• உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -2

  உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -2 ச.நாகராஜன் “ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அதைப் பயன்படுத்திச் செயல்படத் தயாராக இருக்க […]

  Share
 • உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -1

  உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! -1 ச.நாகராஜன் “ஒரு மனிதரின் மனதையும் இதயத்தையும் புரிந்து கொள்ள அவர் இதுவரை என்ன சாதித்திருக்கிறார் என்று பார்க்காதே! அவர் என்னவாகவிரும்புகிறார் என்பதை அறி!” […]

  Share
 • இயற்கையில் கணித இரகசியம் ! – 3

  இயற்கையில் கணித இரகசியம் ! – 3  ச.நாகராஜன்              “எல்லாமே எண்கள் தான்!”                                 -பிதகோரஸ் இயற்கையில் உள்ள கணித ரகசியங்களையும் வடிவமைப்பு ரகசியங்களையும் கண்டுபிடிக்க விஞ்ஞானியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. […]

  Share
 • சந்தோஷம் அடைய எளியவழிகள்! – 2

  சந்தோஷம் அடைய எளியவழிகள்! – 2 ச.நாகராஜன் “இரு கரங்களையும் உயர்த்துங்கள்! இன்றையசந்தோஷத்திற்கு வரவேற்பை அளியுங்கள்” –யாரோ சந்தோஷத்திற்கும் இசைக்கும் நேரடித்தொடர்பு உண்டு. சோகமான கீதங்களைக்கேட்டாலும் கூட அது மெல்லிய உணர்வுகளைவருடி விட்டு ஆனந்தத்தையே தரும். இன்றையஅறிவியல் உலகில் மின்னணு சாதனங்களுக்காபஞ்சம். பிடித்த பாடல்களைச் சேகரித்துமுடிந்த நேரத்தில் கேட்க ஆரம்பியுங்கள். சிலநிமிடங்கள் இதில் செலவழிக்கப்பட்டால் அதுஉங்களை பல மணி நேரம் ‘மூட்’ மாறாமல்நல்ல மனநிலையை அமைப்பது உறுதி. திட்டமிடாத வாழ்க்கை பாழ்படும்வாழ்க்கை. எதிரதாக் காக்கும் அறிவினார்க்குஇல்லை அதிர வருவதோர் நோய்.(குறள்-429)திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்க்கையில் ‘ஷாக்’இல்லை. சோகம் இல்லை. திட்டமிடும் போதுவெற்றியை எதிர்பார்க்கும் மன நிலையேஆனந்தத்தின் வாசல்; என்று உளவியல்ஆராய்ச்சிகள் அனைத்தும் குறிப்பிடுகின்றன.ஆகவே நல்ல திட்டங்களையும் அதற்கானவழிமுறைகளையும் வகுத்து நல்லவிளைவுகளுக்காக ஆவலுடன் காத்திருங்கள்.தொடர்ந்த இந்த முயற்சி சந்தோஷத்தைஅடைவதற்கான உறுதியான வழி!        7 . நண்பர்களுடன் மனம் விட்டுஅளவளாவுவது எதிர்மறை உணர்வுகளைஉடனடியாக நீக்கி விடும். அவர்களை உடன்வைத்தே நல்ல திட்டங்களைத் தீட்டலாம். 80லட்சம் பேர்களை வைத்து நடந்த ஒரு சிறியஆராய்ச்சி பெரிய ஒரு உண்மையைவெளிப்படுத்தி உள்ளது. ஒருவர்இன்னொருவருடன்  டெலிபோனில் பேசும்போது அவருடன் மீண்டும் தொடர்பு கொண்டுபேசினால் அவர்களிடையே ஆழமான நட்புமலர்கிறது என்கிறது ஆய்வு முடிவு. நட்புக்குவிலை மதிப்பே இல்லை என்பதுஉண்மையானாலும் நட்பு மூலம் கிடைக்கும்இந்த மகிழ்ச்சியை பணம் மூலம்அடைவதெனில் நீங்கள் சுமார் 68 லட்சம்ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு செலவழிக்கவேண்டியிருக்கும் என்கிறது ஆய்வு. உங்களுக்கு நடந்த மூன்று நல்லவிஷயங்களைப் பட்டியலிடுங்கள் இரவு படுக்கப்போகும் முன்னர், சிலநிமிடங்கள் அன்று நடந்த நிகழ்ச்சிகளைகோர்வையாக