ச.நாகராஜன் தஞ்சை மாவட்டம் கீவளூரில் பிறந்தவர். தமிழில் 3500 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 200 கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் 18 இதழ்களில் பிரசுரமாகி உள்ள்ன. இவரது 52 புத்தகங்கள் இதுவரை வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிவியலை ஆன்மீகத்துடன் இணைத்து இவர் அளித்த அறுபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மந்திரங்களின் மகிமை, யந்திரம், ஜோதிடம், வானியல். ஹாலிவுட் சினிமா, தமிழ் திரைப்படப் பாடல்கள், விண்வெளி அறிவியல், பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம், உடல் தகுதி, சுய முன்னேற்றம், ஒளி வட்டம், மறு பிறப்பு, பெரியோர் வரலாறு உள்ளிட்ட பொருள்களில் பல்வேறு இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் அன்றாடம் வெளியாகும் இவரது கட்டுரைகளை தினமும் சுமார் 15000 அன்பர்கள் உலகெங்கும் படித்து வருகின்றனர்.

அகில இந்திய வானொலி நிலையத்தின் வாயிலாக சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு பற்றிய இவரது கருத்துக்கள் அவ்வப்பொழுது ஒலிபரப்பப்படுகின்றன.

வானொலி நாடகங்களுள் இவரது ‘வருவார் காந்திஜி’ என்ற நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவரது நூல்களுக்கு முன்னுரை அளித்தவர்களுள் டைரக்டர் பாக்யராஜ், அசோகமித்திரன், முன்னாள்ள் டி.ஐ.ஜி ஸ்ரீபால், கோகுலம் கதிர் ஆசிரியர் கமலி  ஸ்ரீபால், ஞான ஆல்யம் ஆசிரியர் மஞ்சுளா ரமேஷ், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், நல்லி குப்புசாமி ரெட்டி, இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன், என்.சி. ஸ்ரீதரன், விஞ்ஞானிகள் கே.ஜி.நாராயணன், வி.தேசிகன் உள்ளிட்டோர் அடங்குவர்.

தமிழில் அறிவியலில் சுமார் 5000 ஆங்கிலச் சொற்களை இவர் தமிழில் தந்துள்ளார்.

இவரது மின்னஞ்சல் முகவரி :  snagarajans@gmail.com