் தசைகள். இவை தான் மனித உடலுக்கு ஒரு வடிவத்தையும்,நாம் நடமாடும் இயக்கத்திற்கும்,மூட்டுகளை இணைப்பதற்கும்,அமருவதற்கும்,உடலில் வெப்பத்தினை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
  3. மென்மையான தசைகள்: இதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள். இவை வயிற்று இரைப்பைப் பகுதியில் காணப்படுகிறது.

தசைகள் எப்படி வளர்கிறது?

பெரும்பாலானவர்கள் தசைகளை வலுப்படுத்த ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்து வருவது எலும்புத்தசைகளைப் பலப்படுத்தவே. உடற்பயிற்சி செய்துவிட்டு ஓய்வு எடுக்கும் வேளையில் சேதமடைந்த தசை நார்களை புதுப்பித்து, ஒன்றுடன் ஒன்று இணைந்து வலிமையான தசைகளாக உருவாகின்றன.

இயற்கையாக தசை வளர்ச்சி என்பது தசைகளில் தொடர்ச்சியாக கொடுக்கப்படும் அழுத்தத்தின் விளைவாக தசை இழைகள் நீட்சி அடைந்து புதிய தசைகளாக உருப்பெறுகிறது. தசைகளில் கொடுக்கப்படும் எடை அழுத்தம் சிறிய அளவுகளில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து வந்தாலே தசைகள் சீராக வளரும். அதனால் எடுத்த உடன் மிகப்பெரிய அளவில் எடை அழுத்தம் என்பது சரி அல்ல. அளவுக்கதிகமான எடைப்பயிற்சி செய்வதினால் தசைகள் பாதிப்பதுடன் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.எப்பொழுதெல்லாம் தசைகள் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நமது உடல் அழற்சி (inflammatory) மூலக்கூறுகளை தூண்டியும்,நோய் எதிர்ப்பு அணுக்களையும் சரி செய்ய அனுப்பிவைக்கிறது. அப்பொழுது நமது உடலானது வலி போன்ற அசெளகரியங்களை அனுபவிக்கிறது.

தசைகள் வளார்வதற்கு ஓய்வு தேவை.உடற்பயிற்சிக்குப் பின் போதிய ஓய்வு எடுப்பதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வும்,தேவையான புரதச் சத்துக்களும் கொடுக்காமல் தசை வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. புரதம் என்பது அமினோ அமிலங்கள் மூலக்கூறுகளால் ஆனது. புரதம் இல்லாமல் தசையை விருத்தி செய்ய இயலாது. தசையை விருத்திசெய்ய விரும்புபவர்களின் உணவில் தசையை விருத்தி செய்யும் மூலப்பொருளான புரதம் இருப்பது அவசியம். கார்போஹைட்ரேட்டானது உடந்து போன தசை திசுக்களை சரிசெய்ய பயன்படுகிறது.

இதற்கு அப்பாலும் தசை வளர்ச்சி நிர்ணயிக்கும் காரணிகளாவன: ஹார்மோன்கள்,பாலினம்,வயது மற்றும் மரபணுக்கள். டெஸ்ட்டோஸ்டிரோன் இந்த ஹார்மோன் ஆண்களுக்கு அதிக அளவில் சுரப்பதினால் தான் பெண்களை விட ஆண்கள் கட்டு மஸ்தான உடலமைப்பினை பெற்றுள்ளார்கள்.

Related Post