நினைத்துப் பாருங்கள். மிகபிரமாதமான நிகழ்வுகள் அன்றாடம் நிகழும்என்பதில்லை. ஆனால் நடந்தவற்றில் மூன்றேமூன்று நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்துஅவற்றால் நீங்கள் ஏன் மகிழ்ச்சி அடைந்தீர்கள்என்பதையும் சற்று சிந்தியுங்கள். இப்படிப்பட்டநிகழ்வுகள் அதிகமாக வழி உண்டாஎன்பதையும் சற்று யோசியுங்கள். இந்தமுறையைப் பின்பற்றுமாறு சொல்லப்பட்ட ஒருஆய்வில், இதில் கலந்து கொண்ட அனைவரும்தங்கள் மகிழ்ச்சி ஆறே மாதங்கள் மிக அதிகஅளவில் பெருகியது என்று கூறினர். அத்தோடுமுன்பிருந்த மனச்சோர்வு, ஏமாற்றம் முதலியஎதிர்மறை உணர்வுகளும் அடியோடு நீங்கினஎன்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரைமேலே படித்தவற்றில் ஏதேனும் சிலவற்றைநீங்கள் ஏற்கனவே செய்திருந்தால் இப்போதேஉங்களுக்கு மூன்று நல்ல விஷயங்கள் உள்ளன! உங்களுக்கேஉரித்தான இயல்பான நல்லகுணங்களின் வலிமையை வளர்ப்பதால்உங்கள் மகிழ்ச்சி தானே பெருகும். எதில்நீங்கள் மிக நன்றாக இருக்கிறீர்கள்? எந்த ஒருவிஷயத்திலும் மேன்மை என்பதை நீங்கள்காட்டும்போது நீங்களும் மலர்ச்சிஅடைகிறீர்கள், மற்றவர்களும் உங்களைப்பாராட்டுகிறார்கள். எதையெல்லாம் நீங்கள்நன்றாகத் திறம்படச் செய்யமுடியும் எனஎண்ணிப் பாருங்கள். சிலருக்குமற்றவர்களுடன் பழகுவது சுலபமாக வரும்.பாடுவது, பேசுவது, விளையாட்டில் திறமை எனஇப்படி பல விஷயங்கள் உண்டு. நீங்கள் எதில்இயல்பாகவே திறமைசாலி? எதில் இயல்பாகவேமேன்மையுற்றவர். அதில் கவனக் குவிப்புசெய்து அதில் வலிமை பெறுங்கள் அந்ததிறமையை வளர்ப்பதற்கான பயிற்சியில் சற்றுநேரம் செலவழியுங்கள். அந்த பயிற்சிநேரங்களில் உங்கள் மகிழ்ச்சி பன்மடங்காகப்பெருக ஆரம்பிக்கும்.  நீங்கள்செயலூக்கம்குறைந்தவராக இருந்துஎப்போதுமே கனவு காணுவதில் இன்பம்கொள்பவராக இருந்தால் உங்களுக்கு ஒருசிறிய உதவிக் குறிப்பு இதோ! சந்தோஷமானபகல் கனவு ஒன்றைக் காணுங்கள் அன்றாடம்பகல் நேரத்தில் நம் மனது அங்கும் இங்கும்ஆயிரம் எண்ணங்களோடு அலை பாய்கிறது.அந்த அலைபாயும் மனதை உடன் மறைஎண்ணங்களில் அதாவது பாஸிடிவாக ஒரு முகப்படுத்துவது மிகுந்த ஆதாயத்தைத் தரும்!வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக ஆக்க வல்லஉத்திகள் பற்றிய ஆய்வு ஒன்றுமேற்கொள்ளப்பட்டது. அதில் பாஸிடிவ்மனநிலை மிகுந்த திறன் வாய்ந்த ஒன்றாகஇருப்பது உறுதி செய்யப்பட்டது இதில் கலந்துகொண்டோர் தங்கள் வாழ்வில் நடந்தஇன்பமான நிகழ்வுகளையும் வெற்றிகரமானதருணங்களையும் உன்னதமான நட்பு,ஆழமான காதல் ஆகியவை பற்றியும் எண்ணிமகிழ்ந்தனராம். கடந்த கால குழப்பங்களையும்தோல்விகளையும் ஏமாற்றங்களையும்அலைபாயும் மனம் நினைத்தாலும் கூட நல்லபகல் கனவில் அது மகிழும் என்பது தான்உண்மை! ஆக சந்தோஷமாக வாழ முடியவில்லையேஎன்று எண்ணி ஏங்கி எப்போதும் துக்ககரமாகஇருப்பதையே வாழ்க்கை முறையாகக்கொள்வோர் ஒரு சில நொடிகளில் அதிலிருந்துமீண்டு புதிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைநோக்கி அமைத்துக் கொள்ளலாம். Pic Source : http://allaboutkim.com/wp-content/uploads/2017/06/How-To-Be-Happy.jpg ****

