thushaan_2

துஷான் குணா (குணபாலசிங்கம்) (1989, மே,26ஆம் தேதி பிறந்தவர்) ஜெர்மானிய/ ஸ்ரீலங்கா பகுதி நேர தொழில்துறை கால்பந்தாட்ட வீ ரர். குணா ஜெர்மனியில் ஹைப்ரானில் பிறந்தார். அவர் தனது கால்பந்தாட்ட விளையாட்டுத் துறை வாழ்க்கையை ஃப்ரைட்ரிச்ஷலல்லர் SVயில் தொடங்கினார். ஒன்பது ஆண்டுகள் ஃப்ரைட்ரிச்ஷலல்லர் SVயுடன் கழித்த பின்னர் கார்ல்ஸ்ருஹே SC (2.பண்டேஸ்லிகா)யுடன் இளைஞர் கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த  SG ஸீமன்ஸ் கார்ல்ஸ்ருஹேக்கு அவர் மாற்றப்பட்டார். நீண்ட தூரத்தைக் கருத்தில் கொண்டு அவர் FCஹெலிப்ரானில் சேர்ந்தார். 2010, பிப்ரவரியில் குணா தனது  பகுதி தொழில்துறையின் முதல் ஒப்பந்தத்தை இங்கிலாந்தின் கான்ப்ரன்ஸ் ப்ரீமியர் ஸ்குயர் க்ளப்பான ல்யூடன் டவுன் FCயுடன் செய்தார்.ல்யூடன் டவுன் FC அவரை சிறிது அனுபவத்தைப் பெறுவதற்காக ஹாம்ப்டன் ரிச்மாண்ட் பாரோ FC (கான்ப்ரன்ஸ் சவுத்)க்கு சிறிது காலம் இருந்து விட்டுத் திரும்பும் அடிப்படையில் அனுப்பியது. ல்யூடன் டவுன் FCயில் சேர்வதற்கு முன்பாக,  ஹாவன்ட் அண்ட் வாட்டர்லூவில்லியிலிருந்து ஷான் கேட்டும் கூட அவரைத் தங்களுடன் சேர்ப்பதில் ஆர்வம் காட்டியது.

மீஸட் ஓஜிலின் (ஜெர்மனியின் தேசீய விளையாட்டு வீரர்) இளைஞர் பயிற்சியாளர்களில் ஒருவரும், பண்டேஸ்லிகா தொழில்துறை வீரருமான (VFL போச்சும்) அவரது முகவர் வோல்கெர் நப்பெய்டே அவரை ஜெர்மனிக்கு மீண்டும் அழைத்து வருவதில் ஆர்வம் கொண்டார். குணா ராட்-வெய்ஸ் ஓபர்ஹாஸனுக்கு (2.பண்டேஸ்லிகா) சோதனைகளுக்காகச் சென்றார். ஆனால் ஓபர்ஹாஸனின் நிதி நிலை பற்றாக்குறையினால் ஓபர்ஹாஸனில் சேரவில்லை. 2011, ஜூலையில் வுப்பர்டேலர் SV (ரீஜினலிகா வெஸ்ட்)-உடன் இதர பல அழைப்புகளை மறுத்து விட்டுச் சேர்ந்தார். வுப்பர்டேலர் பண்டேஸ்லிகா ரிஸர்வ் குழுக்களான போருஸியா டார்ட்மண்ட், ஷ்ஹால்க் 04- மற்றும் பேயர் லெவெர்குஸென் போன்றவற்றுடன் விளையாடுகிறது. On 2012

வுப்பர்டேலில் அவர் இருக்கும்போது கணுக்கால் காயத்தினால் பல மாதங்கள் துறையிலிருந்து விலகி இருந்தார். 2012இல் அவர் டஸ் ஹெவன் குழுவுக்கு (ஒபர்லிகா வெஸ்ட்ஃபாலென்) மாற்றப்பட்டார். கால்பந்தாட்டத் துறையைத் தவிர அவர் அரசியல், நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

2014, செப்டம்பரில் தமிழ்ஃபிட்னெஸ்மோடிவேஷன் (tamilfitnessmotivation) என்று அழைக்கப்படும் யூடியூப் சானல் ஒன்றை தனது குடும்ப உறுப்பினர்களுடன் நிர்மாணித்து, அதைத் துவக்கினார். உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு உடல்தகுதியையும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் அமைக்க உதவுவதும் ஊக்குவிப்பதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் இன்னொரு நோக்கம் முதுமைப் பருவத்தில் உள்ளோருக்கு உடல்தகுதியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதுமேயாகும்.

thushaan_0           Picture: Felix Haas, Thushaan and Coach: Peter Radjoweski