  Share
 • சந்தோஷம் அடைய எளியவழிகள்! – 1

  சந்தோஷம் அடைய எளியவழிகள்! – 1 ச.நாகராஜன் “நீங்கள் விரும்பும் எதையும் உங்கள்வாழ்க்கையில் நீங்கள் அடையலாம் –நீங்கள் மட்டும் அடுத்தவர்களுக்குஅவர்கள் விரும்புவதை அடைய உதவிசெய்தால்!” –ஜிக் ஜிக்லர் வாழ்க்கையில் ஏமாற்றமும் விரக்தியும்அடைந்து சதா வருத்தப்பட்டுக் கொண்டேஇருப்பவர்களுக்கு அறிவியல் ஏதேனும் கைகொடுக்குமா? கொடுக்கிறது. ஒவ்வொருவரும்சந்தோஷம் அடைய எளிமையான சிலவழிகளை அறிவியல் சுட்டிக் காட்டுகிறது. செய்து பார்த்தால் மனதில் மகிழ்ச்சிபொங்கும். வழிகளைப் பார்ப்போம். வாழ்க்கையில் ஒவ்வொருவருமேநடக்காத பல நல்ல விஷயங்களைப் பற்றிச்சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.இப்படிநடந்திருக்கலாம் என நினைத்து நினைத்துவருத்தப்பட்டுப் பயனில்லை. இப்படிச்சிந்திப்பதை விட்டு விட்டு மாற்றி சிந்தித்துப்பார்த்தால் என்ன? வாழ்க்கையில் நாம்எதிர்பார்க்காத எளிதாக நடக்கவே நடக்கமுடியாத பல நல்ல விஷயங்கள் திடீரென்றுநமக்கு நடந்துள்ளனவே, அவற்றைநினைத்துப் பார்க்கலாமே! உங்கள்வாழ்க்கைத் துணை உங்களுக்கு திடீரெனஅமைந்த அந்தச் சம்பவம்… உங்களுக்குவேலையோ அல்லது பிரமோஷனோ கிடைத்தஎதிர்பார்க்காத அந்த அரிய தருணம்..  இப்படிஎத்தனை சம்பவங்கள்.இவற்றை நினைத்தாலே மனதில் மலர்ச்சி ஏற்படும், மகிழ்ச்சி பொங்கும் இல்லையா!!மனதிற்குள் நமக்கு நடந்த நல்லனவற்றை நினைத்துப் பார்த்தால் என்றுமே சந்தோஷம் தான்! நன்றி மறப்பது நன்று அன்று! சக்தி வாய்ந்த ஒரு உணர்வு நன்றி உணர்ச்சி. உங்களிடம் அந்த உணர்வுஇருப்பது நிஜமென்றால் அடிக்கடி அதைத் தட்டி எழுப்புங்கள். பேனாவை எடுத்து ஒரு சிறிய கடிதம் மூலமாகவாழ்த்து அனுப்ப வேண்டியவருக்கு வாழ்த்தை உளமுவந்து தெரிவியுங்கள். அவசர யுகத்தில் மின்னஞ்சல்இருக்கவே இருக்கிறது. அதைப் பெறுபவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்! உங்களுக்கு தினைத்துணைஅளவு உதவி செய்திருந்தாலும் அதைப் பனைத் துணை அளவாக பாவித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டேஇருங்கள் உங்களுக்கு சந்தோஷம் தானே பெருகும்! “எனக்கு பல்வேறு வகையில் உதவி செய்தவர்களில்பலருக்கு வாரம் ஒருவருக்கு நன்றி தெரிவிக்க ஆரம்பித்தேன், இரண்டே மாதங்களில் மனதில் மகிழ்ச்சி பொங்கஆரம்பித்தது”, என அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள் இதே போல நீங்களும் அடுத்தவரிடம் கூறும்படி நன்றிஉணர்வை வெளிப்படையாகத் தெரியப்படுத்துங்கள். பணம் வருகிறது. போகிறது. எவ்வளவோ செலவுகள்! எவ்வளவு வந்தாலும் போதாத வாழ்க்கை தான்நம்முடையது. இதை ஒரு புறம் ஒதுக்கித் தள்ளி விட்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையைபாத்திரமான ஒருவருக்கு நல்ல ஒரு காரணத்திற்காக விளம்பரமின்றி யாரும் அறியாமல் கொடுங்கள்.நாளடைவில் உங்களது வாழ்க்கைப் போக்கே அதிக சந்தோஷம் உடையதாக மாறி விடும். பசித்த ஏழைக்கு ஒருவேளை உணவுப் பொட்டலம், நன்கு படிக்கும் ஏழை மாணவருக்கு பள்ளிக் கட்டணம், ஏழைப் பெண்ணுக்கு ஒருகுந்து மணி தாலித் தங்கம் –இப்படி யோசித்தால் தகுதி உள்ளவர்கள் பட்டியல் தானே வரும்! மற்றவர்களுக்குஇப்படிக் கொடுப்பது நம்மைப் பற்றி நாமே நலமாக உணர்வதற்கான உன்னதமான வழி! உள்ளுக்குள் இருக்கும்மனச்சாட்சி உங்களைப் பாராட்டும். அது போதும், சந்தோஷம் அடைய! டென்ஷன். டென்ஷன். எப்போதும்டென்ஷன். அதுவே ஆற்றலை வற்ற அடிக்கிறது – எல்லோருக்கும்பொதுவானதாக உள்ள இன்றைய பிரச்சினை இது! ஆகவே சக்தியை அதிகப்படுத்தல் இன்றியமையாதது.இதற்கு ஒரே வழி – செலவில்லாத வழி உடற்பயிற்சி தான். சில எளிய பயிற்சிகளை காலையும் மாலையும்செய்யலாம். அல்லது தினமும் நடைப்பழக்கத்தை மேற்கொள்ளலாம் மனதில் உள்ள டென்ஷனும் அனாவசியகவலைகளும் வெளியே ஓடி விடுவதை அனுபவம் உணர்த்தும். நாற்காலியில் உட்கார்ந்தவாறே செய்யக் கூடியஎளிய பயிற்சிகளையும் எளிய யோகா பயிற்சிகளையும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தினமும்ஏழே ஏழு நிமிடங்கள் பயிற்சி செய்தால் போதும் என்கின்றன ஆய்வு முடிவுகள். ஷான் ஆகர் (Shawn Achor)எழுதியுள்ள ‘தி ஹாப்பினெஸ் அட்வான்டேஜ்’ என்ற புத்தகத்தில் மூன்று குழுக்கள் மீது நடந்த ஒரு அதிசயசோதனை பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த மூன்று குழுக்களுள் மனச்சோர்வை நீக்குவதற்காக முதல்குழுவினருக்கு மருந்தும் இரண்டாம் குழுவிற்கு உடல்பயிற்சியும் மூன்றாம் குழுவினருக்கு இந்த இரண்டையும்மேற்கொள்ளுமாறும் கூறப்பட்டது. மூன்று குழுவினரும் மனச்சோர்வு நீங்கி மகிழ்ச்சி அடைவதாகச்சொன்னாலும்  உடல்பயிற்சி கொண்டவர்களின் சந்தோஷம் அதிகமாகவும் நீடித்து நிலைத்திருப்பதும் தெரியவந்தது! உடல்பயிற்சி மூளை ஆற்றலையும் வெகுவாகக் கூட்டுகிறது!   ****************** Pic Source : http://b.vimeocdn.com/ts/208/974/208974515_640.jpg

  Share
 • வெற்றிக்கான கருத்துக்களைஉருவாக்குவது எப்படி? – 3

  வெற்றிக்கான கருத்துக்களைஉருவாக்குவது எப்படி? – 3 ச.நாகராஜன்       “நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறஉத்தரவாதமான வழி ஒன்று உண்டு! ஒவ்வொருநாள் இரவும் தூங்கப் போவதற்கு முன்னர்நாளை என்ன செய்ய வேண்டும் என்று ஆறுமுக்கியமான விஷயங்களை எழுதிக் கொண்டுஅவற்றில் முதலில் எதைச் செய்ய வேண்டும்,அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுவரிசைப் படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த நாள்அந்த திட்டப்படி செய்யுங்கள். காலம் உங்களைவெற்றியாளராக மாற்றி விடும்!”   –     யாரோ ஸ்காம்பரில் அடுத்தது ‘புட் இட் டு சம் அதர் யூஸ்’ (PUT IT TO SOME OTHER USE) : இதை இன்னொருபயன்பாட்டிற்கு பயன்படுத்தலாமா என்று யோசிப்பதுஅடுத்த உத்தி. ஒரு விஷயத்தை எந்த நோக்கில் நீங்கள்காண்கிறீர்கள்? அதை இன்னொரு நோக்கில் காணமுடியுமா? ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு தாவர இயல்நிபுணர்; அவர் இரசாயனத்திலும் நிபுணர். சாதாரணகடலையைப் பயன்படுத்த 300 விதங்களை அவர்கண்டுபிடித்தார். வேறு எதற்கெல்லாம் இதைப்பயன்படுத்த முடியும்?  புதிய பயன்பாட்டு வழிகள்உண்டா? இதிலிருந்து வேறு புதிய பொருள்களைஉருவாக்க முடியுமா என்றெல்லாம் சிந்திப்பது பல்வேறுபுதிய பார்வைகளையும் கருத்துக்களையும் உருவாக்கஉதவும். மென்பான நிறுவனம் ஒன்று அதை சுவையானஉணவின் ஒரு அம்சமாக சேர்த்து விற்பனையில் பெரியசாதனை படைத்தது. அடுத்தது எலிமினேட் (ELIMNATE) : சில சமயம்ஏதாவது ஒன்றை உங்கள் பொருளிலிருந்து நீக்கி விடுவதுபுதிய கருத்துக்கு வழி வகுக்கும். இதை சிறிதாக்கலாமா?எதை நீக்கலாம்? எதை இதிலிருந்து தனியே பிரிக்கலாம்?சில விதிகளை மாற்றவோ நீக்கவோ செய்யலாமா?’ மென்பான நிறுவனம் ஒன்று தனது வழக்கமானசந்தையை விட்டு விலகி, தனது பானத்தை விசேஷபானமாக மாற்றி ஆரோக்கியத்தில் அதிக அக்கறைஉள்ளவர்களுக்கானது என்று விளம்பரம் செய்துஆரோக்கியம் மேம்படுவதற்கான விசேஷ பொருள்கள்அதில் எவை எவை உள்ளன என்று பட்டியலிட்டு பெரியவிற்பனையைக் கண்டது.      ரீ அரேஞ்ஜ் (REARRANGE) அல்லது வேறு விதமாகஅமைத்துப் பார்த்தல்:  படைப்பாற்றலின் ஒருமுக்கியமான உத்தி எதை வேண்டுமானாலும் மாற்றுவிதமாக அமைத்துப் பார்த்தல் ஒரு கால்பந்துவிளையாட்டின் பயிற்சியாளர் தனது குழுவினரை 3,62,880விதமாக மாற்றி அமைக்க முடியும்! இப்போதுள்ளசூழ்நிலைக்கு எந்த வரிசை பொருந்தும்? பாகங்களைவேறு வரிசையில் அமைத்துப் பார்த்தால் பொருள்அனைவரையும் கவர்ந்து விற்பனையை அதிகரிக்குமா?இப்படி புது விதமாக யோசித்து தன் உத்தியை மாற்றிஅமைத்துக் கொள்வது நல்ல  பயனை விளைவிக்கும்.       ரிவர்ஸ் (REVERSE) அல்லது முறையைத் திருப்பிஅமைத்தல். இப்போது செய்யும் முறை ஒன்று தான்இதற்கு உள்ளதா? இதை ரிவர்ஸ் முறையில் முழுவதுமாகதிருப்பி அமைக்க முடியுமா?’இந்த உத்தியைப் பின்பற்றிபல நிறுவனங்கள் புதிய கருத்துக்களை உருவாக்கிபெரும் பயனை அடைந்திருக்கின்றன. சோடா பாட்டிலைகடையில் விற்பனை செய்வது போய் தேவைப்படும்பொழுது தேவையான அளவு மலிவான விலையில்வீட்டிலேயே சோடாவைத் தயாரிக்கும் சோடா மிக்ஸர்இப்படி உருவானது தான்! கொலம்பஸ் புதிய நாட்டைக்கண்டுபிடித்ததன் காரணம் அந்தக் காலத்திய கருத்துக்குஎதிராக நினைத்து அவர் பயணப்பட்டது தான்! ஆக புதிய கருத்துக்களை உருவாக்க ஸ்காம்பர்முறை வழி காட்டுகிறது. இந்த முறை இப்போது தெரிந்துவிட்டதால் இனி புதுமைக் கருத்துக்களைப் பொங்கிவழியச் செய்யலாம். கருத்துக்களைத் தொகுப்பதற்கும் அதை அடிக்கடிமதிப்பீடு செய்து நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கும்இண்டெக்ஸ் கார்ட் எனப்படும் சுட்டு வரிசை அட்டைகள்பெரிதும் பயன்படும். இண்டெக்ஸ் கார்டுகள் பொதுவாகஆறு அங்குலம் நீளம் நான்கு அங்குல அகலம் உள்ளஅட்டைகள். விளாடிமிர் நபோகோவ் பிரபலமான எழுத்தாளர், […]

  Share
 • வெற்றிக்கான கருத்துக்களைஉருவாக்குவது எப்படி? – 2

  வெற்றிக்கான கருத்துக்களைஉருவாக்குவது எப்படி? – 2 ச.நாகராஜன் “சூழ்ச்சித் திறத்துடன் கையாளுதல் என்பது படைப்பாற்றலின் கூடப் பிறந்த சகோதரன்போல!        .மைக்கேல் மிகால்கோ புதிய கருத்துக்களை உருவாக்குவது எப்படி? ஒருபொருள் பயன்பாட்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதை மேம்படுத்த ஒன்பது கேள்விகளைக்கேட்டால் போதும். அலெக்ஸ் ஆஸ்போர்ன் என்ற அமெரிக்கபத்திரிக்கையாளர் ப்ரெய்ன்ஸ்டார்மிங் (Brainstorming) என்றுஆங்கிலத்தில் கூறப்படும் குழு சிந்தனையை முதன்முதலில் உருவாக்கினார். எந்த ஒரு விஷயத்தையும் பற்றிமனதிற்குத் தோன்றிய கருத்துக்களை ஒரு குழுவில் யார்வேண்டுமானாலும் சொல்லலாம். இதில் நல்ல கருத்துகெட்ட கருத்து என்று ஒன்று இல்லை. சொல்லாமல்மனதிற்குள் அமுக்கி வைத்திருக்கும் கருத்தே கெட்டகருத்து. வெளி வந்த கருத்துக்கள் அனைத்துமே நல்லவைதான். அவற்றுள் சிறந்தனவற்றை எடுத்துப் பயன்பாட்டில்கொண்டு வந்தால் ஒரு நிறுவனம் முன்னேறும்; புதியபொருள் ஒன்று உருவாகும். ஆஸ்போர்னின் பல்வேறு கேள்விகளை எளிதில்ஞாபகப் படுத்திக்கொள்ளும் விதமாக பின்னால் வந்தராபர்ட் எபர்லி என்பவர் ஒரு சிறிய வார்த்தையைஉருவாக்கினார். படைப்பாற்றல் சம்பந்தமாக பலபுத்தகங்களை எழுதிய அவரது புதிய வார்த்தையேஅனைவரையும் உத்வேகப்படுத்திப் பல புதியகருத்துக்களைப் பெற வழி வகுத்தது. அந்த வார்த்தைதான் ஸ்காம்பர். ஆங்கிலத்தில்  SCAMPER என்றவார்த்தையை விரிவு படுத்தினால் வருவது SUBSTITIUTE, COMBINE, ADAPT, MAGNIFYஅல்லது MODIFY, PUT TO OTHER USES, ELIMINATE, REARRANGE அல்லது REVERSE ஆகிய ஏழுவார்த்தைகள்.(இரண்டு வார்த்தைகள் கூடி இருப்பதால்ஒன்பது என்றும் கொள்ளலாம்). இவற்றை விரிவாகப்பார்க்கலாம்:- ஸப்ஸ்டிடியூட் (SUBSTITIUE) : ஒரு பொருளுக்குப்பதிலாக மாற்றுப் பொருள் உருவாக்க முடியுமா?  பால்எஹ்லிச் என்ற விஞ்ஞானி ஒரு சோதனையை நடத்தஒவ்வொரு வண்ணமாக 500 வர்ணங்களை மாற்றிமாற்றிப் பார்த்தார். சோதனைச் சாலை எலிகளின்நாளங்களில் சரியான வர்ணப் பூச்சைப் பூசி தன்சோதனையை நடத்த பல்வேறு வர்ணச் சேர்க்கைகளைஉருவாக்கி இறுதியாக நல்ல ஒரு வர்ணத்தைஉருவாக்கினார். எலிகளின் நாளம் நன்கு தெரிய வந்தது,சோதனை வெற்றி பெற்றது! இந்த கொள்கையின் படி ஒரு இடம், ஒரு உலோகம்,ஒரு அணுகுமுறை ஒரு நபர், ஒரு நடைமுறை, ஒருஉணர்ச்சி, ஒரு கருத்து இவற்றில் எதைவேண்டுமென்றாலும் மாற்றிப் பார்க்கலாம். அப்படிமாற்றிப் பார்த்தால் புதியன உருவாகுமா? இப்படியோசிப்பது ஒரு முறை. அடுத்தது கம்பைன் (COMBINE) : ஒன்றோடு ஒன்றைசேர்த்தால் பயன் வருமா? க்ரிகார் மெண்டெல் என்றவிஞ்ஞானி ஜெனிடிக்ஸ் எனப்படும் மரபணுவை இந்தமுறையில் தான் கண்டுபிடித்தார். எதைச் சேர்க்கலாம்?எதற்காகச் சேர்க்கலாம்? எப்படிச் சேர்க்கலாம்?எவற்றுடன் சேர்க்கலாம்? சேர்ப்பனவற்றின் பயன்கள்எப்படி இருக்கும்? சேர்த்தால் கவர்ச்சி கூடுமா? பயன்கூடுமா? இப்படி யோசித்து பல கருத்துக்களைஉருவாக்குவது இன்னொரு  முறை. அடுத்தது அடாப்ட் (ADAPT): பொருந்தச் செய்தல்உத்தி என்பது இன்னொரு வழிமுறை. தாமஸ் ஆல்வாஎடிஸன்.  “மற்றவர்கள் எந்த விதமாக ஒன்றைவெற்றிகரமாகச் செய்கிறார்கள் என்பதை உற்றுக்கவனித்துக் கொண்டே இரு; அவற்றை உனக்கேற்பபொருத்திக் கொள்” என்று கூறுவார். உங்களதுபிரச்சினைகளுக்கு மற்றவர்களின் வழிகள் உதவுமாஎன்று பார்ப்பது சுலபமானது. வேறு யாருக்கு இதுபோன்ற நிலை அல்லது பிரச்சினை உள்ளது? அவர்கள்எப்படி இதை வெற்றிகரமாக்க் கையாண்டனர்.அவர்களிடமிருந்து அதை நகலெடுப்பது போல காபிசெய்யலாமா? இதர இடங்களில் பயன்படுத்தப்படும்எந்தக் கருத்து அல்லது வழிமுறை இப்போதுபயன்படுத்தப்படலாம் என்று கேள்விகள் கேட்டுகருத்துக்களை உருவாக்கிக் கொள்வது பொருந்திப்பார்க்கும் உத்தியாகும். அடுத்தது மாக்னிஃபை அல்லது மாடிஃபை: […]

  Share
 • வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி?

  வெற்றிக்கான கருத்துக்களை  உருவாக்குவது எப்படி? – 1               ச.நாகராஜன் “சாரமாகச் சொல்லப் போனால், மனித சரித்திரமே கருத்துக்களின் வரலாறு தான்!        ஹெச்.ஜி.வெல்ஸ் வாழ்க்கையில் வெற்றி பெறுவோரை நன்கு கவனித்துப் பார்த்தால் அவர்களின் […]

  Share

Cart

Our official Partner

முகநூல்

ட்விட்டர்

X